AliExpress மூலம் ஆர்டர் செய்யப்பட்டு சுங்கத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொருட்களுக்கு என்ன நடக்கும்?

Insight இலங்கை | Sri Lanka

AliExpress,Temu,ebay போன்ற ஒன்லைன்  சந்தைகள், மக்கள் குறைந்த விலையில் பொருட்களை வாங்குவதற்கான சிறந்த இடமாக தற்போது மாறியுள்ளன. 

இருப்பினும், இவற்றின் ஊடாக ஆர்டர் செய்யப்பட்ட பொருட்களை வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் இந்த பொருட்களுக்கு என்ன ஆனது என்பது குறித்து தற்போது சமூகத்தில் பாரிய பேசுபொருளாகவே மாறியுள்ளது.

எனவே அது தொடர்பில் சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல்கள் தொடர்பான தெளிவினை வழங்க ஃபேக்ட் கிரஸண்டோ நாம் ஆய்வொன்றை மேற்கொண்டோம்.

தகவலின் விவரம் (What is the claim)

Facebook | Archived Link

குறித்த பதிவில் AliExpress திடீரென இலங்கைக்கு விநியோகத்தை நிறுத்தியது‼️‼️‼️உலகின் முன்னணி ஒன்லைன் சந்தைகளில் ஒன்றான அலி எக்ஸ்பிரஸ், இலங்கைக்கு பல வகையான பொருட்களை விநியோகிக்கும் சேவையை நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

அதன்படி, குறித்த இணையத்தள சந்தையிலிருந்து பொருட்களை கொள்வனவு செய்யும் நுகர்வோர் தங்கள் பொருட்களை கொண்டு செல்ல மூன்றாம் தரப்பு சரக்கு பகிர்தல் சேவையைத் தேர்வு செய்யுமாறு அலி எக்ஸ்பிரஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில், அந்நிறுவனத்திடம் தொடர்பு கொண்டு தகவல் கோரிய போது, இலங்கையில் விதிக்கப்பட்டுள்ள புதிய வரிகள் தொடர்பில் தெளிவு இல்லாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவன வாடிக்கையாளர் சேவைத் துறை தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் குறிப்பிட்டுள்ளது. என தெரிவிக்கப்பட்டு கடந்த 2025.07.03 ஆம் பதிவிடப்பட்டிருந்தது.

மேலும் இதனை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையையும் எம்மால் காணமுடிந்தது.

Explainer (விளக்கமளித்தல்)

இந்த விடயம் தொடர்பில் ஆராயுமாறு எமக்கு பல கோரிக்கைகள் வந்தன, அந்த நாட்களில் பல சந்தர்ப்பங்களில் நாம் சுங்கத் திணைக்களத்தின்  ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கோடவைத் தொடர்பு கொள்ள முயற்சித்த போதிலும், அவர் எங்கள் அழைப்புகளைப் புறக்கணித்திருந்தார். மேலும், நாங்கள் தொடர்ந்து  சுங்கத் திணைக்களத்தின்  தகவல் அதிகாரியைத் தொடர்பு கொள்ள முயற்சித்த போதிலும், அவரும் தான் வேலையாக இருப்பதாகக் கூறி எமது அழைப்புகளுக்கு பதிலளிக்கவில்லை.

இருப்பினும், AliExpress மூலம் ஆர்டர் செய்யப்படும் பொருட்கள் இலங்கையின்  ஒன்லைன் சந்தையான Daraz மூலமே விநியோகிக்கப்படுகின்றன, எனவே நாங்கள் அவர்களிடம் இது குறித்தும் வினவினோம், இந்தப் பொருட்களை விநியோகிப்பதில் அவர்களுக்கும் சுங்கத் திணைக்களத்திற்கும்  இடையிலான பிரச்சினை காரணமாக, கொள்வனவாளர்கள் தங்கள் ஆர்டர்களைப் பெறுவதில் தாமதத்தை சந்திப்பதாக அவர்கள் கூறினர்.

தொழில்துறை மற்றும் தொழில்முனைவு அபிவிருத்தி பிரதி அமைச்சர்

எனவே இது தொடர்பில் தொழில்துறை மற்றும் தொழில்முனைவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க கடந்த ஜுலை 3 ஆம் திகதி தமது பேஸ்புக் பக்கத்தில்  இலங்கையின் உள்ளூர் தயாரிப்புகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கான (பார்சல்கள்) சுங்க வரி முறை மாற்றப்பட்டுள்ளது என தெரிவித்து பதிவிட்டிருந்தார்.

மேலும் பழைய முறையின் கீழ், 1 கிலோவிற்கும் குறைவான எடையுள்ள பொதிகளுக்கு 800 ரூபா மாத்திரமே வசூலிக்கப்பட்டது, மேலும் குறைவான எடையுள்ள பொருட்களுக்கு வரி இல்லாததால், இந்த இடைவெளி வர்த்தகர்களால் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்றும் அமைச்சர் மேலும் அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார். 

இதன் காரணமாக  இலங்கை சுங்கத் திணைக்களம் தற்போது பொதிகளின் எடையை விட, பொருட்களின் உண்மையான தன்மை மற்றும் மதிப்பை பிரதிபலிக்கும் HS குறியீடுகளின் அடிப்படையில் வரிகளை வசூலிக்கிறது எனவும் பிரதியமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்தப் புதிய முறைமை காரணமாக கல்வி மற்றும் ஆராய்ச்சி நோக்கங்களுக்காகக் கொண்டுவரப்படும் பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் என்ற குற்றச்சாட்டு இருப்பதாகவும், எதிர்காலத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்படும் என்றும் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க மேலும் தெரிவித்தார்.

Archived Link

இது குறித்து பிரதி அமைச்சர் ஊடகங்களுக்கு தெரிவித்த கருந்து பின்வருமாறு

சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர்

இது தொடர்பில் நாம் சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரும், மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகமுமான அருக்கோடவை மீண்டும் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டிருந்தோம். இதன்போது, சுங்கத்துறை எந்தப் பொருட்களையும் நிறுத்தவோ அல்லது வரிகளை அதிகரிக்கவோ இல்லை என்றும், சட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட வரித் தொகையை வசூலிக்கும் முறையை நெறிப்படுத்துவதே இதற்குக் காரணம் என்றும், ஆனால் இதுவரை முறையாக அது செயல்படுத்தப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

பழைய முறையானது  பொதியின் எடை அல்லது நிலையான கட்டணங்களை அடிப்படையாகக் கொண்டது என்றும், குறிப்பாக குறைந்த விலை பொருட்களைச் உட்சேர்ப்பதன் மூலம் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் மோசடிக்கு வழிவகுத்தது என்றும் அருக்கோட குறிப்பிட்டார். 

இலங்கை சுங்கத் திணைக்களம்  இப்போது பொருட்களின் HS குறியீடு வகைப்பாட்டின் அடிப்படையில் ஒரு புதிய முறைக்கு மாறியுள்ளது, இது ஒவ்வொரு பொருளின் உண்மையான தன்மை மற்றும் மதிப்பின் அடிப்படையில் தொடர்புடைய பொருட்களுக்கு முன்னர் விதிக்கப்பட்ட வரிகளை விதிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

முன்னர் காணப்பட்ட முறை தவறாகப் பயன்படுத்தப்படுவதாகக் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, சுங்கத் துறை, குரியர் நிறுவனங்கள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு முன்கூட்டியே அறிவித்திருந்தது, மேலும் செயல்படுத்துவதற்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்பே அறிவிப்பு விடுக்கப்பட்டு பின்னர் இரண்டு வாரங்களுக்கு முன்பு புதிய முறையின் செயல்முறை தொடங்கப்பட்டது என்று சுங்கத் துறையின் ஊடகப் பேச்சாளர் மேலதிக பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கோட தெரிவித்தார்.

நிர்ணயிக்கப்பட்ட வரிகளை செலுத்தும் எவருக்கும் எந்த தடையும் இல்லாமல் பொருட்களை விடுவிக்க முடியும் என்றும், இதற்காக வாடிக்கையாளர் தனிப்பட்ட முறையில் சுங்கச்சாவடிகளுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை என்றும், சம்பந்தப்பட்ட விநியோக நிறுவனங்கள் அனுமதிப் பணிகளை மேற்கொள்ளும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நிதி அமைச்சு

AliExpress மற்றும் Temu போன்ற சேவைகளில் தற்போதைய நெருக்கடி, தற்போதுள்ள அமைப்பை ஒரு சிலர் துஷ்பிரயோகம் செய்வதால் எழுந்துள்ளது என்று நிதி அமைச்சின் செயலாளர் பேராசிரியர்  ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரவித்த, நிதி அமைச்சின் செயலாளர், வணிக நோக்கங்களுக்காக பொருட்களை இறக்குமதி செய்வதற்காக முன்னர் வழங்கப்பட்ட வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, சில தனிநபர்கள் வரி செலுத்துதலையும் தவிர்த்துள்ளதாகக் கூறினார்.

வழங்கப்படும் சலுகைகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டால், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஒரு பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்றும் செயலாளர் குறிப்பிட்டார்.

அதன்படி, இதை தவறாகப் பயன்படுத்துபவர்களை அடையாளம் காண தற்போதுள்ள வழிமுறை செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் எதிர்காலத்தில் சுங்கத்துறை இதற்கான முன்மொழிவை வழங்கும் என்று நம்புவதாகவும் நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

AliExpress இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கான பொருட்கள் விநியோகிக்கும் முறைகளை நிறுத்தியுள்ளது!

புதிய சுங்க வரி சீர்திருத்தங்கள் லாபகரமான எல்லை தாண்டிய விநியோக வழிகளுக்கான அணுகலைத் தடுத்துள்ளதால், இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கான பல விநியோக முறைகளை AliExpress நிறுத்தியுள்ளது.

புதிய வரித் தேவைகள் குறித்த தெளிவு இல்லாததால், பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட இடங்களுக்கு ஆஃப்லைன் செயலாக்கத்தைத் தொடங்கியுள்ளதாக ( 9 offline processing for destination) விற்பனையாளர்களுக்கு குறுஞ்செய்தி ஒன்றின் மூலம் AliExpress உறுதிப்படுத்தியுள்ளது. Link 

AliExpress online மூலம் இலங்கைக்கு பொருட்களை விநியோகிக்கின்றதா?

எனவே, AliExpress இலங்கையில் பொருட்களை விநியோகிப்பதை நிறுத்திவிட்டதா என நாம் ஆராய்ந்த போது, அதன் மூலம் இன்னும் கொள்முதல்களை மேற்கொள்ளமுடியும் என்பதனை நாம் கண்டறிந்தோம்.

எனவே நீங்கள் ஓடர் செய்யும் போது AliExpress Choice என பட்டியலிடப்பட்டுள்ள பொருட்களை Free shipping முறையின் கீழ் பொருட்களில் குறிப்பிடப்பட்டுள்ள விலையில்  உங்களுக்கு பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.

மேலும், சில பொருட்களின் விலைகள் குறைந்தபட்ச மட்டத்தில் இருந்தாலும், அவற்றை நாட்டிற்கு கொண்டுவருவதற்கு பெரும் தொகை செலவிடப்பட வேண்டியுள்ளது.

மேலும் எந்தப் பொருட்களும் நாட்டிற்கு அனுப்பப்படாது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

தற்போது சுங்கத்திலுள்ள AliExpress மூலம் ஆர்டர் செய்யப்பட்ட பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதா?

சில சமூக ஊடக பயனர்கள் ஃபேஸ்புக் குழுவில், AliExpress மூலம் பொருட்களை ஆர்டர் செய்து, மேற்கண்ட செயல்முறை காரணமாக தங்கள் ஓர்டர்களைப் பெறாதவர்கள்  இப்போது தங்கள் பொருட்களைப் பெறுவதாகப் பதிவிட்டிருந்தனர்.

அதேபோன்று இந்த ஆர்டர்களுக்கு எந்த வரியும் வசூலிக்கப்படவில்லை என்றும் அவர்கள் Tracking History இல் குறிப்பிட்டுள்ளனர்.

Facebook | Archived Link

Facebook | Archived Link 

இது தொடர்பில் நாம் சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கோடவிடம் வினவியபோது, இலங்கைக்கு பொருட்களை இறக்குமதி செய்து விநியோகிக்கும் முகவர் நிறுவனங்கள் வரியை ஏற்க வேண்டும் என முன்னரே அறிவித்தும் அதனை உதாசீனப்படுத்தியதாகவும், அதற்கிணங்க அந்த நிறுவனங்களே பொருட்களுக்கான வரிகளை செலுத்தி அவற்றை அகற்றிக்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதன் காரணமாக, முன்கூட்டியே ஓர்டர் செய்யப்பட்ட பொருட்களுக்கு கொள்வனவாளர்கள் வரி செலுத்தாவிட்டாலும், சம்பந்தப்பட்ட விநியோக நிறுவனத்தால் வரிகள் செலுத்தப்பட்டு அவை அகற்றப்படும் என்று இருப்பினும், எதிர்காலத்தில் இந்த நிலைமை மாறக்கூடும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

HS CODE (Harmonized System code)

HS CODE என்பது உலக சுங்க அமைப்பால்  (World Customs Organization) சுங்க விடயங்களில் வணிகப் பொருட்களைத் துல்லியமாக அடையாளம் காண அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு குறியீடாகும். 200க்கும் மேற்பட்ட நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இது, வரிவிதிப்பு, வர்த்தகக் கொள்கைகள் மற்றும் புள்ளிவிபர பகுப்பாய்வுகளை நெறிப்படுத்துகிறது.

அதன் முதல் 6 இலக்கங்கள் (international code) அனைத்து நாடுகளுக்கும் பொதுவானவை, அதே நேரத்தில் கடைசி 6 இலக்கங்கள் (national code) நாட்டிற்கு நாடு மாறுபடலாம். இது தயாரிப்புக்கு தயாரிப்பு மாறுபடும், மேலும் அதே தயாரிப்புக்கு கூட, உற்பத்தியில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களைப் பொறுத்தும் இது மாறுபடும். Link 

இந்த நிலைமை தொடர்பில் மேலதிக தெளிவினை வழங்கும் அட்வகாட்டா நிறுவனம்

AliExpress மற்றும் Temu நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கும், குறைந்த மதிப்புள்ள பொருட்களை கொண்டு வரும் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்குவதற்கும் மாற்று தீர்வுகளை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்தும்  பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா பாராளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  | TikTok | YouTube

Avatar

Title:AliExpress மூலம் ஆர்டர் செய்யப்பட்டு சுங்கத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொருட்களுக்கு என்ன நடக்கும்?

Fact Check By: Suji Shabeedhran  

Result: Insight

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *