10 வருடங்களுக்கு மேலாக ஒரே தேசிய பாடசாலையில் பணியாற்றிய 9000 ஆசிரியர்கள் அடுத்த வருடம் இடமாற்றம் செய்யப்படவுள்ளனரா?

False இலங்கை | Sri Lanka


INTRO:  
பாடசாலை ஆசிரியர்களின் ஆசிரியர் இடமாற்றங்கள் கல்விச் செயல்முறையை மிகவும் திறம்பட மேற்கொள்ளவும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை உறுதிப்படுத்தவும் மேற்கொள்ளப்படுகின்றது. இந்த இடமாற்றங்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பளம் தொடர்பாக கடந்த காலங்களில் மிகவும் சர்ச்சையான சூழ்நிலை காணப்பட்டது. இதனிடையே ஆசிரியர்கள் இடமாற்றம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியான தகவல்களின் உண்மை தன்மையை ஆராய நாம் நடவடிக்கை எடுத்தோம்.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

கடந்த ஒக்டோபர் 27ஆம் திகதி தேசிய பத்திரிகையான அருணவின் முதற்பக்கத்தில், ஒரே தேசிய பாடசாலையில் பத்தாண்டுகளுக்கு மேல் சேவையாற்றிய 9000 ஆசிரியர்களை அடுத்த வருடம் முதல் இடமாற்றம் செய்ய கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக செய்தி  வெளியாகியிருந்தது.

FB| Archived Link   FB | Archived FB

தேசிய பாடசாலைகளில் பத்து வருடங்களுக்கு மேலாக பணியாற்றிய 9000 ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பாக இணையத்தளத்தில் இவ்வாறு செய்திகள் வெளியாகியிருந்தன.

நாங்கள் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் அருண செய்தி நாளிதழில் இந்த செய்தி பிரதான தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளதாக கூறி தொலைகாட்சிகளின் காலை நேர பத்திரிகை செய்தி நிகழ்ச்சிகளில் தெரிவிக்கப்பட்;டிருந்தமை காணக்கிடைத்தது. அதன் அடிப்படையில் தெரண தொலைகாட்சியின் அருண நிகழ்ச்சி சுயாதீன தொலைகாட்சியின் பத்திரிகை செய்தி மற்றும் ஹிரு தொலைகாட்சியின் பத்தரே விஸ்தர போன்ற நிகழ்;ச்சிகளில் இவ்விடயம் தெரிவிப்பட்டிருந்து.

உண்மையில் இந்த இடமாற்றங்கள் தேசிய பாடசாலைகளில் 10 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றிய ஆசிரியர்களுக்கு மாத்திரமா வழங்கப்படுகின்றன? இத்தனை ஆசிரியர்கள் தேசிய பாடசாலைகளில் 10 வருடங்களுக்கு மேலாக இடமாற்றம் பெறாமலா கடமையாற்றுகின்றனர்? இது தொடர்பில் நாம் ஆய்வை மேற்கொண்டோம்.

இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

ஒரே தேசிய பாடசாலையில் பத்தாண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு அடுத்த வருடம் முதல் இடமாற்றம் வழங்கப்படுகின்றதா?

இது குறித்து கல்வி அமைச்சின் ஆசிரியர் இடமாற்றுதல் பிரிவிடம் நாம் விசாரித்தோம். 2023ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதியுடன் 10 ஆண்டுகள் நிறைவடையும் ஆசிரியர்கள் அடுத்த ஆண்டு முதல் இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்று அவர்கள் தெரிவித்தனர். தேசிய பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் தேசிய ஆசிரியர் இடமாற்றக் கொள்கையின்படி வருடாந்தம் இடமாற்றம் செய்யப்படும் அனைத்து ஆசிரியர்களும் இதில் உள்ளடங்குவதாக கல்வி அமைச்சின் ஆசிரியர் இடமாற்றப் பிரிவினால் எமக்கு தெரிவிக்கப்பட்டது.

தேசிய பாடசாலைகளில் மாத்திரம் 10 வருடங்களுக்கு மேலாக பணியாற்றிய 9000 ஆசிரியர்கள் இல்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர். இடமாறுதல் செய்யும் அனைத்து ஆசிரியர்களின் எண்ணிக்கையே இதுவென அவர்கள் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் ஆசிரியர் இடமாற்றச் சபையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தி கலைக்க உத்தரவிட்டார். அத்தகைய முடிவை எடுக்க காரணம் க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தர மாணவர்களின் பரீட்சை மற்றும் கல்வி நடவடிக்கைகள் கடந்த காலங்களில் பல்வேறு காரணங்களினால் பாதிக்கப்பட்டமை என தெரிவித்தார். எனவே இந்த சந்தர்ப்பத்தில் ஆசிரியர்களின் இடமாறற்றத்தினால் கல்விச் செயல்பாட்டில் ஏதேனும் பாதிப்புக்கள் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கவே இவ்வாறான விடயங்கள் மேற்கொள்ளப்பட்டன.

அதன் அடிப்படையில் ஆசிரியர் இடமாற்ற சபையின் பரிந்துரையின் படி 12500 ஆசிரியர்களின் இடமாற்றங்கள் இரத்து செய்யப்பட்டிருந்தது. Link 1 | Link 2 | Link 3 | Link 4

அதே நேரத்தில் இவ்விடயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியிருந்தனர். கொழும்பு ரோயல் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது கல்லூரியின் ஆசிரியர்களின் வேண்டுகோளுக்கு இணங்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் இது ரோயலின் செயற்பாடுகளுக்கு பாதகமாக அமையும் என்பதால் இந்த இடமாற்றங்களை மேற்கொள்ளக்கூடாது என அவர்கள் கோரிக்கையை முன்வைத்தமையினால் இடமாற்றங்கள் வழங்கப்படவில்லையென ஆசிரியர் தொழிற்சங்கங்கள் குற்றச்சாட்;டுக்களை முன்வைத்துள்ளன. கல்வியமைச்சுக்கோ அல்லது கல்வியமைச்சருக்கோ இவ்விடயம் தொடர்பில் அறியகிடைத்திருக்கவில்லையெனவும் அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். Link 1

எவ்வாறாயினும் ஆசிரியர் இடமாற்றச் சபைகளை கலைத்தமை சட்டவிரோதமானதும் தன்னிச்சையானதுமான தீர்மானம் என்ற குற்றச்சாட்டை நிராகரித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, 21.03.2023 அன்று பாராளுமன்றத்தில் ஆசிரியர் இடமாற்றங்களை அங்கீகாரத்துடன் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஆசிரியர் இடமாற்ற சபை, சாதாரண தரம் மற்றும் கற்பித்தல் ஆசிரியர்கள் தவிர ஏனைய ஆசிரியர்களின் இடமாற்றம் மேற்கொள்ளப்படுமென தெரிவித்திருந்தார். அதன்படி, கொவிட் 19 காரணமாக 2020,2021,2022 ஆகிய ஆண்டுகளில் தேசியப் பாடசாலைகளில் ஆசிரியர் இடமாற்றங்களைச் செயல்படுத்த முடியவில்லை என்றும், மேலும் 8893 இடமாற்றங்கள் இடமாற்ற சபையினால் மூன்று ஆண்டுகளாக அங்கீகரிக்கப்பட்டு அவர்கள்; 10 வருடங்களுக்கும் மேலாக ஒரே பாடசாலையில் பணியாற்றி வருவதாகவும், இது குறித்து பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்தார். உயர்தர மற்றும் சாதாரண தர ஆசிரியர்கள் தவிர்ந்த ஏனைய ஆசிரியர் இடமாற்றங்களையும் அவ்வாறே நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். Link

ஆசிரியர் இடமாற்ற சபை என்றால் என்ன?

கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட 2007/20 சுற்றறிக்கையின் பிரகாரம் தேசிய ஆசிரியர் கொள்கைக்கு அமைவாக ஆசிரியர் இடமாற்ற சபைகள் நிறுவப்பட்டுள்ளன. மாணவர் சமூகம் மற்றும் ஆசிரியர்களின் அதிகபட்ச நலனை உறுதிசெய்யும் வகையில் தேசிய ஆசிரியர் கொள்கையை நடைமுறைப்படுத்துவதே இதன் நோக்கமாகும் இதன் மூலம் கல்வி செயல்முறை மிகவும் பயனுள்ள முறையில் மேற்கொள்ளப்படும்.

ஆசிரியர் இடமாற்றம் தொடர்பான முடிவுகளை ஆசிரியர் இடமாறுதல் சபை எடுக்கும். இதன்படி, பிராந்திய கல்வி அலுவலகங்கள், மாகாண கல்வி அலுவலகங்கள்; கீழும் ஆசிரியர் இடமாற்ற சபைகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

ஒரே பாடசாலையில் 10 ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு கட்டாய இடமாற்றம் மற்றும் ஆசிரியர் கர்ப்பமாக இருந்தால், பெற்றோர் நோய்வாய்ப்பட்டிருந்தால், குழந்தைகளின் பிரச்சினைகள் போன்றவற்றையும் பரிசீலித்து ஆண்டு இடமாற்றத்தின் போது இடமாற்றம் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக இடமாறுதல் நம்பிக்கையுடன் ஆசிரியர்கள் பணியாற்ற முடியும்.

இந்த ஆண்டுக்கான (2024) இடமாற்ற விண்ணப்பப் படிவங்களை ஒன்லைன் முறை மூலம் அனுப்புவதற்கான வாய்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  | TikTok

Conclusion: முடிவுஅதன்படி அடுத்த ஆண்டு இடமாற்றம் கோரி விண்ணப்பம் செய்யதுள்ள மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை சுமார் 9000 என எங்களின் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் ஆசிரியர் இடமாற்றப் பிரிவினால் உறுதிப்படுத்தப்பட்டபடி, ஒரே பாடசாலையில் 10 வருட சேவையை நிறைவு செய்த ஆசிரியர்களும் இதில் அடங்குவர், இது ஒரு சிறிய எண்ணிக்கையானவர்களே ஆசிரியர் இடமாற்றத்திற்கு உள்ளாகுவர் என கல்வி அமைச்சினால் தெரிவிக்கப்பட்டது.

எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:10 வருடங்களுக்கு மேலாக ஒரே தேசிய பாடசாலையில் பணியாற்றிய 9000 ஆசிரியர்கள் அடுத்த வருடம் இடமாற்றம் செய்யப்படவுள்ளனரா?

Written By: S G Prabu  

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *