INTRO :
வருகின்ற ஏப்ரல் 8 ஆம் திகதி நிகழுவுள்ள முழு சூரிய கிரகணத்தினை இலங்கை மக்கள் காணமுடியும்  என ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

சமூகவலைத்தளங்களில் ” 2024/04/08 ம் திகதி பூரண சூரிய கிரகணம் ஏற்படவுள்ளதுடன் அன்றைய தினம் பகல் காலம் இராக் காலத்தைப் போன்று இருளாக தென்படும். சூரிய ஔியைக் காணமுடியாது. வெப்பமும் அதி குறைவாகக் காணப்படும்.

இது போன்ற சூரிய கிரகணம் 375 வருடங்களுக்குப் பின்னரே ஏற்படும்! “ என கடந்த மாதம் 30 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு (30.03.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

வருகின்ற திங்கட்கிழமை ஏப்ரல் 8 ஆம் திகதி, வட அமெரிக்கா முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் ஒரு அரிய முழு சூரிய கிரகணத்தைக் காண தயாராகி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை காணக்கிடைத்தது.

சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் வருகின்ற போது நிலா சூரிய ஒளியை முற்றிலும் மறைக்கும் வகையில் இருக்கும். ​​இதன்போது, சந்திரன் முழு கிரகணத்தை உருவாக்கி, சூரியனின் முழு மேற்பரப்பையும் மறைக்கும். சந்திரனின் ஒளி பூமியின் மேற்பரப்பில் பயணிக்கும் சிறிய பகுதி முற்றிலும் இருட்டாகிறது.

இந்த நிகழ்வின் போது பூமியில் வசிக்கும் மக்கள் கிரகணத்தை ஓரளவு பார்க்க முடியும். இம்முறை மெக்ஸிகோவின் பசிபிக் கடற்கரை நகரமான மசாட்லானில் (Mazatlan) இருந்து கனடாவின் நியூஃபவுண்ட்லேண்டின் கிழக்கு கடற்கரை வரை உள்ள மக்கள் இதனை காண வாய்ப்புள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எனினும் குறித்த சூரிய கிரகணத்தினை இலங்கையில் காண முடியாது.

ஏப்ரல் 8 ஆம் திகதி நிகழவுள்ள முழு சூரிய கிரகணத்தை இலங்கை மக்களால் காண முடியுமா?

Arthur C. Clarke Institute for Modern Technology (ACCIMT )· வானியல் திணைக்களத்தின் இந்திக மெதகங்கொடவிடம் நாம் மேற்கொண்ட விசாரணையில், ஏப்ரல் 08 ஆம் திகதி நிகழவுள்ள முழு சூரிய கிரகணம் இலங்கைக்கு தெரியாது, அமெரிக்கா மற்றும் வட அமெரிக்காவிற்கு மட்டுமே தெரியும் என்று கூறினார்.

சூரிய கிரகணத்தை இலங்கை வாழ் மக்கள் எப்போது காண முடியும்?

ஆகஸ்ட் 02, 2027 - ஒரு பகுதி சூரிய கிரகணம்

ஜூலை 22, 2028 - ஒரு பகுதி சூரிய கிரகணம்

மே 21, 2031 - ஒரு வளைய சூரிய கிரகணம்

ஏப்ரல் 11, 2070 - முழு சூரிய கிரகணம்,

இது தொடர்பாக மேலதிக தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்

375 வருடங்களுக்கு பின்னரே இது போன்ற சூரிய கிரகணம் நிகழுமா ?

Carnegie Institution for Science இல் Deputy for Science, Observatories ஆக பணிபுரியும் வானியல் நிபுணரான பேராசிரியர் ஜான் முல்சே CNN ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியின் போது சில சிறப்பு நிகழ்வுகளைத் தவிர, 375 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் ஒரே இடத்தில் முழு சூரிய கிரகணம் நிகழ்வு இடம்பெறுவதை காணமுடியும் என தெரிவித்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு 2017 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் சில பகுதிகள் முழு சூரிய கிரகணத்தைக் காண கூடியதாக இருந்தது, ஆயினும் இம்முறை நிகழும் முழு சூரிய கிரகணத்தைக் காணும் பகுதிகளும் மாறிவிட்டன. ஆனால் 2017 இல் சூரிய கிரகணத்தினை பார்வையிட்ட ஒரு சிறிய பகுதி இந்த முறையும் அதே வாய்ப்பைக் காணும். இது தொடர்பான காணொளி கீழே இணைக்கப்பட்டுள்ளது.

நிகழவுள்ள முழு சூரியக்கிரணத்தினை அனைத்து நாடுகளுக்கும் காணக்கூடிய வாய்ப்பினை உருவாக்கும் விதமாக நாசா வழங்கும் நேரலை ஒளிபரப்பை இங்கு காணலாம்.  

இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், நிகழவுள்ள முழு சூரிய கிரகணத்தினை இலங்கை மக்களுக்கு காண முடியும் என பரவும் தகவல் தவறானது என்று கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பாக எமது சிங்கள பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok

Conclusion: முடிவு

எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:நிகழவுள்ள முழு சூரிய கிரகணத்தினை இலங்கை மக்களும் காண முடியுமா?

Fact Check By: S.G.Prabu

Result: Partly False