
INTRO :
சவுதியில் நடைபெற்ற திருமணம் ஒன்றில், மணமகளின் சகோதரர் மணமகனின் குடும்பத்திற்கு 24 கரட் தங்க பிஸ்கட்டுகளை வழங்குகிறார் என ஒரு காணொளி சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):
சமூகவலைத்தளங்களில் “ ’24 காரட் தங்க பிஸ்கட் பரிசு இப்படியும் திருமணம் நடக்குது’
#Marriage #wedding #Gold #Goldbiscuit #biscuits #viral #viralvideo #viralnews #trend #trending #trendingreelsvideo #trendingvideo #trendingpost #trendingreels “என இம் மாதம் 12 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு (12.02.2026) பதிவேற்றம்செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து பலர்பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
இணையத்தில் வைரலாகின்ற குறித்த காணொளியை நன்கு அவதானித்த போது அதில் ஒரு நபர் குறித்த தங்க கட்டியை பிரிக்க முயல்வது தென்படவே, நாம் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி அதை ஆய்வு செய்தோம்.
குறித்த தேடலின் போது Treevia என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கடந்த வருடம் ஜூலை 21 ஆம் திகதி (21.07.2025) பதிவிட்டுள்ள பதிவு ஒன்று எமக்கு கிடைத்தது.
அதில் இணையத்தில் பரவி வரும் காணொளியில் உள்ள பெட்டியை போன்று, இந்த புகைப்படத்தில் உள்ள பெட்டியும் இருந்ததை பார்க்கமுடிந்தது.
அத்துடன் குறித்த காணொளியில் ‘Treevia’ நிறுவனத்தின் Logo-வான மரம் இருப்பதையும் காணமுடிந்தது.
குறித்த இன்ஸ்டாகிராம் பதிவில் ட்ரிவியா சாக்லேட் பார் பேக் என்றும், பெல்ஜிய சாக்லேட் பார்கள் சுவையாகவும் நேர்த்தியாகவும் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
தொடர்ந்து நாம் ஆய்வினை மேற்கொண்டபோது, இந்திய ஊடகமொன்றில் இது தொடர்பாக வெளியாகியிருந்த செய்தியும் எமக்கு கிடைக்கப்பெற்றது.
அதில் அரபு நாடுகளில் உயர்தர விருதுகளின் போது பாரம்பரிய ரீதியில் வழங்கப்படும் சாக்லட் என அவர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் சில உண்மை கண்டறியும் நிறுவனங்களும் இது தொடர்பாக ஆய்வறிக்கை வெளியிட்டிருந்தமை காணக்கிடைத்தது.
நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் சவுதியில் நடைபெற்ற திருமணம் ஒன்றில், மணமகளின் சகோதரர் மணமகனின் குடும்பத்திற்கு 24 காரட் தங்க பிஸ்கட்டுகளை வழங்குகிறார் என பகிரப்படும் காணொளியில் இருப்பது உண்மையான தங்க பிஸ்கட் இல்லை என்பதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது.
அத்துடன் இது தங்க பிஸ்கட் போன்ற வடிவில் தாயாரிக்கப்பட்ட சாக்லேட் என கண்டறியப்பட்டது.
எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.
Title:திருமணத்தில் மணமகளின் சகோதரர் தங்க பிஸ்கட்டுகளை வழங்குவதாக பகிரப்படும் காணொளி உண்மையா ?
Fact Check By: S.G.PrabuResult: Misleading


Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team

