
INTRO:
பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவின் சமயம் பௌத்தம் என, பாராளுமன்ற இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் படத்துடனான பதிவொன்று பகிரப்பட்டு வருவதனை எம்மால் அவதானிக்க முடிந்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மை தொடர்பில் ஆராயும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim):
குறித்த பதிவில் பாராளுமன்ற இணையதளத்தில் புதிய எம்.பிக்களின் விபரங்களை நோக்கினால், டாக்டர் அர்ச்சுனாவின் சமயம் பௌத்தம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.சிலவேளை தமிழ் பௌத்தரா இருப்பாரோ தெரியவில்லை. என குறிப்பிட்டு 2024.11.21 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்த பல்வேறு பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்ததனையும் எம்மால் அவதானிக்க முடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
இது குறித்து உண்மைத் தன்மையை அறியும் நோக்கில் பாராளுமன்ற இணையத்தளத்தில் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவின் விபரங்கள் எவ்வாறு வழங்கப்பட்டுள்ளன என்பதனை முதலில் நாம் ஆய்வு செய்தோம்.
இதன்போது பாராளுமன்ற இணையத்தளத்தில் இராமநாதன் அர்ச்சுனாவின் விபரங்களில் அவரது சமயம் இந்து என குறிப்பிடப்பட்டிருந்ததனை எம்மால் அவதானிக்க முடிந்தது.
குறித்த விபரங்களை பார்வையிட
மேலும் குறித்த பதிவில் குறிப்பிடப்பட்ட விடயம் பாராளுமன்ற இணையத்தளத்தில் வெளியாகியிருந்தால் அது தொடர்பில் பிரதான ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியிருக்கும் எனவே அது தொடர்பில் நாம் மேற்கொண்ட ஆய்வின் போது பிரதான ஊடகங்களில் அவ்வாறான எந்தவித செய்திகளும் வெளியாகவில்லை என்பதனை உறுதி செய்துகொண்டோம்.
மேலும் இது குறித்த மேலதிக தெளிவினை பெற்றுக்கொள்ளும் நோக்கில் நாம் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை தொடர்பு கொள்ள முயற்சித்த சந்தர்ப்பங்களில் அவரை எம்மால் தொடர்புகொள்ள முடியவில்லை. எனினும் அவரை தொடர்பு கொண்டு இதற்கான தெளிவுபடுத்தல்களை பெற்றதன் பின்னர் அதனையும் நாம் இந்த ஆய்வில் இணைக்க காத்திருக்கின்றோம்.
மேலும் குறித்த பதிவில் குறிப்பிடப்பட்டிருந்த விடயம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதா என இராமநாதன் அர்ச்சுனாவின் suஉத்தியோகப்பூர்வ முகப்புத்தக பக்கதில் ஆய்வு செய்த போது 2024.11.21 ஆம் திகதி அவர் வெளியிட்ட நேரடி காணொளியில் எனது தாய் தந்தையர்கள் தமிழர்கள் என தெரிவிப்பதை எம்மால் அவதானிக்க முடிந்தது. இருப்பினும் குறித்த கணொளியில் அவரின் சமயம் தொடர்பில் அவர் எந்த விடயங்களையும் தெரிவித்திருக்கவில்லை.
அது தொடர்பான காணொளியை பார்வையிட
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion:முடிவு
எனவே மேற்குறிப்பிட்ட ஆதாரங்களை கொண்டு பார்க்கும் போது குறித்த சமூக ஊடக பதிவில் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவின் சமயம் பௌத்தம் என குறிப்பிட்டு வெளியிடப்பட்டிருந்த படமானது போலியாக உருவாக்கப்பட்ட ஒரு படம் என்பது தெளிவாகின்றது.
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா பௌத்த சமயத்தைச் சேர்ந்தவரா?
Fact Check By: Factcrescendo TeamResult: False
