ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வெற்றியால் கண்கலங்கிய அவரின் தந்தை என பரவும் வீடியோ உண்மையா?

அரசியல்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வெற்றியால் கண்கலங்கிய அவரின் தந்தை என ஒரு வீடியோ சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):


Facebook Link
 | Archived Link

சமூக வலைத்தளங்களில் “தனது மகன் அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற செய்தியை தந்தை கேட்டபோது அவருக்கு ஏற்பட்ட மகிழ்சி. ” இம் மாதம் 23 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு (23.09.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியினை தெரிவான அநுர குமார திசாநாயக்கவின் வெற்றி செய்தியினை கேட்டு அழுகும் அவரின் தந்தை என பரவும் வீடியோ தொடர்பாக எவ்விதமான பிரதான ஊடகங்களும் ஜனாதிபதி அநுரவின் தந்தை என செய்திகள் எதுவும் வெளியாகவில்லை.

நாம் குறித்த வீடியோவின் சில பகுதிகளை நாம் புகைப்படமாக மாற்றி ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்டபோது, குறித்த வீடியோவை முதல் முதலில் பதிவேற்றம் செய்த நபரின் பதிவு எமக்கு கிடைக்கப்பெற்றது.

அதனை பதிவேற்றம் செய்த Minon Perera அதில் உள்ளவர் தனது தாத்தா என்பதை குறிப்பிட்டிருந்தார்.

@melanin_minon

මේ ඉන්නේ අපේ කිරි අත්තා.දැන් එයාට වයස 98ක්. 88/89 ඇස් වලින් දැකපු අත්දැකීම තියෙන මිනිස්සු. කිරි අත්තගේ එකම පුතා ජපුර කැම්පස් එකෙන් අවුට් වෙනකොට නාඹර කොල්ලෙක්.වෙනස් විදිහට හිතපු මනුස්සයෙක්. ගුරුවරයෙක් විදිහට පත් වීම් අරගෙන ආවත් හරි මාමා ආගිය අතක් නැතිවෙනවා. මාමා කියන්නේ මට කවදාවත් නොදැක්ක වීරයෙක්. කිරි අත්තගේ පුතා, අපේ අම්මලගේ සහෝදරයා සහ තව දහස් ගානක් තරුණ ලමයි රාජ්‍ය අනුග්‍රහය ඇතුවම ටයර් සෑය මතට ගිය එකට සාධාරණය්ක් ඉල්ලන්න බැරි නිසා කී දාහක් දෙමාපියෝ සහෝදරයෝ අසරණ උනාද කියලා දන්නේ ඒ මිනිස්සුම තමා. අද එහෙම හිත් වලට මේ තරම් සතුටක් දැනෙනවා ඇති. මොකද මම ඒක මේ විජයග්‍රහණ මොහොතේ මගේ පවුල ඇතුලෙන්ම දකිනවා. මාමා ගැන මම අහගන්නේ පවුලේ අයගෙන්, ඒත් මාමව මම අඳුරගන්නේ එයාගේ පොත් රාක්කෙන්.පොත් වලට ඇබ්බැහිවෙන කාලේ මාමගේ කාමරේ බිම සීතල පොලොව උඩ ඉදගෙන මම කියවන්නේ රුසියානු කතා. හැබැයි ඒ පොත් වලට ඇබ්බැහිවෙන කාලේ ඒ පොත් රාක්කේ පිටින්ම අතුරුදහන් වෙන්නේ තව දුරටත් මාමා ගිය අඩිපාරේ තව එකෙක් යන එකට පවුලේ අය අකමැති නිසා වෙන්න ඇති කියලා මට තේරෙන්නේ මෑතකදි. එන්නැති බව දැන දැනත් එයා එනකම් අපේ කිරි අත්තලා බලන් හිටියා. මම හිතන්නේ මාමා ආවේ නැති උනාට එයා කොන්දේසි විරහිතව පෙනි හිටපු දේ අද මේ මහ පොලොවේ සාක්ශාත් උනා. අපේ රටේ අභිනව ජනපතිතුමා කියන, “ඔවුන් අපව වලලන්න හැදුවා, අපි බීජ බව ඔවුන් දැන සිටියේ නෑ” කියන ප්‍රකාශය නැවත නැවත සත්‍යක් බව මේ වීඩියෝවෙන් මම සාක්ශාත් කරනවා. අප බලාපොරොත්තු වල රට හෙට සිට පහල වන්නේ නැත, නමුත් ඒ සඳහා හවුල් වීමට අපිට පුලුවන් හරියට විජේවීරයන් සහ සඟයන් අද දවස වෙනුවෙන් බීජ වැපිරුවා සේ 🧭✊

♬ original sound – Minon Perera

இதனை மேலும் உறுதி செய்து கொள்ள நாம் அவரின் கணவரை தொடர்புக்கொண்டு வினவியபோது, அதில் உள்ளவர் Minon Pereraவின் தாத்தா தான் என உறுதி செய்தார். மேலும் நாம் ஜனாதிபதி அநுரவின் உறவினர்களா என வினவியபோது, அதற்கு அவர் அவ்வாறு எவ்விதமான உறவு முறையும் இல்லை என உறுதி செய்தார்.

இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வெற்றியால் கண்கலங்கிய அவரின் தந்தை என பரவும் வீடியோவில் உள்ளவர் அநுரவின் தாத்தா இல்லை என கண்டறியப்பட்டது.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  | TikTok

Conclusion: முடிவு


எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *