கடந்த 2025.06.12 ஆம் திகதி அஹமதாபாத்தில் இடம்பெற்ற விமான விபத்து தொடர்பில் பல்வேறு காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் நிலையில், தற்போது அந்த விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட நேரடி காட்சி என தெரிவிக்கப்பட்டு ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
எனவே இது தொடர்பில் உண்மை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim)
Air India Flight அகமதாபாத் விமான விபத்து லைவ் வீடியோ கிடைத்தது, அந்த கடைசி நொடி என தெரிவிக்கப்பட்டு குறித்த காணொளி பகிரப்பட்டிருந்தது.
மேலும் இதன் உண்மை அறியாத பலரும் சமூக ஊடகங்களில் இதனை பகிர்ந்திருந்தனர்.
Fact Check (உண்மை அறிவோம்)
அஹமதாபாத் விமான விபத்தின் போது எடுக்கப்பட்ட காணொளி என சர்வதேச ஊடகங்களில் வெளியான காணொளி தொடர்பில் நாம் முதலில் அவதானத்தை செலுத்தினோம். இதன்போது NDTV இன் Youtube தளத்தில் குறித்த விமான விபத்துடன் தொடர்புடைய CCTV காணொளியொன்று வெளியிடப்பட்டிருந்தது எனினும் அந்த காணொளியானது சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளி அல்ல என்பதனை அறியமுடிந்தது.
மேலும் நாம் தொடர்ந்து ஆய்வினை மேற்கொண்டபோது பிபிசி இணையதளத்தில் இந்த விமானமானது விழுந்து விபத்திற்குள்ளாகும் சந்தர்ப்பத்தில் அந்த பகுதியில் உள்ள வீடொன்றின் மேல் தளத்தில் நின்றுகொண்டிருந்த இளைஞரொருவரினால் எடுக்கப்பட்ட காணொளி வெளியாகியிருந்தது. மேலும் இந்த காணொளியானது பெரும்பாலான சர்வதேச ஊடகங்களில் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
எனினும் இந்த காணொளிகளுக்கும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளிக்கும் பாரிய வேறுபாடுகள் காணப்பட்டதனையும் எம்மால் அவதானிக்க முடிந்தது.
மேலும் குறித்த காணொளியில் இது செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒன்று என்ற விதத்தில் பலர் கமென்ட் செய்திருந்தமையையும் காணக்கூடியதாக இருந்தது.
ஆகவே இந்த காணொளியை நாம் AI Detective Tool ஐ பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்ட போது, இந்த காணொளி AI தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்டது என்பது உறுதியானது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் அஹமதாபாத் விமான விபத்தின் கடைசி நொடியில் எடுக்கப்பட்ட நேரடி காணொளி என தெரிவித்து பகிரப்பட்ட காணொளியானது செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்ட ஒன்று என்பது கண்டறியப்பட்டது.
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:அஹமதாபாத் விமான விபத்தின் கடைசி நொடியில் எடுக்கப்பட்ட காணொளியா இது?
Written By: Suji ShabeedhranResult: False
