2024 ஆம் ஆண்டின் அதிக கவனத்தினை ஈர்த்த Fact Crescendo உண்மை கண்டறியும் விசாரணைகள் ஓர் பார்வை…!

Insight Social

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட பல போலியான மற்றும் தவறான கருத்துக்களை பரப்பும் பதிவுகளின் ஆய்வறிக்கைகளின் மூலம் அதன் உண்மைத் தன்மையினை சமூகத்திற்கு கொண்டு செல்வதன் மூலம் நாங்கள் கடந்த வருடம் (2024) மேற்கொண்ட ஆய்வறிக்கையின் ஓர் கண்ணோட்டம்.

ஜனவரி மாதம்

  1. Tambapanni Collective என்ற நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஷிம்னா சந்தன் (Shimna Chandan) குமார் சங்கக்காரவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தினை, குறித்த பெண் தான் குமார் சங்கக்காரவின் மனைவியென பகிரப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது. இதனை முழுமையாக வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்
  2. திடீர் சுகவீனம் காரணமாக டக்ளஸ் தேவானந்தா காலமானார் என பரவிய கண்ணீர் அஞ்சலி போஸ்டர். இதனை முழுமையாக வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்
  3. தளபதி விஜயினை நாமல் ராஜபக்ஷ சந்தித்தார் என எடிட் செய்யப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது. இதனை முழுமையாக வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்

பெப்ரவரி மாதம்

  1. தலைமன்னார் புகையிரத போக்குவரத்து சேவை சீன அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் அதி நவீன முறையில் அபிவிருத்தி செய்யப்பட்டு வருவதாக ஒரு வீடியோ பரவியதோடு, அது மலேசியா நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட புகையிரத திட்டத்தின் போது எடுக்கப்பட்ட காட்சி என கண்டறியப்பட்டது.
    இதனை முழுமையாக வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்
  2. 18 வயதுக்கு குறைந்த சிறுவர்கள் காதல் பாடல்கள் மற்றும் கல்வி சம்பந்தப்படாத நிகழ்ச்சிகள் செய்தால் வழங்கப்பட்டவுள்ள தண்டனை என ஒரு தவறான பதிவு இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
    இதனை முழுமையாக வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்

மார்ச் மாதம்

  1. வெளிநாடுகளில் இருந்து 400 பேர் இலங்கைக்கு பிள்ளைகளை கடத்துவதற்கு வந்துள்ளதாக பரவிய வீடியோ எகிப்தினை சேர்ந்த 4 இளைஞர்கள் மேற்கொண்ட நாடக வீடியோ என்பதோடு, குறித்த இளைஞர்கள் அந்நாட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டது.
    இதனை முழுமையாக வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்
  2. 2 விலங்கு இனங்களையும் இணைத்து எடுக்கப்பட்ட புகைப்படம் என பரவிய புகைப்படமானது மூன்று வாரங்களுக்குள் மலையக பிரதேசத்தில் ஒரு இடத்தின் வழியாக பயணிக்கும் மிருகங்கள். ட்ரப் கெமரா (Trap Camera / Trail Camera) மூலம் பதிவு செய்யப்பட்ட வெவ்வேறு உயிரினங்களின் வெவ்வேறு நாட்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை Focus stacking / Layer stacking முறையைப் பயன்படுத்தி பல புகைப்படங்களை இணைத்து உருவாக்கப்பட்டது என கண்டறியப்பட்டது.
    இதனை முழுமையாக வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்

ஏப்ரல் மாதம்

  1. டோனியின் காலுக்கு அருகில் இருக்கும் பந்துவீச்சாளர்கள் பயன்படுத்தும் மார்க்கரை எடுக்க மதீஷ பத்திரன குனிந்த சம்பவத்தின் மற்றைய பக்கத்தின் வீடியோவை எடுத்து டோனியிடம் ஆசி பெற்ற மதீஷ பத்திரன என சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. இதனை முழுமையாக வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்
  2. IMF பேச்சு முடியும் வரையில் தேர்தலுக்கு இடமில்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்ததாக பரவிய தவறான பதிவும் எம்மால் ஆய்வு செய்து அதன் உண்மை தன்மை குறித்து மக்களுக்கு தெளிவூட்டல் செய்யப்பட்டது.

இதனை முழுமையாக வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்

மே மாதம்

  1. 75 குழந்தைகளுக்கு இலவச இதய அறுவை சிகிச்சை என பரவிய தவறான சமூக வலைத்தள பதிவு குறித்து ஆய்வு செய்து விளக்க கட்டுரையும் வெளியிடப்பட்டது. இதனை முழுமையாக வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்
  2. வாகன பதிவு சான்றிதழ் இன்றி மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க முடியாது என தெரிவித்து பரவிய வீடியோவினை ஆய்வு செய்தபோது, அதில் குறித்த பொலிஸ் அதிகாரி  வாகனத்தின் உரிமம் மாற்றல் செய்யப்பட்டு இல்லாதமையினை தொடர்பில் குறித்த சாரதி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, அதில் இருந்த ஆவணங்களில் பலரின் பெயர்கள் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

இதனை முழுமையாக வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்

ஜுன் மாதம்

  1. இலங்கையில் புகழ்பெற்ற மூத்த வானொலி அறிவிப்பாளரான அப்துல் ஹமீத் காலமானார் என பரவிய போலியான பதிவின் மூலம் உலக வாழ் தமிழ் மக்களை சோகத்தில் ஆழ்த்திய சம்பவமும் அரங்கேறியமை குறிப்பிடத்தக்கது. இதனை முழுமையாக வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்
  2. இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரரான குசால் மெண்டீஸ் சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெறுவதாக பரவிய தவறான தகவல் எமது ஆய்வின் மூலம் அதன் உண்மைத்தன்மை கண்டறியப்பட்டது. இதனை முழுமையாக வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்

ஜுலை மாதம்

  1. இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான கச்சத்தீவு தொடர்பாக புதிய உடன்படிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டதாக பரவிய தவறான தகவலின் உண்மைத் தன்மை எமது ஆய்வின் மூலம் மக்களுக்கு தெளிவூட்டல் செய்யப்பட்டது. இதனை முழுமையாக வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்
  2. ஜனாதிபதி தேர்தல் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்ட கருத்துக் கணிப்பு என பரப்பிய போலி தகவலை ஆய்வு செய்தபோது அவ்வாறான எவ்விதமான கருத்து கணிப்பும் தம்மால் மேற்கொள்ளப்படவில்லை என ஜரோப்பிய ஒன்றியம் தெரிவித்தது.
    இதனை முழுமையாக வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்

ஆகஸ்ட் மாதம்

  1. ரணில் ஜனாதிபதியானால் நானே பிரதமர் என ரவி கருணாநாயக்க தெரிவித்ததாக பரவிய போலி தகவல்
    இதனை முழுமையாக வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்
  2. சஜித் பிரேமதாச முஸ்லிம்களுக்கு நபி போன்றவர் என விடிவெள்ளி பத்திரிகை செய்தி வெளியிட்டதாக எடிட் செய்யப்பட்டு இணையத்தில் பரப்பப்பட்ட புகைப்படம்
    இதனை முழுமையாக வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்
  3. தனது அரசாங்கத்தில் VAT வரி முழுமையாக நீக்கப்படும் என அநுர அறிவித்ததாக பரவிய தவறான பதிவு எமது ஆய்வின் மூலம் அதன் உண்மைத் தன்மை கண்டறியப்பட்டது.

இதனை முழுமையாக வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்

செப்டெம்பர் மாதம்

  1. தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் என தபால் மூல வாக்களிப்பு நடந்து கொண்டிருக்கும் போதே இணையத்தில் பரவிய போலியான தகவல்கள்
    இதனை முழுமையாக வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்
  2. கொரோனாவை கொண்டு வந்தது முஸ்லீம்கள் என பாராளுமன்றத்தில் சஜித் தெரிவித்ததாக பரவிய வீடியோ பதிவு எமது ஆய்வின் மூலம் தவறானது என கண்டறியப்பட்டது.
    இதனை முழுமையாக வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்
  3. ஒன்றரை வருடத்திற்குள் நாடு கவிழ்ந்தால் ஆட்சியை துறப்பதாக அனுரகுமார தெரிவித்ததாக பரவிய போலியான தகவல் கண்டறியப்பட்டது.
    இதனை முழுமையாக வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்
  4. சஜித் பிரேமதாசவிற்கு பொது பல சேனா கட்சியின் ஆதரவு என பரவிய போலியான தகவல் கண்டறியப்பட்டது.
    இதனை முழுமையாக வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்

ஒக்டோபர் மாதம்

  1. கண்காணிப்பு பணிக்காக 25 மாவட்டங்களுக்கு தலா 10 பேர் வீதம் ஜனாதிபதியால் நியமனம் செய்யப்பட்டதாக பரவிய போலியான தகவல் எமது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது.
    இதனை முழுமையாக வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்
  2. ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்தர தலைவர் பதவி ரணிலுக்கு வழங்கப்படவுள்ளதாக பரவிய தகவல் போலியானது என எமது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது.
    இதனை முழுமையாக வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்
  3. அரச ஊழியரை தாக்கிய அங்கஜன் இராமநாதன் என பரவிய வீடியோ இந்தியாவில் மகாராஷ்டிரா பகுதியில் நடந்த சம்பவம் என கண்டறியப்பட்டது.
    இதனை முழுமையாக வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்

நவம்பர் மாதம் 

  1. இதயத்தில் பிரச்சினை உள்ள குழந்தைகளுக்கு ஒரு வாரத்திற்குள் இலவச அறுவை சிகிச்சை என கராப்பிட்டிய வைத்தியசாலை அறிவிப்பு என்று பரவிய தவறான பதிவு
    இதனை முழுமையாக வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்
  2. கடந்த ஒரு வருடகாலமாக ஒவ்வொரு பெளர்ணமி தினத்தின் போதும் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் தையிட்டியில் உள்ள விகாரைக்கு எதிரான போராட்டத்தினை தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் மேற்கொள்ளப்பட்ட போராட்டம் என தவறான கருத்துடன் பரப்பிய பதிவு கண்டறியப்பட்டது.
    இதனை முழுமையாக வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்
  3. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜே.வி.பி தலைமை பொறுப்பில் இருந்து விலகினார் என பரவிய தவறான தகவல்
    இதனை முழுமையாக வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்
  4. தோல்வியை கொண்டாடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் என பரவிய வீடியோ பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் கோவில் திருவிழாவின் போது எடுக்கப்பட்டது என கண்டறியப்பட்டது.
    இதனை முழுமையாக வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்
  5. சம்பளம் இன்றி பணியாற்றவுள்ள அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என பரவிய தவறான தகவல் எமது ஆய்வில் கண்டறியப்பட்டது.
    இதனை முழுமையாக வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்
  6. பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா பௌத்த சமயத்தைச் சேர்ந்தவர் என பரப்பப்பட்ட தவறான தகவல் கண்டறியப்பட்டது.
    இதனை முழுமையாக வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்

டிசம்பர் மாதம் 

  1. இலங்கையில் வாய் பேச முடியாதவர்கள் வாழும் அதிச கிராமம் என்ற தலைப்பில் சமூகஊடகங்களில் காணொளி ஒன்று பகிரப்பட்டு வந்தது குறித்த காணாளியில் தெரிவிக்கப்பட்டதனைப் போன்று குறித்த கிராமத்தில் வசிக்கும் அனைவரும் வாய் பேச முடியாமல் மற்றும் செவிப்புலனற்ற குறைப்பாடுகளை கொணடவர்கள் அல்ல எனவும் தினிப்பிட்டி கிராமத்தில் உள்ள 24 குடும்பங்களில் 15 குடும்பங்களைச் சேர்ந்த 9 பேர் மாத்திரமே வாய் பேசமுடியாமல், செவிப்புலனற்ற குறைப்பாடுகளுடன் வாழ்கின்றமையும் தெளிவாகின்றது.
    இதனை முழுமையாக வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்
  2. இலங்கையில்  பிரபாகரனின் புகைப்படத்தை திரையில் காட்சிப்படுத்தி மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டதாக பரவிய புகைப்படம் பிரித்தானியாவின் டார்ட் போர்ட் தமிழ் அறிவியற் கழகத்தில் (Dartford Tamil Knowledge Centre) இடம்பெற்ற நிகழ்வு என்பது கண்டறியப்பட்டது.
    இதனை முழுமையாக வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்
  3. யாழ் தேவி புகையிரதத்தின் பெட்டி வேறாக கழண்ட சம்பவம் என பரவிய பழைய வீடியோ.
    இதனை முழுமையாக வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்
  4. பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது கலாநிதி பட்டம் தொடர்பாக பரவிய போலியான தகவல் தொடர்பில் மேற்கொண்ட ஆய்வின் மூலம் அதன் உண்மை தன்மை கண்டறியப்பட்டது. இதனை முழுமையாக வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்
  5. வங்கியால் பெறப்படும் அனைத்து வைப்புத்தொகை மீதான வட்டிக்கும் வரி அதிகரிக்கப்பட்டதாக பரவிய தகவல் தொடர்பாக ஆய்வினை மேற்கொண்டு அதுகுறித்து மக்களுக்கு தெளிவூட்டல் அறிக்கை வழங்கப்பட்டது. இதனை முழுமையாக வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி பரவிய போலி தகவல்கள்

  1. மாத்தளை லக்கல பிரதேசத்தில் மலை உச்சியில் சிக்கிய காட்டு யானையை மீட்கும் காணொளியானது உண்மையான நிகழ்வல்ல என்பதுடன் இது செயற்கை நுண்ணறிவினை பயன்படுத்தி உருவாக்கி Athing Inside என்ற YouTube சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது. Link
  2. தாஜ்மஹாலின் கட்டுமான பணிகளின் போது எடுக்கப்பட்ட காணொளி என பரவும் வீடியோ Link
  3. இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட கும்பகர்ணன் வாள்  AI தொழிநுட்பத்தால் உருவாக்கப்பட்ட புகைப்படங்களை கொண்ட காணொளி எனவும், மேலும் இது குறித்த உண்மையை கண்டறியும் நோக்கில் இலங்கை தொல்பொருள் திணைக்களத்திடம் வினவிய போது, இராமாயணக் கதையுடன் நேரடியாக தொடர்புடைய தொல்பொருள் அல்லது தொல்பொருள் சான்றுகள் எதையும் இலங்கை தொல்பொருள் திணைக்களம் கண்டுபிடிக்கவில்லை என்பதை அவர்கள் தெளிவுப்படுத்தினர். Link
  4. உலகில் நீண்ட கழுத்து கொண்ட மனிதன் என ஒரு புகைப்படத்தொகுப்பு இது செயற்கை நுண்ணறிவினை பயன்படுத்தி உருவாக்கி funnyaipics என்ற டிக்டொக் கணக்கில் கடந்த வருடம் நவம்பர் மாதம் குறித்த புகைப்படங்கள் அடங்கிய வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது. Link
Avatar

Title:2024 ஆம் ஆண்டின் அதிக கவனத்தினை ஈர்த்த Fact Crescendo உண்மை கண்டறியும் விசாரணைகள் ஓர் பார்வை…!

Fact Check By: S.G.Prabu 

Result: Insight

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *