INTRO :
சர்வதேச அளவில் 100 டி20 போட்டிகளில் தோல்வியடைந்த முதல் அணி இலங்கை என ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

சமூகவலைத்தளங்களில் “ T20 வரலாற்றில் 100 போட்டிகளில் தோல்வியடைந்த முதல் அணியாக இலங்கை🇱🇰💔🏏

Congratulations we are Sri Lankan “ என கடந்த மாதம் 07ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு (07.03.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

நாம் முதலில் கிரிக்கெட் தரவுகளை ஆய்வு செய்தோம். espncricinfo இணையத்தளத்திற்கு அமைய இலங்கை அணி 100 போட்டிகள் தோல்வியடைந்துள்ளமை உறுதி செய்யப்பட்டது. அதில் இரு போட்டிகள் சூப்பர் ஓவரில் இலங்கை தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாம் மற்ற அணிகளை ஆய்வு செய்த போது, மேற்கிந்திய தீவுகள் அணியும் 100 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. அதில் ஒரு போட்டி சூப்பர் ஓவரில் தோல்வியடைந்துள்ளது.

192 போட்டிகளில் விளையாடியுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 100 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. அதற்கமைய தோல்வியடைந்த வீதம் 51.56% ஆகும்.

இதே நேரத்தில் இலங்கை அணியானது 189 போட்டிகளில் பங்கேற்றி 100 போட்டிகளில் தோல்வியினை தழுவியுள்ளது. அதற்கமைய தோல்வியடைந்த வீதம் 51.85% ஆகும்.

Espncricinfo Link

இரு அணிகளும் 100 போட்டிகள் தோல்வியடைந்திருந்த நிலையில் முதலில் எந்த அணி தனது 100 ஆவது போட்டியில் தோல்வியடைந்தது என நாம் ஆய்வினை மேற்கொண்டபோது, மேற்கிந்திய அணிகள் அவுஸ்ரேலியா இடையே கடந்த பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி நடந்த போட்டியில் தனது 100 ஆவது தோல்வியினை அடைந்துள்ளது. மேலும் இலங்கை அணி பங்களாதேஷ் அணியுடன் கடந்த மார்ச் மாதம் 6 ஆம் திகதி நடந்த போட்டியில் தனது 100 ஆவது தோல்வியினை அடைந்துள்ளது.

அதற்கமைய முதன் முதலாக சர்வதேச அளவில் 100 டி20 போட்டிகளில் தோல்வியடைந்த முதல் அணியாக மேற்கிந்திய தீவுகள் இடம்பெற்றுள்ளமை கண்டறியப்பட்டது.

இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், சர்வதேச டி20 போட்டிகளில் 100 முறை தோல்வியடைந்த முதல் அணி இலங்கை என பரவும் தகவல் தவறானது என்று கண்டறியப்பட்டுள்ளது

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok

Conclusion: முடிவு

எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:சர்வதேச அளவில் 100 டி20 போட்டிகளில் தோல்வியடைந்த முதல் அணி இலங்கையா ?

Fact Check By: S.G.Prabu

Result: MISLEADING