
INTRO :
இலங்கை மத்திய வங்கியினால் 10000 ரூபா வெளியிடப்பட்டதாக ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

சமூகவலைத்தளங்களில் “ எப்படிடா நாடு நல்ல நிலமைக்கு வரும் 😢 “ என இம் மாதம் 25 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டு (25.11.2023) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
மேலும் உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
இது தொடர்பாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்ட போது,
இலங்கை மத்திய வங்கியினால் இவ்வாறான நாணயத்தாள் வெளியிடப்பட்டதாக எவ்விதமான செய்திகளும் வெளியாகி இருக்கவில்லை மேலும் இது குறித்து பிரதான ஊடகங்களிலும் எவ்விதமான செய்தியும் வெளியாகி இருக்கவில்லை.
தொடர்ந்து இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் நாம் மேற்கொண்ட ஆய்வின் போது இவ்விதமான நாணயத்தாள் வெளியாகியமை தொடர்பாக எவ்விதமான ஆதாரங்களும் எமக்கு கிடைக்கவில்லை.
இலங்கையில் நாணயத்தாள்களில் பயன்படுத்தப்படும் எண் குறியீடுகள் பயன்பாட்டில் உள்ள ஒவ்வொரு நாணயத்தின் மதிப்பையும் பொறுத்து மாறுபடும். அதாவது, புழக்கத்தில் உள்ள 20,50,100,500,1000 மற்றும் 5000 நாணயத்தாள்கள் முறையே W, V, U, T, S, R என்ற எழுத்துக்களுடன் அச்சிடப்படும். இங்கு 5000 ரூபாய் நாணயத்தாளில் பயன்படுத்தப்படும் ஆங்கில எழுத்தான R சமூக வலைதளங்கள் மூலம் பரிமாறப்படும் ரூபாய் 10,000 நாணயத்தாளிலும் இருப்பதைக் காணலாம்.
மேலும் பார்வையற்றோருக்கான நாணயத்தாள்களை அடையாளம் காணும் வகையில் சிறிய புள்ளிகளின் கோடு தற்போது பயன்பாட்டில் உள்ளது அதில் ரூ.5000 அச்சிடப்பட்டுள்ளதை எம்மால் காணக்கிடைத்தது.

தொடர்ந்து நாம் மேற்கொண்ட ஆய்வின் போது, இணையத்தில் பகிரப்பட்டிருந்த 5000 ரூபாய் நாணயத்தாளில் உள்ள குறியீடுகளை பயன்படுத்தி இந்த 10000 ரூபாய் நாணயத்தாள் வெளியிடப்பட்டுள்ளது எம்மால் கண்டறியப்பட்டது.

நாம் மேற்கொண்ட ஆய்வறிக்கையின் படி இலங்கை மத்திய வங்கியினால் 10000 ரூபா வெளியிடப்பட்டதாக இணையத்தில் பகிரப்பட்டு வருகின்ற நாணயத்தாள் போலியானது என்று கண்டறியப்பட்டுள்ளது.
எமது சிங்கள பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team