INTRO:
இலங்கையில் நடந்த மாவீரர் நினைவேந்தலில் எடுக்கப்பட்ட புகைப்படம் என சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

சமூக வலைத்தளங்களில் “பொக்கிஷமான சகோதரத்துவத்தின் பந்தம் .” என சிங்களத்தின் பதிவிட்டு இம் மாதம் 24 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு (24.11.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
பலரும் இது இலங்கையில் நடந்த சம்பவம் என நினைத்து பகிர்ந்து வருகின்றமை காணக்கிடைத்தது.
இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
இது குறித்த புகைப்படத்தினை கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி மேற்கொண்ட ஆய்வறிக்கையின் போது,இது கடந்த மே மாதம் 20 ஆம் திகதி அம்மு ரஞ்சித்குமார் என்ற டிக்டொக் கணக்கில் முதல் முதலில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

குறித்த காணொளி தற்போது அவரின் டிக்டொக் கணக்கில் இருந்து நீக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.மேலும், இவர் பிரான்ஸ் நாட்டினை சேர்ந்தவர் என்பது எமது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது.

இது இலங்கையில் யாழ் பல்கலைகழகத்தில் இடம்பெற்ற நிகழ்வு என தெரிவிக்கப்பட்டிருந்தது. நாம் அவரின் டிக்டொக் கணக்கில் மேற்கொண்ட ஆய்வின் போது, கடந்த மே 19 (19.05.2024) ஆம் திகதி பதிவேற்றம் செய்திருந்த வீடியோவில் சில காட்சிகளை நாம் அவதானித்த போது, வைரலாகும் புகைப்படத்தில் பின்னால் இருக்கும் நீல நிற உடையணிந்த பெண்களும் குறித்த காணொளியில் காணக்கிடைக்கின்றது.

அதற்கமைய குறித்த யுவதி பிரான்ஸில் நடந்த முள்ளிக்கால்வாய் நினைவேந்தலின் போது, எடுக்கப்பட்ட புகைப்படம் என கண்டறியப்பட்டது.
இந்த கொண்டாட்டம் மே 18 ஆம் திகதி பிரான்ஸில், இல்-டி-பிரான்ஸ் (Paris, Île-de-France) என்ற இடத்தில் நடைபெற்றது, மேலும் கூகுள் மேப் மற்றும் சோதனை மூலம் யுவதி எடுத்த புகைப்படங்கள் பிரான்சில் உறுதிப்படுத்தப்பட்டது.
குறித்த புகைப்படம் எடுக்கப்பட்டிருந்த பகுதியில் இருக்கும் மரங்கள் மற்றும் சூழலினை அவதானித்த போது, இது இலங்கை நாட்டில் எடுத்த புகைப்படம் இல்லை என்பது உறுதியானது.
இதனை உறுதி செய்ய நாம் சில Keywords இனை பயன்படுத்தி ஆய்வு செய்தபோது, கடந்த மே மாதம் 18 ஆம் திகதி பிரான்ஸில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடைப்பெற்றிருந்தது. Link
குறித்த நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை நாம் ஆய்வு செய்தபோது, இணையத்தில் வைரலாகியுள்ள புகைப்படத்தில் இருக்கும் இடத்தினை ஒத்துள்ளமை காணமுடிந்தது.
இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், இலங்கையில் நடந்த மாவீரர் நினைவேந்தலில் எடுக்கப்பட்ட புகைப்படம் என பகிரப்படும் தகவல் தவறானது என்று கண்டறியப்பட்டது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.