
அதானி நிறுவனத்துடன் கடந்த அரசாங்கம் ஒப்பந்தம் செய்துகொண்ட மன்னார் மற்றும் பூநகரி காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்களை நிர்மாணிக்கும் வேலைத்திட்டம் புதிய அரசாங்கத்தினால் ரத்து செய்யப்பட்டுள்ளதான செய்திகள் சமூக ஊடகங்கள் உட்பட பிரதான ஊடகங்கள் வாயிலாக வெளியாகிய நிலையில் அரசு அவ்வாறான தீர்மானமொன்றை எடுத்துள்ளதா? என்பது தொடர்பில் நாம் ஆராய்ந்தோம்.
தகவலின் விவரம் (What is the claim)
புதிய அரசாங்கத்தினால் அதானி காற்றாலை மின்னுற்பத்தி வேலைத்திட்டம் ரத்தாகியுள்ளது என்பதை குறிப்பிட்டு சமூக ஊடகத்தில் இவ்வாறு செய்தி வெளியாகியிருந்தது.
சமூக ஊடகங்கள் உட்பட நாட்டின் செய்தி இணையத்தளங்களில் கடந்த அரசாங்கம் அதானி கிரீன் ஏஜன்சி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள மன்னார் மற்றும் பூநகரி காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்களை நிர்மாணிக்கும் வேலைத்திட்டம் புதிய அரசாங்கத்தினால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த செய்தியை இங்கு பார்வையிடலாம்.
நாட்டின் பிரதான செய்தித்தாள்களில் ஒன்றான திவயின பத்திரிகையில் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கு புதிய அரசின் அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதான செய்தியொன்றை இவ்வாறு வெளியிட்டிருந்தது. link
இதற்கமைய இந்த சமூக ஊடக பதிவுகளில் காண்பிக்கப்படும் வகையிலும் பிரதான ஊடக அறிக்கையிடலில் குறிப்பிடப்படும் வகையிலும் அதானி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள காற்றாலை மின்னுற்பத்தி வேலைத்திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதா இல்லையா என்பது குறித்து நாம் விடயங்களை ஆய்வு செய்தோம்.
Fact Check (உண்மை அறிவோம்)
சூழலியலாளர் ரொஹான் பெதியாகொட அமைச்சரவை பத்திரயொன்றை குறிப்பிட்டு அதானி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள மன்னார் காற்றாலை மின்னுற்பத்தி வேலைத்திட்டம் புதிய அரசாங்கத்தின் தலைமையில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்ததையடுத்து இது தொடர்பில் பலர் கவனம் செலுத்தினர்.
இதற்கமைய குறித்த அமைச்சரவை பத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு நாட்டின் சில ஊடகங்களில் அதானி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள மன்னார் காற்றாலை மின்னுற்பத்தி வேலைத்திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டன.
குறித்த அமைச்சரவை பத்திரம் கீழே தரப்பட்டுள்ளது,
இந்த புகைப்படம் தெளிவாக இல்லாததால் செய்திக்கு காரணமான அமைச்சரவை பத்திரத்தின் முதல் பக்கத்தின் ரோம இலக்கம் I கீழ் குறிப்பிடப்பட்டுள்ள விடயத்தை இவ்வாறு தருகின்றோம்.
- to revoke the Cabinet decision dated 2024-05-05 on the Memorandum dated 2024-05-03 numbered as CP No.24/0850/621/047, submitted by the then Minister of power and Energy on “Proposal Adani Green Energy SL Limited for the development of 484MW e Wind Power Plants in Mannar and Fooneryn
அவ்வாறாயின்,
மன்னார் மற்றும் பூநகரியில் 484 மெகாவோட் காற்றாலையை அபிவிருத்தி செய்வதற்கென அதானி கிரீன் எனர்ஜீ எஸ்எல் லிமிட்டட்டின் யோசனை தொடர்பில் அப்போதைய எரிசக்தி அமைச்சர் முன்வைத்த 2024-05-03 திகதியில் CP இலக்கம் 24/0850/621/047 பிரகடனம் தொடர்பில் 2024-05-05 தினத்தில் அமைச்சரவை தீர்மானத்தை ரத்து செய்தல்.
இதற்கமைய அமைச்சரவை பத்திரத்தில் குறிப்பிடப்படும் வகையில் முன்னாள் எரிசக்தி அமைச்சரான கஞ்சன விஜேசேகரவினால் 2024.05.03ம் தினத்தில் மன்னார் மற்றும் பூநகரி காற்றாலை மின்னுற்பத்தி அபிவிருத்திக்கென அதானி கிரீன் ஏஜன்சி நிறுவனத்தின் யோசனையொன்று அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது. குறித்த யோசனைக்கென 2024-05-05 தினத்தில் கடந்த அரசின் அமைச்சரவையின் அனுமதி கிடைக்கப்பெற்றது. இதற்கமைய புதிய அரசாங்கம் அமைச்சரவையினால் கடந்த அரசின் அமைச்சரவை அனுதி வழங்கிய இந்த யோசனையை ரத்து செய்துள்ளது.
அவ்வாறாயின் புதிய அரசின் அமைச்சரவையினால் ரத்து செய்யப்பட்ட கடந்த அரசின் அமைச்சரவை தீர்மானம் என்ன?
2024-05-05 தினத்தில் இந்தியாவின் இனால் மன்னார் மற்றும் பூநகரி காற்றாலை மின்னுற்பத்தி நிர்மாண யோசனை வேலைத்திட்டத்தின் கீழ் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்னெ ஒரு மணித்தியால கிலோவோட்டிற்கென 8.26 சதம் டொலர் பெறுமதியின் இறுதிக் கட்டணமாக ஏற்றுக்கொள்வதற்கும், 20 வருடகாலத்திற்கென M/s Adani Green Energy SL Limited க்கு மின்சாரத்தை கொள்வனவு செய்யும் விலைமனுவை பூர்த்தி செய்வதற்கும் முன்னாள் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது. குறித்த அமைச்சரவை தீர்மானம் அமைச்சரவை உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இவ்வாறு பிரசுரிக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய இலங்கை இந்திய அதானி கிரீன் ஏஜன்சி நிறுவனத்திடமிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்யும் கொடுக்கல் வாங்கலை மாத்திரமே புதிய அரசு அமைச்சரவை ஊடாக ரத்து செய்துள்ளது என்பது தெளிவாகின்றது. அவ்வாறாயின், இங்கு அதானி கிரீன் ஏஜன்சி நிறுவனத்துடன் மன்னார் மற்றும் பூநகரி காற்றாலை மின்னுற்பத்தி நிர்மாண வேலைத்திட்டம் ரத்து செய்யப்படவில்லை.
இலங்கை, இந்தியாவின் அதானி நிறுவனத்திடமிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்யும் கொடுக்கல் வாங்கலை ரத்து செய்வதன் சரியான செய்தியை இந்திய ஊடகங்கள் இவ்வாறு அறிக்கையிட்டிருந்தது. இதற்கமைய இந்திய ஊடகம், இலங்கை அரசு மின்சாரத்தை கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ள போதிலும் வேலைத்திட்டத்தை ரத்து செய்யவில்லையென குறிப்பிட்டிருந்தது. இலங்கை, இந்தியாவின் அதானி கிரீன் ஏஜன்சி நிறுவனத்திடமிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்யும் கொடுக்கல் வாங்கலை ரத்து செய்வதற்கான அமைச்சரவை பத்திரத்தின் இரண்டாம் பக்த்தின் ரோம இலக்கம் II ன் கீழ், முழு வேலைத்திட்டத்தையும் மீள் பரிசீலனை செய்ய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதென குறிப்பிடப்பட்டுள்ளது.
அதானி நிறுவனம்,
கடந்த அரசாங்கம் அதானி கிரீன் ஏஜன்சி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்த காற்றாலை மின்னுற்பத்தி வேலைத்திட்டத்தை ரத்து செய்துள்ள செய்தி வெளியானதும் அதானி நிறுவனத்தினால் அறிவித்தலொன்று வெளியிடப்பட்டிருந்தது. காற்றாலை மின்னுற்பத்தி வேலைத்திட்டத்தை இலங்கை அரசு ரத்து செய்துள்ளதாக வெளியாகும் செய்தியை நிராகரிப்பதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இலங்கை அமைச்சரவையினால் 2024 மே மாதம் அங்கீகரிக்கப்பட்ட கட்டணம் 2025 ஜனவரி 2ம் திகதிக்கு மீண்டும் மதிப்பீடு செய்ய எடுத்த தீர்மானம் புதிய அரசினால் மேற்கொள்ளப்பட்ட மறு பரிசீலனை செயற்பாடு எனவும், குறித்த மீள் பரிசீலனை நாட்டின் புதுப்பிக்கப்பட்ட எரிசக்தி கொள்கைகள் மற்றும் முன்னுரிமைகளை நடைமுறைப்படுத்தலை உறுதிப்படுத்துவதை இலக்காக கொண்டவை எனவும் நிறுவனம் வெளியிட்ட அறிவித்தலில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இதற்கமைய இந்த வேலைத்திட்டம் ரத்து செய்யப்படவில்லையென குறிப்பிட்டுள்ள அதானி குழுமம் இலங்கையின் பசுமை எரிசக்தி துறையில் ஒரு பில்லியன் டொலர் முதலீட்டிற்காக தமது அர்ப்பணிப்பில் அவதானம் செலுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளதுடன் இதற்கமைய மன்னார் காற்றாலை மின்னுற்பத்தி நிலைய நிர்மாணம் தொடர்பில் நீதிமன்ற வழக்கொன்று இடம்பெறுவதாகவும் அதன் இறுதி தீர்ப்பு கிடைக்கும் வரை திட்டத்தை ரத்து செய்வதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லையென அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அத்துடன் மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், அதானி நிறுவனத்தினால் இந்த வேலைத்திட்டத்திற்கென அதிக விலை வழங்கப்பட்டுள்ளதுடன் அதற்கு இலங்கை அரசு இணக்கம் தெரிவிக்காததை இந்திய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார். எவ்வாறாயினும் திட்டத்தை ரத்து செய்வதற்கு தீர்மானமொன்று எடுக்கவில்லையெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அதானி கிரீன் ஏஜன்சி நிறுவனத்தினால் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்ட மன்னார் காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தை ரத்து செய்வதற்கு தீர்மானம் எடுக்கப்படவில்லையெனவும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார். புதிய அரசின் கொள்கைகளுக்கமைய திட்ட மீள் பரிசீலனை செய்யும் நோக்கில் தற்போதைய நிலைமை தொடர்பில் அமைச்சர்களுக்கு அறிவிக்கும் வகையில் அமைச்சரவையில் பதிவொன்றை முன்வைத்ததாக எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார். திட்டம் தொடர்பிலான இறுதி தீர்மானம் நீதிமன்ற வழக்கு விசாரணையில் தங்கியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
குறித்த செய்தி இங்கு தரப்பட்டுள்ளது Link 1 | Link 2
எரிசக்தி அமைச்சின் செயலாளர் உதயங்க ஹேமபால
இந்த விடயம் தொடர்பில் எரிசக்தி அமைச்சின் செயலாளர் உதயங்க ஹேமபாலவிடமும் நாம் வினவியிருந்தோம். இந்த வேலைத்திட்டம் ரத்து செய்யப்படவில்லையென அவர் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பிலான மீள் பரிசீலனை தொடர்ந்தும் இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதற்கென குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
அதானி நிறுவனத்துடன் கடந்த அரசாங்கம் ஒப்பந்தம் செய்துள்ள மன்னார் மற்றும் பூநகரி காற்றாலை மின்னுற்பத்தி நிர்மாண வேலைத்திட்டத்தை ரத்து செய்துள்ளதாக வெளியாகிய செய்தியையடுத்து கடந்த (22) காலங்களில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இது தொடர்பிலான அரசின் நிலைப்பாட்டை விளக்கியிருந்தார்.
இதற்கமைய மன்னார் மற்றும் பூநகரி காற்றாலை மின்னுற்பத்தி நிர்மாண வேலைத்திட்டத்தை ரத்து செய்வதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லையென உத்தியோகபூர்வமாக அறிவித்தார். இந்த வேலைத்திட்டம் தொடர்பில் நீதிமன்றில் ஐந்து வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்கு விரைவில் மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த வேலைத்திட்டம் குறித்தான விலைப்பட்டியல் தொடர்பில் புதிய அரசாங்கம் இணக்கப்பாட்டிற்கு வரவில்லையெனவும் அதனை மீள மதிப்பீடு செய்து மீள் பரிசீலனை செய்வதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதற்கென குழுவொன்றை நியமித்துள்ளதாக குறிப்பிடும் அமைச்சர், நியமிக்கப்பட்டுள்ள குழுவின் ஊடாக இந்த வேலைத்திட்டம் தொடர்பில் இடம்பெறும் மீள் பரிசீலனைக்கமைய அது குறித்தான தீர்மானத்திற்கு வர முடியுமெனவும் தெரிவித்தார்.
இதற்கமைய மன்னார் காற்றாலை மின்னுற்பத்தி வேலைத்திட்டத்தை ரத்து செய்துள்ளதாக பரவும் செய்திகள் மக்களை தவறாக வழிநடத்த இடம்பெறும் முயற்சிகள் என விளக்கமளிக்கப்பட்டது.
அத்துடன் இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் கடந்த அரசாங்கத்தினால் ஒப்பந்தம் செய்யப்பட்ட மன்னார் காற்றாலை மின்னுற்பத்தி வேலைத்திட்டத்தை புதிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ரத்து செய்ததாக பல பதிவுகள் பகிரப்பட்டிருந்தன. கடந்த (2024) டிசம்பர் மாதத்தில், புதிய ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் தலைமையில் தேசிய மக்கள் சக்தியின் புதிய பாராளுமன்றம் அமைக்கப்பட்ட ஆரம்ப கட்டத்திலும் இவ்வாறு தவறாக வழிநடத்தும் செய்திகள் பரவியதுடன் நாம் குறித்த சந்தர்ப்பங்களிலும் அவை தொடர்பில் ஆராய்ந்திருந்தோம்.
குறித்த கடிதத்தில் அதானி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள மன்னார் காற்றாலை மின்னுற்பத்தி வேலைத்திட்டம் தொடர்பில் மேலதிக தகவல்கள் பல உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் குறித்த கடிதத்தையும் இங்கே நாம் பதிவிட்டுள்ளோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion: முடிவு
கடந்த அரசாங்கத்தினால் ஒப்பந்தம் செய்யப்பட்ட மன்னார் காற்றாலை மின்னுற்பத்தி வேலைத்திட்டம் இலங்கை அரசினால் ரத்து செய்யப்படவில்லை. அதானி நிறுவனத்திடமிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு கடந்த அரசாங்கத்தின் கீழ் இணக்கப்பாடு எட்டப்பட்ட ஒப்பந்தம் மாத்திரமே ரத்து செய்யப்பட்டுள்ளது. அத்துடன் முழு வேலைத்திட்டத்தையும் மீள் பரிசீலனை செய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title: அதானி நிறுவனத்தின் மன்னார் காற்றாலை மின்னுற்பத்தி வேலைத்திட்டத்தை புதிய அரசாங்கம் ரத்து செய்துள்ளதா?
Fact Check By: Factcrescendo TeamResult: False
