
இலங்கையில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் களமிறங்கியுள்ள ஜீவன் தொண்டைமானின் ஆதரவாளர்களால் பகிரப்படும் மாதிரி வாக்குச் சீட்டு தொடர்பாக எமது ஆய்வினை நாம் மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

Raja Guy என்ற பேஸ்புக் கணக்கில் ” VOTE FOR JEEVAN 3 X 🌷X ” என்று கடந்த மாதம் 31 ஆம் திகதி (31.07.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
மேலும் இது வட்ஸ் அப் போன்ற செயலிகளில் பகிரப்பட்டு வருகின்றது.
Fact Check (உண்மை அறிவோம்)
நாம் குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு ஆய்வினை மேற்கொண்ட போது, இலங்கைத் தேர்தல் ஆணையகத்தினால் ஜுன் மாதம் 9 ஆம் திகதி (2020.06.09) வெளியாகியிருந்த வரத்தமானப் பத்திரிகையில் 1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 24(1) ஆம் பிரிவின் கீழ் வெளியான அறிவித்தலுக்கு அமைய,
தேர்தல் மாவட்டம் ஒவ்வொன்றினதும் வாக்குச்சீட்டில் அங்கீகரிக்கப்பட்ட அரசியற் கட்சி ஒவ்வொன்றினதும் பெயர், சுயேச்சைக் குழு ஒவ்வொன்றினதும் வேறு பிரித்துக் காட்டும் இலக்கம், அத்தகைய ஒவ்வொரு கட்சிக்கும் அல்லது குழுவுக்கும் குறித்தொதுக்கப்பட்ட சின்னம் என்பன காணப்படும் ஒழுங்குமுறையானது அதில் வெளியாகிருந்தது.

Election commission | Archived Link
மேலும் நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் தேர்தல் ஆணையகத்தினால் வெளியாகியிருந்த வர்த்தமானிப் பத்திரிக்கையின் அமைவாக இலங்கை சோசலிச கட்சிக்கு பிறகு ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சின்னம் மற்றும் அதன் பெயர் பதியப்பட்டிருக்க வேண்டும். எனினும் குறித்த கட்சியின் சின்னம் இதிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

இம்முறை நடைப்பெறவுள்ள தேர்தலில் ஒவ்வொரு மாவட்டங்களுக்கு தனித் தனி வாக்குச்சீட்டு அச்சிட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், இலங்கைத் தேர்தல் ஆணையகத்தினால் வெளியிடப்பட்டிருந்த ஊடக அறிக்கையின் படி நூவரெலியா மாவட்டத்தில் தேர்தல் ஆணையகத்தினால் 2020 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியற் கட்சி மற்றும் சுயேச்சை குழுக்களின் எண்ணிக்கை 25 ஆகும்.

அதற்கமைய தற்போது பகிரப்படும் வாக்குச்சீட்டில் காணப்படும் அரசியற் கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்களின் எண்ணிக்கை 24 மட்டுமே காணப்படுகின்றது.
இதற்கமைய ஜீவன் தொண்டைமான் சார்பாக இணையத்தில் பகிரப்படும் மாதிரி வாக்குச் சீட்டு பிழையானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.
Conclusion: முடிவு
மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்ட ஆதாரங்களுடன் ஜீவன் தொண்டைமான் சார்பாக இணையத்தில் பகிரப்படும் மாதிரி வாக்குச் சீட்டு பிழையானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

Title:இணையத்தில் பகிரப்படும் மாதிரி வாக்குச் சீட்டு சரியானதா?
Fact Check By: Nelson ManiResult: Misleading