
INTRO :
இலங்கையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட நாணய குற்றிகள் என்று சில புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றமை எமக்கு காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

Karikaalan என்ற பேஸ்புக் பக்கத்தில் ” இலங்கையில் புதிதாக அறிமுகப் படுத்தப்பட்ட 500, 1000, 1500, 2000 நாணய குற்றிகள்…
#lka #sl #SriLanka #cbsl ” என கடந்த மாதம் 12 ஆம் திகதி (12.10.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.
இது தொடர்பாக நாம் இலங்கை மத்திய வங்கியின் இணையத்தளத்தில் ஆய்வினை மேற்கொண்டோம்.

இந்த தேடலின் போது இவைகள் அனைத்தும் வெவ்வேறு காலப்பகுதியில் ஞாபகார்த்த நிகழ்விற்காக அச்சிடப்பட்ட நாணயக்குற்றிகள் என கண்டறியப்பட்டது.
மேலும் இது மக்கள் பாவணையில் இல்லை என்பதும் இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
நாம் மேற்கொண்ட தேடலுக்கு அமைய இலங்கையில் புதிதாக அறிமுகப் படுத்தப்பட்ட நாணய குற்றிகள் என பகிரப்பட்ட தகவல் போலியானது என கண்டறியப்பட்டுள்ளது.
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:இலங்கையில் புதிதாக அறிமுகப் படுத்தப்பட்ட நாணய குற்றிகளா?
Fact Check By: Nelson ManiResult: False