புர்ஜ் கலீஃபா தாக்கப்பட்டதாக பகிரப்படும் காணொளி உண்மையா?

False சர்வதேசம் | International

அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையில் நிலவும் போர் பதற்றம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் மத்திய கிழக்கு நாடுகள் மீதும் தொடர் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

அதனை மையமாகக் கொண்டு பல்வேறு தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுவரும் நிலையில்,துபாயில் அமைந்துள்ள உலகின்  மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபா மீது 1,800 ஏவுகணைகள் ஏவப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது.

எனவே அது குறித்த உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook | Archived Link

உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபா மீது 1,800 ஏவுகணைகள் ஏவப்பட்டதாகக் கூறப்படும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒவ்வொரு ஏவுகணையும் அதன் இலக்கைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது, இதனால் நிலைமை மிகவும் மோசமாகியுள்ளது. சம்பவம், சாத்தியமான காரணங்கள் மற்றும் சர்வதேச எதிர்வினை பற்றி மேலும் அறிய வீடியோவைப் பாருங்கள் என தெரிவிக்கபட்டு 2026.03.04 இன்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் பலரும் சமூக ஊடகங்களில் இதனை பகிர்ந்திருந்தமையையும் காணமுடிந்தது.

FB

Fact Check (உண்மை அறிவோம்)

புர்ஜ் கலீஃபா மீது 1,800 ஏவுகணைகள் ஏவப்பட்டிருந்தால் அது தொடர்பில் சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கும் எனினும் நாம் மேற்கொண்ட ஆய்வில் அவ்வாறான எந்த செய்திகளும் வெளியாகவில்லை என்பது உறுதியானது.

ஆகவே குறித்த காணொயியை நன்கு அவதானிக்கும் போது அதில் காணப்பட்ட செயற்கை தன்மையினை தொடர்ந்து நாம் குறித்த காணொளியை AI Detective Tool ஐ பயன்படுத்தி ஆய்வு செய்த போது குறித்த காணொளியானது  செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.

மேலும் நாம் மேற்கொண்ட ஆய்வுகளில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய அதிரடித் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரான் வளைகுடா பிராந்தியத்தின் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது.

இந்த மோதல்களின் விளைவாக, கடந்த 2026.03.01 ஆம் திகதி துபாய் சர்வதேச விமான நிலையம் மற்றும் புகழ்பெற்ற ‘புர்ஜ் அல் அரபு’ ஹோட்டல் உள்ளிட்ட முக்கிய இடங்கள் சேதமடைந்துள்ளன.

வான்பரப்பில் வைத்து இடைமறிக்கப்பட்ட ட்ரோன் ஒன்றின் சிதைவுகள் விழுந்ததில், ‘புர்ஜ் அல் அரபு’ ஹோட்டலின் வெளிப்பகுதியில் சிறிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தினர் உடனடியாகச் செயற்பட்டு தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர் எனவும் இதனால“ எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எங்களது  சமூகவலைதள  பக்கங்களை  பின்தொடர….

Facebook Page I Twitter Page IInstagramGoogle News Channel  |TikTok| Youtube


Conclusion: முடிவு

எனவே எமது ஆய்வுகளின் அடிப்படையில் புர்ஜ் கலீஃபா மீது 1,800 ஏவுகணைகள் ஏவப்பட்டதாக பகிரப்படும் காணொளி போலியானது என்பதுடன் அது செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.

எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம். 

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Result Stamp

Title: புர்ஜ் கலீஃபா தாக்கப்பட்டதாக பகிரப்படும் காணொளி உண்மையா?

Fact Check By: Suji Shabeedhran

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *