INTRO :
பிரதேச செயலகத்தினால் 2021க்குப் பிறகு பிறந்த குழந்தைகளுக்குப் புதிய பிறப்புச் சான்றிதழை வழங்கப்படுகின்றது என ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

சமூகவலைத்தளங்களில் “ #பெற்றோர்களின் கவனத்திற்கு!

#2021ஆம் ஆண்டு பிறந்த மற்றும் அதற்கு பின்னரான காலப்பகுதிகளில் பிறந்த அனைத்து குழந்தைகளதும் பிறப்புச் சான்றிதழ்கள் அனைத்தும் கீழுள்ள பிறப்புச் சன்றிதழுக்கு மாற்றப்படவேண்டுமென அரசாங்கத்தால் கட்டாய அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

#அதாவது 2021, 2022, 2023, 2024 இக்காலப் பகுதிவரை அரசாங்கத்தால் பழைய பிறப்புச் சான்றிதழே பாவணையிலிருந்த நிலையில், புதிதாக அரசாங்கத்தால் அறிமுகம் செய்துள்ள பிறப்புச் சான்றிதழ்களுக்கு தமது பிள்ளைகளின் பிறப்புச் சான்றிதழ்களை உடனடியாக மாற்றிக் கொள்ளுமாறு பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேற்படி படிவத்தை தங்களது பிரதேச செயலகங்களில் பெற்றுக் கொள்ள முடியுமென்பதோடு, புதிதாக மாற்றப்படும் எந்தவொரு சான்றிதழ்களுக்கும் எவ்வித கட்டணங்களும் அறவிடப்படமாட்டாது என்றும் அரசாங்கம் அறித்துள்ளது.

இனிவரும் காலங்களில் புதிதாக அச்சிடப்பட்டுள்ள பிறப்புச் சான்றிதழ்களைக் கொண்டே அரசாங்கப் பாடசாலைகளில் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதுடன், மேற்படி சான்றிதழ்களை நிரப்பும் போது ஆங்கிலம் மற்றும் சிங்களம் என இரு மொழிகளிலும் பிறப்புச் சான்றிதழ்கள் நிரப்பப்படும். அதேவேளை தங்களது பிள்ளைகளின் பழைய பிறப்புச் சான்றிதழ்களில் ஏதேனும் பிழைகள் இருப்பின் அவற்றையும் புதிதாக நிரப்பப்படும் சான்றிதழ்களில் திருத்திக் கொள்ள முடியுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம் மேற்படி சான்றிதழ்கள் நிரப்பப்படும் போது தேசிய அடையாள அட்டைக்கான இலக்கமுமம் அதே சான்றிதழில் பதிவிடப்பட்டு தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ளும் காலப் பகுதியில் பிறப்புச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள இலக்கமே தேசிய அடையாள அட்டை இலக்கமாகவும் பதியப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல்களுக்கு உங்கள் பிரதேச செயலாளர் அல்லது கிராம உத்தியோகத்தரை தொடர்பு கொள்ளவும்...

For more 👇👇👇

https://www.facebook.com/matheen.mansoor.9

#இதுபோன்ற தகவல்களை பெற எனது இலங்கை செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடருங்கள்.

#அனைவரும்_அறிய_அதிகம்_பகிருங்கள். “ என இம் மாதம் 12 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு (12.07.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

இது குறித்து ஆய்வினை மேற்கொண்டபோது, முதலில் நாம் எழுமாறாக தெரிவு செய்யப்பட்ட சில பிரதேச செயலகங்களில் புதிய பிறப்புச் சான்றிதழ்களைப் பெறுவது குறித்து கேட்டோம்.

அங்கு தேசிய அடையாள அட்டை இலக்கத்துடன் புதிய பிறப்புச் சான்றிதழ் வழங்கும் முறை அந்தச் செயலகங்களில் செய்யப்படுவதில்லை எனவும், குறித்த செயலகத்திற்கு புதிய பிறப்புச் சான்றிதழைத் தயாரிக்க விரும்புவதாகக் கூறி பல பெற்றோர்கள் வருகை தந்ததாகவும் எமக்கு அறிவித்தனர்.

2021க்குப் பிறகு பிறக்கும் குழந்தைகளுக்கு தேசிய அடையாள எண்ணுடன் புதிய பிறப்புச் சான்றிதழுடன் வழங்கப்படுகின்றமை குறித்து பிரதான ஊடகங்கள் செய்தி வெளியிட்டதா என்பதை நாங்கள் ஆய்வு செய்தோம்.

ஜூலை 23, 2020 அன்று வெளியிடப்பட்ட லங்காதீப இணையச் செய்திக் கட்டுரையில், பிறப்புச் சான்றிதழை 'தேசிய பிறப்புச் சான்றிதழ்' என அறிமுகப்படுத்தியதாகவும், இதுவரை குழந்தைகளை பாதித்த, 'பெற்றோர் திருமணமானவர்களா? ' என்பது நீக்கப்பட்டு, தேசிய மற்றும் சர்வதேச அளவில் சர்வதேச தரத்திற்கு ஏற்ப புதிய சான்றிதழ் வழங்கப்படும் என செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த தேசிய பிறப்புச் சான்றிதழை இரு மொழிகளிலும் வழங்க, பிறக்கும்போது கொடுக்கப்பட்ட அடையாள எண் மிகவும் பாதுகாப்பான காகிதத்தில் உள்ளிடப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, உடனடி பதில் குறியீடு, குறியீட்டு எண், வாட்டர்மார்க் மற்றும் ஹாலோகிராம் ஸ்டிக்கர் ஆகியவை இணைக்கப்படவுள்ளது என குறித்த செய்தி பிரதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Link

அத்துடன், 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி களுத்துறை மாவட்ட செயலகத்தில் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தலைமையில் E-மக்கள்தொகை பதிவேடு திட்டத்தின் கீழ் நாட்டில் முதல் டிஜிட்டல் பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. Link

இந்த பிறப்புச் சான்றிதழில், எதிர்காலத்தில் குழந்தைக்கு வழங்கப்பட வேண்டிய தேசிய அடையாள எண், ஆட்கள் பதிவுத் திணைக்களத்துடன் இணைந்து "எனது எண்" என உள்ளிடப்பட்டுள்ளது.

அதன்படி, குழந்தை பிறக்கும்போதே அடையாள எண் வழங்க முடியும் என்றும், அதன் மூலம் மக்கள் தொகை பதிவேடு கட்ட முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், களுத்துறை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தேசிய டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ் வழங்கும் வேலைத்திட்டம் ஏனைய மாவட்டங்களுக்கும் விரைவில் விரிவுபடுத்தப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, இங்குள்ள உண்மைகளை அறிய பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பதிவாளர் நாயகம் (சிவில்) திருமதி ஜி.ஏ.எல்.டி.கணேபொலவிடம் விசாரணை நடத்தினோம்.

இம்முறையானது தற்போது களுத்துறை மாவட்டத்தில் மாத்திரம் முன்னோடித் திட்டமாக அமுல்படுத்தப்படுகிறது, என்று எமக்கு தெரியப்படுத்தினார்.

Facebook | Archived Link

இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், பிரதேச செயலகத்தினால் 2021க்குப் பிறகு பிறந்த குழந்தைகளுக்குப் புதிய பிறப்புச் சான்றிதழ் வழங்குவதாக பரவும் தகவல் களுத்துறை மாவட்டத்தில் மாத்திரமே தற்போது வழங்கப்படுகின்றது என கண்டறியப்பட்டுள்ளது.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok

இது தொடர்பாக எமது சிங்கள பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

Conclusion: முடிவு


எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:பிரதேச செயலகம் 2021க்குப் பிறகு பிறந்த குழந்தைகளுக்குப் புதிய பிறப்புச் சான்றிதழை வழங்குகிறதா?

Fact Check By: S.G.Prabu

Result: Misleading