
INTRO :
ஹிக்கடுவ பாதணியில் “அல்லாஹ்” பெயர் பொறித்த பாதணிகள் அச்சிட்டு விற்பனை செய்யப்படுகின்றது என தெரிவித்து சமூக வலைத்தளங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):
சமூகவலைத்தளங்களில் “ LANKA BUZZ | SOCIAL MEDIA VIRAL
ஹிக்கடுவையில் தயாரிக்கப்படும் பாதணியில் “அல்லாஹ்” என்ற எழுத்து இருப்பதாக சர்ச்சை!
இலங்கையின் ஹிக்கடுவ பகுதியில் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு பாதணியில் “அல்லாஹ்” என்ற வாசகம் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக பலரும் தங்களது கருத்துகளை வெளியிட்டு வரும் நிலையில், சம்பவம் குறித்து மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
#LankaBuzz #SriLanka #Hikkaduwa #ViralNews #SocialMedia #BreakingNews
” என இம் மாதம் 04 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு (04.08.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
நாம் முதலில் காணொளியில் தெரிவிப்பது போன்று இது உண்மையில் “அல்லாஹ்” என்ற வாசகமா என ஆராய குறித்த காணொளியில் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி ஆய்வினை மேற்கொண்ட போது 99 NAMES OF ALLAH Arabic Calligraphy in Kufi Script என்ற தலைப்பில் குறித்த பாதணியில் இருப்பதை ஒத்த வடிவமைப்பில் குறித்த எழுத்தழகியல் இருப்பது காணக்கிடைத்தது.
விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர்
இதன் விளக்கத்தினையும் தெளிவினையும் பெற நாம் விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியரை தொடர்புக்கொண்டு வினவியபோது, இது அரேபிய மொழியில் உள்ள ஒரு வித எழுத்தழகியல் வடிவில் “அல்லாஹ்” என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளதாகவும், தாமும் இதனை ஆய்வறிந்தே கண்டறிந்ததாகவும் எமக்கு குறித்த ஆதாரங்களை அனுப்பி வைத்தார்.


மேலும் குறித்த நிறுவனம் இதுபற்றி அறியாமையினால் இதனை பாதணியில் அச்சிட்டு இருக்கலாம் எனவும் தெரிவித்தார்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஊடக தொடர்பாளரை நாம் தொடர்புக்கொண்டு இது தொடர்பாக வினவியபோது, அவரும் இது அரேபிய மொழியில் உள்ள எழுத்தழகியல் வடிவம் என்பதை உறுதி செய்தார்.
ஹிக்கடுவ பாதணி நிறுவனம்
நாம் ஹிக்கடுவ பாதணி நிறுவனத்தினை தொடர்பு கொண்டு வினவியபோது அவர்கள் குறிப்பிட்ட இந்த வடிவமைப்பு, www.pinterest.com என்ற இணையதள மூலத்திலிருந்து பெறப்பட்ட ஒரு படைப்பு வடிவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.
மேலும் இது எந்தவொரு மதச் சின்னத்தையோ அல்லது எந்தவொரு சமூகத்தின் மத உணர்வுகளையோ சித்தரிக்கும் ,அவமதிக்கும், இழிவுபடுத்தும் அல்லது புண்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்படவில்லை.
இருப்பினும், அந்த வடிவமைப்பு மத ரீதியான உணர்வுகளைத் தூண்டியுள்ளது என்பதை அவர்கள் அறிந்தவுடனேயே. ஹிக்கடுவ பாதணி 24 மணி நேரத்திற்குள் வடிவமைப்பை மாற்ற உடனடி நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர்.
அத்துடன் அது தொடர்பாக ஊடக அறிக்கையினையும் வெளியிட்டுள்ளமை காணக்கிடைத்தது.

Pinterest இல் தேடல்
நாம் ஹிக்கடுவ பாதணி நிறுவனம் தெரிவித்ததை கொண்டு pinterest இணையத்தளத்தில் தேடியபோது குறித்த வடிவில் இருந்த வடிவமைப்பு புகைப்படம் கிடைக்கப்பெற்றது.
அதில் இது அரேபிய மொழி எழுத்தழகியல் என்பது மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.
மேலும் குறித்த பதிவில் “அல்லாஹ்” என்ற வாசகம் என தெரிவித்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
‘ஹிக்கடுவ செரப்பு’ வடிவமைப்பு மாற்றம் மற்றும் திருத்தம்
‘ஹிக்கடுவ செரப்பு’ (Hikkaduwa Sereppu) தயாரிப்பொன்றின் வடிவமைப்பு, ஒரு மதச் சின்னத்தை ஒத்திருப்பதாக சந்தையில் எழுப்பப்பட்டுள்ள கவலைகள் தொடர்பாக அண்மையில் எங்களது கவனம் செலுத்தப்பட்டது என்பதை அறியத்தருகிறோம்.
இந்த வடிவமைப்பு மத உணர்வுகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை அறிந்த உடனடியாக, ‘ஹிக்கடுவ செரப்பு’ விரைவாகச் செயற்பட்டு, 24 மணி நேரத்திற்குள் அவ்வடிவமைப்பைத் திருத்தியமைக்கவும் மாற்றியமைக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுத்தது.
இச்சம்பவம் தற்செயலாக ஏதேனும் நபர் அல்லது சமூகத்தின் மத அல்லது சமூக உணர்வுகளைப் புண்படுத்தியிருந்தால் அல்லது மனவேதனையை ஏற்படுத்தியிருந்தால், அதற்கு நாங்கள் எங்களது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். எந்தவொரு மதத்தையும், மதச் சின்னத்தையும் அல்லது கலாச்சார மதிப்பையும் அவமதிக்கும், புண்படுத்தும் அல்லது குறைத்து மதிப்பிடும் நோக்கத்துடன் இந்த வடிவமைப்பு ஒருபோதும் உருவாக்கப்படவில்லை என்பதை நாங்கள் வலியுறுத்த விரும்புகிறோம்.
‘ஹிக்கடுவ செரப்பு’ அனைத்து மதங்கள், கலாச்சார மதிப்புகள் மற்றும் சமூகப் பன்முகத்தன்மையை மதிப்பவதில் என்றும் உறுதியுடன் உள்ளது. எங்களது அனைத்து தயாரிப்புகளிலும் செயல்பாடுகளிலும் மிக உயரிய நேர்மை மற்றும் மரியாதையை நிலைநிறுத்தி, தொடர்ந்து பொறுப்புணர்வுடன் எங்களது வணிகத்தை நடத்துவோம்.” என ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok | Youtube
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.


Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team

