நிர்மலா சீதாராமனின் தந்தை என்று பரவும் வீடியோ உண்மையா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் தந்தை எளிய வாழ்க்கை வாழ்கிறார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முதியவர் ஒருவரை சந்திக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் ஊழல் பெருச்சாளி கோடீஸ்வர அரசியல்வாதிகள் மத்தியில் இப்படி நல்ல தமிழ் பேசி சாதாரண வாழ்க்கை வாழும் இந்தியாவின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமின் தந்தையும் குடும்பமும் வாழும் இடம்.

The father and family of India’s Finance Minister Nirmala Sitharam live a normal life speaking good Tamil among the corrupt billionaire politicians of India and Tamil Nadu” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வீடியோவை Boopal Chinappa என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 ஜனவரி 25ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடந்த போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டிருந்த வீடியோவை சிலர் சமூக ஊடகங்களில் தவறாக பகிர்ந்து வருகின்றனர். நிர்மலா சீதாராமனின் தந்தை மிகவும் எளிய நிலையில் வாழ்ந்து வருகிறார் என்று குறிப்பிட்டுள்ளனர். எனவே, இந்த தகவல் தவறானது என்பதை உறுதி செய்வதற்கான ஆய்வை நடத்தினோம்.

முதலில் நிர்மலா சீதாராமனின் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடக பக்கங்களில் அவர் வெளியிட்டிருந்த வீடியோவை தேடி எடுத்தோம். இந்த வீடியோவை நிர்மலா சீதாராமன் 2022 டிசம்பர் 3ம் தேதி பதிவிட்டிருந்தார். அதே போன்று இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அந்த வீடியோவை நிர்மலா சீதாராமன் பகிர்ந்திருந்தார். அதில், “வாரணாசியில் உள்ள சிவ மடத்திற்கு நேற்று சென்று அங்கு மகாக்கவி பாரதியாரின் 96 வயதான மருமகன் கே.வி.கிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருடன் உரையாடினேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

உண்மைப் பதிவைக் காண: Instagram.com

ட்விட்டரில் பாரதியாரின் மருமகன் கிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருடன் சந்தித்தது தொடர்பான வீடியோவுடன் சில புகைப்படங்களையும் நிர்மலா சீதாராமன் பதிவிட்டிருந்தார். நிர்மலா சீதாராமன் வாரணாசியில் கிருஷ்ணனன் குடும்பத்தினரை சந்தித்தது தொடர்பான செய்திகளும் வெளியாகி இருந்தன.

Archive

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வீடியோவில் இருப்பது சுப்ரமணிய பாரதியாரின் மறுமகன் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், விவரம் தெரியாமல், நிர்மலா சீதாராமனின் தந்தை என்று தவறாக பகிர்ந்து வருவது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

வாரணாசியில் வசிக்கும் பாரதியாரின் மருமகனை நிர்மலா சீதாராமன் சந்தித்த வீடியோவை எளிய வாழ்க்கை வாழும் நிர்மலா சீதாராமனின் தந்தை என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:நிர்மலா சீதாராமனின் தந்தை என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *