
விக்கிரவாண்டி அருகே நேமூரில் கடந்த 14 ஆம் திகதி (14.10.2019) அன்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்று பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ராஜீவ் காந்தியை தாங்கள் தான் கொலை செய்ததாக தெரிவித்தார்.
அவரது இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ராஜீவ் கொலையில் தொடர்பு இல்லை – விடுதலைப் புலிகள் பெயரில் லதன் சுந்தரலிங்கம், குருபரன்சாமி அறிக்கை வெளியானது என செய்தி பரவுகின்றது.
குறித்த செய்தி தொடர்பிலான உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் ஆய்வினை மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

ஈழத் தமிழா என்ற பேஸ்புக் கணக்கில் “ராஜிவ் படுகொலைக்கும் எமக்கும் தொடர்பில்லை அறிக்கை!” என்று நேற்று (16.10.2019) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
குறித்த பதிவோடு Eelam News செய்தி இணையத்தளத்தின் லிங்கினை பதிவேற்றம் செய்துள்ளனர்.

மேலும் லங்கா ஸ்ரீ இணையத்தளமும் குறித்த செய்தியினை பதிவு செய்துள்ளமை காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த பதிப்பில் இருந்த செய்தி லிங்கின் ஊடாக Eelam News இணையத்தளத்தில் வெளியாகியிருந்த செய்தியில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஊடக அறிக்கை புகைப்படம் ஒன்றை நாம் ஆய்வு செய்ய Google Reverse Image Tool ஐ பயன்படுத்தி தேடிய வேளையில்,

குறித்த செய்தி அறிக்கை புகைப்படமானது, 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 1 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது. செய்தி அறிக்கை
மேலும், கடந்த வருடம் விடுதலை புலிகளின் பெயரில் வெளியான அறிக்கையும், நேற்று (17.10.2019) ஒப்பிட்டு பார்த்தவேளையில், இரண்டும் அறிக்கையும் ஒரே அறிக்கை என்பதை உறுதி செய்து கொள்ள கூடியதாக அமைந்திருந்தது.


மூன்றாவது பந்தியில் தொடக்கத்திலிருந்த 1983 இல் என்பதை 19 இல் என்று மாத்தியுள்ளனர்.

மேலும் குறித்த புகைப்படத்தின் Comment இல் shehan gunasekara lanka daily செய்தி லிங்கையும் பதிவேற்றம் செய்துள்ளார்.
2018 ஆம் ஆண்டு குறித்த அறிக்கை தொடர்பில் வெளியான செய்திகள்,
The Report News Link | Archived Link |
Virakesari News Link | Archived Link |
Tamilwin News Link | Archived Link |
இலங்கையில் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிக்கட்ட போரில், விடுதலைப் புலிகள் அமைப்பு முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டதாக, இலங்கை அரசு அறிவித்திருந்தது.
குறித்த போரில் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன் மரணமடைந்ததோடு, குறித்த இயக்கத்தில் இருந்த முக்கிய நபர்களும் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

முடிவு
மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அடிப்படையில் சீமான், ராஜீவ் காந்தியை தொடர்பாக பேசிய சர்சை பேச்சு தொடர்பில் விடுதலை புலிகள் பெயரிலில் வெளியானதாக கூறப்படும் அறிக்கை 2018 ஆம் ஆண்டு வெளியான அறிக்கையாகும். பழைய அறிக்கையை புதிதுபோல பரப்பியுள்ளனர் என தெளிவாகிறது.

Title:சீமான் பேச்சு தொடர்பாக விடுதலைப்புலிகள் அறிக்கை வெளியிட்டனரா?
Fact Check By: Nelson ManiResult: False
