ஒன்றரை வருடத்திற்குள் நாடு கவிழ்ந்தால் ஆட்சியை துறப்பதாக அனுரகுமார அறிவித்தாரா?

அரசியல்

ஜனாதிபதி வேட்பாளர்கள் பங்கேற்கும் அரசியல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் சமூகத்தில் இன்று பல வழிகளில் விவாதிக்கப்படுகின்றன. அவ்வாறானதொரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிரதான வேட்பாளர்களில் ஒருவரான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்ததாக கூறப்படும் கருத்தொன்றின்  உண்மைத்தன்மையை ஆராய நாம் நடவடிக்கை எடுத்தோம்.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

<iframe frameBorder='0' width='640' height='360' webkitallowfullscreen mozallowfullscreen allowfullscreen src="https://www.awesomescreenshot.com/embed?id=31634110&shareKey=f3325da955b9c442576cbe4bdb282591"></iframe>


Facebook Link

சமூக வலைத்தளங்களில்  “பரிசோதனை செய்தவர்கள் இதைப் பாருங்கள்” என்ற தலைப்பில் சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ பரப்பப்பட்டது.

அதில் ஜனாதிபதித் தேர்தலில்  அனுரகுமார திஸாநாயக்க வெற்றி பெற்று, ஒன்றரை வருடங்களுக்குள் நாடு மீண்டும் ஒரு தடவை வீழ்ச்சியடைந்தால், தான் பதவி விலகுவதாக   சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

மேற்படி காணொளியானது கடந்த 16 ஆம் திகதி தெரண தொலைக்காட்சியின் ‘360’ நிகழ்ச்சியில் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்க கலந்துகொண்ட காணொளி ஆகும்.  அந்த முழு நிகழ்ச்சியையும் நாம் ஆய்வு செய்தோம்.

மேற்கண்ட காணொளியின் படி அனுரகுமார திஸாநாயக்க வழங்கிய பதிலை அடிப்படையாகக் கொண்ட கேள்வியில், நிகழ்ச்சி தொகுப்பாளர்  கலிந்து கருணாரத்ன, தற்போதைய அரசாங்கம்  இருதரப்பு கடனளிப்பவர்களுடன் அடிப்படை  உடன்பாட்டை எட்டுவதற்கு, சுமார் ஒன்றரை வருடங்கள் எடுத்துக் கொள்ளும், மாற்று வழிகள் கடன் நிலைத்தன்மை பகுப்பாய்வு (DSA) உடனான இந்த விவாதத்திற்கு திரும்பினால், காலப்போக்கில் மீண்டும் ஒரு ஆபத்தான சூழ்நிலை ஏற்படுமே நண்பரே என வினவியிருப்பார்.

அதற்குப் பதிலளித்த அனுரகுமார திஸாநாயக்க, இந்த நிதி முகாமைத்துவத்தை இவ்வாறாகப் பேணி வினைத்திறனாக்க முடியுமா என்பது தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும், ஆனால் தற்போதைய அரசாங்கம் போன்று பேச்சுவார்த்தைகள் வருடக்கணக்கில் இழுத்தடிக்கப்படுமானால் மீண்டும் இந்த பேச்சுவார்த்தைகள் கைவிடப்படும் என தெரிவித்திருப்பார். இதன் பொருள் ஆட்சியை கைவிடுவதில்லை.

இங்கு தேசிய மக்கள் சக்தியே சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) புதிய மாற்று கடன் நிலைத்தன்மை பகுப்பாய்வு (DSA) உடன் பேச்சுவார்த்தை நடத்தும் என்று சுட்டிக்காட்டப்படுகிறது, மேலும் அவர்கள் அதற்கு உடன்படவில்லை என்றால், பேச்சுவார்த்தைக்கு ஒன்றரை வருடங்களை செலவிடுவதற்கு பதிலாக, சர்வதேச நாணய நிதியம் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள நிலைத்தன்மை பகுப்பாய்வு (DSA)வுடன் தொடர்ந்தும் பயணிப்பதாகவும் தெரிவித்தார்.

அதேபோல் சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) உடன்படிக்கையை எட்டுவதே தமது நோக்கம் என்றும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அந்த நிதியை கைவிடும் திட்டம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடன் நிலைத்தன்மை குறித்து ஊடகவியலாளர் கலிந்து கேட்ட கேள்விக்கு அனுரகுமார திஸாநாயக்க வழங்கிய முழுமையான பதில் மற்றும் அது தொடர்பான விளக்கத்தை கீழே காணலாம்.

மேலும், அவர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால், அவருக்கு 5 ஆண்டுகள் அதிகாரம் இருக்கும், எனவே அவர் அதில் மூன்று ஆண்டுகள் சர்வதேச நாணய நிதியத்தை சமாளிக்க வேண்டுமே தவிர ஆட்சியை கையில் எடுத்த அரசாங்கத்திற்கு மாற்று வழி இல்லை என்றும் இந்த வேலைத்திட்டத்தை சாதகமாக மாற்ற முடியுமா என்பது குறித்து ஆலோசிக்க முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆகவே அநுரகுமார திசாநாயக்க எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்தை தக்க வைத்துக் கொள்ள முடியாத பட்சத்தில் தனது அதிகாரத்தை கைவிடப் போவதாக தெரிவித்திருக்கவில்லை என்பது இந்த முழு நிகழ்சியையும்  அவதானிக்கும் போது தெளிவாகின்றது.

இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில்,

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றால் ஒன்றரை வருடங்களுக்குள் நாடு மீண்டும் வீழ்ச்சியடையும் பட்சத்தில் ஆட்சியை துறப்பேன் என அனுரகுமார திஸாநாயக்க கூறியதாக சமூக ஊடகங்களில் பரவிவரும் காணொளி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என தெரிய வருகிறது.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  | TikTok

Conclusion: முடிவு


எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *