இன்று சர்வதேச உண்மை சரிபார்ப்பு தினம்!

False

சர்வதேச உண்மை சரிபார்ப்பு தினம் (International Fact-Checking Day) ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. இணையதளங்களில் பரவி வரும் தவறான தகவல்களைத் தடுப்பதற்கும், இணையத்தில் நாம் காணும் அனைத்தும் உண்மையானவை அல்ல என்பதை மக்கள் புரிந்து கொள்வதற்கும் இந்தத் தினத்தைக் கொண்டாடுவது மிகவும் அவசியமாகும்.

ஒரு குறிப்பிட்ட தினத்தை ஒதுக்கி சர்வதேச உண்மை கண்டறியும் தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டாலும், உண்மையிலேயே தகவல்களைச் சரிபார்க்கும் பழக்கம் ஆண்டின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நபரின் பொறுப்பாக மாறினால், அதன் மூலம் தவறான தகவல்களைக் குறைப்பதற்கு சமூகத்தின் ஒவ்வொருவராலும் பங்களிக்க முடியும்.

குறிப்பாக, உலகப் பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) 2026 உலகளாவிய அபாயங்கள் அறிக்கையில், அடுத்த இரண்டு ஆண்டுகளில் நிலவக்கூடிய பாரதூரமான குறுகிய கால அபாயங்களில் இரண்டாவது இடத்திற்கு தவறான தகவல்கள் (Misinformation) மற்றும் போலிச் செய்திகளால் (Disinformation) ஏற்படும் அபாயங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ள ஒரு சூழலில், ஒவ்வொரு குடிமகனும் ஒரு தகவல் சரிபார்ப்பாளராக (Fact-checker) மாற வேண்டியதன் முக்கியத்துவம் மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச உண்மை கண்டறியும் தினத்தின் வரலாறு

சர்வதேச உண்மை கண்டறியும் வலையமைப்பு (International Fact-Checking Network – IFCN), 2015 ஆம் ஆண்டு அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஊடகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான பாயிண்டர் நிறுவனத்தினால் (Poynter Institute) தொடங்கப்பட்டது. உலகளாவிய ரீதியில் உண்மை கண்டறியும் அமைப்புகளை ஒன்றிணைப்பதும், தொழில்முறை உண்மை கண்டறிதலுக்கான பொதுவான தரநிலைகளை வகுப்பதும் இதன் இலக்காக இருந்தது.

சர்வதேச உண்மை கண்டறியும் தினம் என்ற கருத்து 2014 ஆம் ஆண்டு London School of Economics ஆல் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், இந்த தினம் அதிகாரப்பூர்வமாக 2016 இல் கொண்டுவரப்பட்டது. ஏப்ரல் 01 ஆம் திகதி “முட்டாள்கள் தினம்” கொண்டாடப்படுவதால், மக்கள் ஒருவருக்கொருவர் தவறான தகவல்களைப் பகிர்ந்து அந்த நாளைக் கொண்டாடுகிறார்கள். எனவே, அதற்கு மறுநாளான ஏப்ரல் 2 ஆம் திகதியை தேர்ந்தெடுப்பதன் மூலம், உண்மையான தகவல்களின் முக்கியத்துவத்தை விளக்கவும், தவறான தகவல்களால் ஏற்படும் அபாயங்கள் குறித்து பேசவும் முடியும் என்பதால் இந்தத் திகதி தீர்மானிக்கப்பட்டது.

உலகளவில் 170 இற்கும் மேற்பட்ட செயலில் உள்ள உண்மை கண்டறியும் அமைப்புகள் காணப்படுகின்றன

எமது Fact Crescendo நிறுவனம் உட்பட, சர்வதேச உண்மை கண்டறியும் வலையமைப்பின் (IFCN) அங்கத்துவத்தைப் பெற்றுள்ள 170 இற்கும் மேற்பட்ட செயலில் உள்ள உண்மை கண்டறியும் குழுக்கள், உலகளாவிய ரீதியில் 69 இற்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கி வருகின்றன.

சர்வதேச உண்மை கண்டறியும் தினம் ஏன் முக்கியம் பெறுகிறது?

உண்மை மற்றும் துல்லியத்தன்மையை மேம்படுத்துவதற்கு: தகவல்களைப் பரப்புவதற்கு முன்னர் அவற்றைச் சரிபார்க்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து சர்வதேச உண்மை கண்டறியும் தினம் கவனம் செலுத்துகிறது. சமூக ஊடகங்கள் வாயிலாக தவறான மற்றும் திசைதிருப்பக்கூடிய தகவல்கள் மிக வேகமாகப் பரவி வரும் உலகில், உண்மையான தகவல்களை மாத்திரம் பகிரப்படுவதை உறுதி செய்வதற்கு உண்மை கண்டறியும் அறிக்கைகள் (Fact-check reports) பெரிதும் உதவுகின்றன.

தீங்கு விளைவிக்கும் தவறான தகவல்களிலிருந்து தனிநபர்களைப் பாதுகாப்பதற்கு:

தகவல்கள் சரிபார்க்காமல் பகிரப்படும் பட்சத்தில், தனிநபர்கள் தமக்கோ அல்லது மற்றவர்களுக்கோ தீங்கு விளைவிக்கக்கூடிய தவறான தகவல்களை நம்புவதற்குத் தூண்டப்படலாம். எனவே, சர்வதேச உண்மை கண்டறியும் தினமானது, சரிபார்க்கப்பட்ட செய்திகள் மற்றும் தகவல்களைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டி ஊக்குவிப்பதுடன், சந்தேகத்திற்குரிய செய்திகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு முன்னதாக அவற்றின் துல்லியத்தன்மையை உறுதிப்படுத்துமாறு மக்களை ஊக்குவிக்கிறது.

தகவல்களைச் சரிபார்த்தல் விமர்சன ரீதியான சிந்தனைத் திறனை வளர்க்கிறது:

உண்மை கண்டறிதல் அல்லது தகவல்களைச் சரிபார்த்தல் என்பது, தனிநபர்கள் தங்களிடம் வரும் தகவல்களைப் பற்றி விமர்சன ரீதியாகச் சிந்திப்பதற்கு ஊக்குவிக்கிறது. இது போலிச் செய்திகள் அல்லது தவறான தகவல்களில் சிக்கிக்கொள்ளும் பயனர்களின் எண்ணிக்கையை குறைக்க உதவுகிறது.

சர்வதேச உண்மை கண்டறியும் வலையமைப்பினால் (IFCN) அங்கீகரிக்கப்பட்ட Fact Crescendo எமது குழு

Fact Crescendo Sri Lanka என்பது Fact Crescendo தாய் நிறுவனத்தின் ஒரு கிளையாகும். கடந்த சில ஆண்டுகளில் மியான்மர், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் தாய்லாந்து போன்ற பிராந்திய நாடுகளிலும் இவ்வாறான கிளைகளை நிறுவுவதில் நாம் வெற்றி பெற்றுள்ளோம்.

Fact Crescendo நிறுவனத்தின் தலைமையகம் இந்தியாவில் அமைந்துள்ளது. ஹிந்தி, தமிழ், மலையாளம், பங்ளா, மராத்தி, குஜராத்தி, அஸ்ஸாமி, ஒடிசா உள்ளிட்ட பல இந்திய மொழிகளிலும் எமது உண்மை கண்டறியும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

எமது சுயாதீனமான உண்மை கண்டறியும் பணிகளைப் பாராட்டும் பலரின் மதிப்பிற்குரிய ஒன்றாக எமது நடுநிலைமை காணப்படுகிறது. மேலும், IFCN சர்வதேச உண்மை கண்டறியும் வலையமைப்பின் வழிகாட்டல்களுக்கு இணங்க, 2018 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் தரச் சான்றிதழைப் பெற்று வருகிறோம். முறையான வழிகாட்டல்களைப் பின்பற்றுதல், நடுநிலைமை மற்றும் நேர்மை, வழிமுறைகளின் தரம் மற்றும் வெளிப்படைத்தன்மை, நிதி திரட்டலில் வெளிப்படைத்தன்மை, திறந்த மற்றும் நேர்மையான தன்மை மற்றும் உண்மையை மட்டுமே வெளிப்படுத்துதல் போன்ற கொள்கைகளை நாம் பின்பற்றுவதே இதற்கு முக்கிய காரணமாகும்.

சமூக ஊடக பயனர்கள் எமக்கு வழங்கும் உண்மை கண்டறியும் கோரிக்கைகளில், சுயாதீனமாகச் சரிபார்க்கக்கூடிய விடயங்களை மட்டுமே நாம் ஆய்வுக்கு உட்படுத்துகிறோம். அனைத்து வகையான தகவல்களையும் சரிபார்ப்பது சாத்தியமற்றது என்பதால், உண்மை சரிபார்ப்பாளர்கள் பொதுவாகக் கருத்துக்கள், கணிப்புகள் அல்லது அனுமானங்கள் மீது கவனம் செலுத்தாமல், சரிபார்க்கக்கூடிய உண்மையான கூற்றுகள் மீது மட்டுமே கவனம் செலுத்துகின்றனர்.

பேஸ்புக் (Facebook) நிறுவனத்தின் உண்மை கண்டறியும் பணிகளை மேற்கொள்ளும் மூன்றாம் தரப்பாக (Third-party fact-checking partner), இலங்கையில் தரவரிசைப்படுத்தல் (Rating) அதிகாரத்தைப் பெற்ற உண்மை கண்டறியும் குழுவாக நாம் விளங்குகிறோம். அதன்படி, தவறானவை (False), திருத்தப்பட்ட புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் (Altered), பகுதியளவு தவறானவை (Partly False), முழுமையான தகவல்கள் இல்லாமையினால் வாசகர்களைத் திசைதிருப்பக்கூடிய செய்திகள் (Missing Context), மற்றும் கேலிக்கையான முறையில் பகிரப்படும் தவறான சமூக ஊடகப் பதிவுகள் (Satire) ஆகியவற்றை நாம் ஆய்வு செய்கிறோம்.

தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்க பேஸ்புக் நிறுவனத்தினால் வழங்கப்படும் தரவரிசைப்படுத்தல்களுக்கு (Rating) எதிராக மேன்முறையீடு (Appeal) செய்து அவற்றை நீக்கிக் கொள்வதற்கான வாய்ப்பும் காணப்படுகிறது.Link

எவ்வாறாயினும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எந்தவொரு பேஸ்புக் பதிவையோ, பக்கத்தையோ அல்லது கணக்கையோ முடக்குவதற்கோ அல்லது நீக்குவதற்கோ எமக்கு அதிகாரம் இல்லை. தரவரிசைப்படுத்தல் (Rating) மூலம் பேஸ்புக்கில் பரவும் தவறான தகவல்கள் குறித்து வாசகர்கள் விழிப்புணர்வடைவதுடன், அத்தகைய செய்திகள் அதிகப்படியான மக்கள் மத்தியில் பகிரப்படுவதும் மட்டுப்படுத்தப்படுகிறது. Link 

எமது Fact Crescendo குழுவினர் 2018 ஆம் ஆண்டு முதல் IFCN இன் கொள்கை அறிக்கையில் சரிபார்க்கப்பட்ட கையொப்பமிட்டவர்களாக (Verified Signatories) விளங்குகின்றனர்.

WhatsApp தளத்திலும் நாம் ஒரு IFCN அங்கீகாரம் பெற்ற உண்மை கண்டறியும் அமைப்பாக (Fact-checking organization) உறுதிப்படுத்தப்பட்டுள்ளோம். faq.whatsapp.com

எங்களது  சமூகவலைதள  பக்கங்களை  பின்தொடர….


Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  |TikTok| Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *