இந்திய பிரதமர் மோடி, எப்ஸ்டீனுடன் இருக்கும் புகைப்படம் உண்மையா?

False சர்வதேசம் | International

2026 ஜனவரி 30ஆம் திகதியன்று அமெரிக்க நீதித்துறை (DOJ) “எப்ஸ்டீன் கோப்புகள்” (Epstein files) என அழைக்கப்படும், ஜெஃப்ரீ எப்ஸ்டீனைச் சேர்ந்த மில்லியன் கணக்கான ஆவணங்களை வெளியிட்டதைத் தொடர்ந்து, பல தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் தற்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஒரு பெண், ஜெஃப்ரீ எப்ஸ்டீனுடன் இணைந்து எடுத்துக் கொண்டதாக தெரிவிக்கப்படும் புகைப்படமொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

எனவே இது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook | Archived Link

Epstein files என குறிப்பிடப்பட்டு குறித்த புகைப்படமானது 2026.02.09 ஆம் திகதி பதிவேற்றப்பட்டுள்ளது.

மேலும் பலரும் சமூக ஊடகங்களில் இதனை பகிர்ந்திருந்தமையை காணமுடிந்தது.

X | Archived Link

Fact Check (உண்மை அறிவோம்)

அமெரிக்காவில் பெரும் பரபரப்பைக் ஏற்படுத்திய எப்ஸ்டீன் கோப்புகள் விவகாரத்தில் பிரதமர் மோடியின் பெயரும் இடம்பெற்றிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், மத்திய அரசு மறுப்பு தெரிவித்திருந்தது.

மேலும் அது தொடர்பில் இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. Link | Link

இருப்பினும் அந்த செய்திகளை ஆராய்ந்த போது குறித்த புகைப்படம் தொடர்பான எந்த தகவல்களும் அவற்றில் வெளியாகியிருக்கவில்லை என்பதனை அறிய முடிந்தது.

எனவே நாம் குறித்த புகைப்படத்தினை உன்னிப்பாக அவதானித்த போது, அந்த புகைப்படத்தில் பிரதமர் மோடியின் பின்னால் உள்ள பின்னணி ஒரு நூலகத்தை ஒத்திருக்கிறது, அதே நேரத்தில் எப்ஸ்டீன் இடம்பெறும் பக்கம்  மரங்களுடன் கூடிய ஒரு பின்னணி தெரிகிறது, என இது ஒரு செயற்கையாக இணைக்கப்பட்ட பின்னணியுடன் கூடிய புகைப்படம் என்பதனை அவதானிக்க முடிகின்றது.

ஆகவே நாம் குறித்த புகைப்படத்தினை AI Detective Tool ஐ பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்ட போது அது AI தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்ட புகைப்படம் என்பது உறுதியானது.

ஜெஃப்ரி எப்ஸ்டீன்

ஜெஃப்ரி எப்ஸ்டீன் (1953–2019) அமெரிக்க நிதியாளர் மற்றும் செல்வந்தர்களுடன் நெருங்கிய தொடர்புகள் வைத்திருந்தவர். பின்னர், சிறுமிகள் மற்றும் இளம் பெண்களை பாலியல் முறைகேடுகளுக்கு உட்படுத்தியதாக கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்தன.

2008 ஆம் ஆண்டு அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டு சிறைத் தண்டனை பெற்றார். 2019 ஆம் ஆண்டு மீண்டும் மனிதக் கடத்தல் மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டார். அதே ஆண்டில் நியூயோர்க் நகரில் உள்ள சிறையில் மரணமடைந்தார். அதிகாரப்பூர்வமாக அது தற்கொலை என அறிவிக்கப்பட்டாலும், அவரது மரணம் பல சர்ச்சைகளையும் சதி கோரிக்கைகளையும் எழுப்பியது.

இந்த வழக்கு உலகளவில் பெரிய கவனம் பெற்றதுடன், அரசியல் மற்றும் தொழில்துறை முக்கிய நபர்களுடனான அவரது தொடர்புகள் பற்றியும் பல விசாரணைகள் நடைபெற்றன.

எப்ஸ்டீன் கோப்புகள்

Jeffrey Epstein தொடர்பான வழக்குகளில் சேகரிக்கப்பட்ட நீதிமன்ற ஆவணங்கள், விசாரணை பதிவுகள், சாட்சியங்கள், தொடர்பு பதிவுகள் மற்றும் தொடர்புடைய பட்டியல்கள் ஆகியவை பொதுவாக “Epstein Files” என அழைக்கப்படுகின்றன.

இந்த ஆவணங்களில் எப்ஸ்டீனின் சமூக, அரசியல் மற்றும் வணிகத் தொடர்புகள் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. சில ஆவணங்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் வெளியிடப்பட்டதால், உலகளவில் பெரும் கவனம் பெற்றன.

இவ்வகை ஆவணங்கள் எப்ஸ்டீனுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் மற்றும் மனிதக் கடத்தல் வழக்குகளின் பின்னணியை வெளிச்சமிட்டதுடன், அவரது தொடர்பு வலையமைப்பு குறித்த சர்ச்சைகளையும் தூண்டின.

Also Read: எப்ஸ்டீன், கொவிட் தொற்றுநோய் ஒத்திகை தொடர்பில் பில் கேட்ஸுடன் உண்மையில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளாரா?

ஜெஃப்ரி எப்ஸ்டீன் உயிருடன் இருப்பதாக பகிரப்படும் புகைப்படம் உண்மையா ? 

எங்களது  சமூகவலைதள  பக்கங்களை  பின்தொடர….


Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  |TikTok| Youtube

Conclusion: முடிவு

எனவே எமது ஆய்வுகளின் அடிப்படையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜெஃப்ரீ எப்ஸ்டீனுடன் இருக்கும் புகைப்படம் தவறானது என்பதுடன் அது செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்டமையும் கண்டறியப்பட்டது.

எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம். 

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Avatar

Title:இந்திய பிரதமர் மோடி, எப்ஸ்டீனுடன் இருக்கும் புகைப்படம் உண்மையா?

Fact Check By: Suji Shabeedhran  

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *