
இந்தியாவில், ஆந்திராவில் 6 மாத பெண் குழந்தையின் உடலில் பட்டவுடன் பல்ப் எரியும் அதிசயம் என்ற செய்தி மிகவும் பிரசியடைந்து வருகின்றது.
இது குறித்து உண்மைதன்மையினை கண்டறியும் முயற்சியில் எம் குழு இறங்கியது.
தகவலின் விவரம்:

Tamil Super Scence என்ற பேஸ்புக் பக்கத்தில் “6 மாத குழந்தை தொட்டால் மின்சார பல்பு ? எரியும் அதிசயம்” நேற்று (30.09.2019) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
குறித்த பதிவில் ஒரு காணொளி பதிப்பும் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. அதில் ஒரு பத்திரிக்கையில் வெளிவந்த செய்தியுடன் குறித்த குழந்தை தொட்டதும் பல்பு ஒளிரும் வீடியோவும் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
மேலும், வீடியோவில் இருந்த பத்திரிக்கை செய்தியில் ஆந்திர மாநிலத்தில், 6 மாத குழந்தை தொட்டால் மின்சார பல்பு எரியும் அதிசயம் என்ற செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த செய்தியை கொண்டு இணையத்தில் இதுபோன்ற சம்பவங்கள் வேறு நாடுகளில் இடம்பெற்றுள்ளனவா..? என்று தேடுதலில் ஈடுப்பட்டோம்.



மேலும், இது குறித்து யூடியுப் தளத்திலும் நாம் தேடுதலில் ஈடுப்பட்டோம்.
குறித்த தேடலில் இதுபோன்று பலர் தங்களின் உடல் பாகங்கள் மற்றும் பல்பினை தொடுவதன் மூலம் குறித்த பல்பினை ஒளிர வைத்துள்ளார்.
ஆகவே, குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தன்மை மேலும் அதிகரித்தது,
நாங்கள் தொடுவதன் மூலம் ஒளிரும் பல்புகள் விற்பனைக்கு உள்ளதா..? என்று கூகுள் தேடுதலில் ஈடுப்பட்டோம்.

குறித்த தேடுதலில் எமக்கு தொடுவதன் மூலம் ஒளிரும் மந்திர பல்புக்கள் விற்பனைக்கு உள்ளதை நாம் காணக்கிடைத்தது.


குறித்த பல்புகள் இயங்கும் விதம் குறித்து தேடிய போது யூடியுப் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த வீடியோ ஒன்று காணக்கிடைத்தது.
இதில் குறித்த பல்புகள், அதனுள் பொருத்தப்பட்டுள்ள மின்கலங்களின் உதவுயுடன் இயங்குகின்றமை காணக்கிடைக்கின்றது. இது மின்சார துண்டிப்பின் போது பயன்படுத்த கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது வீட்டில் மின் இணைப்புக்களை பரிசோதனை செய்யும் டெஸ்டர் இயங்கும் விதத்தில் குறித்த பல்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நாம் குறித்த பல்பினை தொடும் போது எமது உடலின் ஊடாக பல்பினுள் இருக்கும் மின்கலத்தின் மின் அணுக்கள் கடத்தப்பட்டு மின் ஒளிர்கின்றது.
மேலும், கடந்த ஜுலை மாதம் 27 ஆம் திகதி (27.07.2019) தெலுங்கானாவில் 2 குழந்தைகள் மீது வைக்கப்படும் பல்புகள் மின்சாரம் இல்லாமலே எரிகின்றது என்று வெளியானது.

குறித்த செய்தி வெளியானதை தொடர்ந்து, தெலுங்கானாவில் உள்ள ஒரு தொலைகாட்சி நிறுவனம் குறித்த செய்தி போலியானது என்று தெரிவித்து, குறித்த இரு குழந்தைகளும் தொடுவதன் மூலம் ஒளிரும் பல்புகளை வைத்தே இவ்வாறு செய்துள்ளனர் என்று நிரூபித்து காட்டியுள்ளனர்.
முடிவு
மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 6 மாத குழந்தை தொடுவதன் மூலம் பல்பு ஒளிர்கின்றது என்ற செய்தி பிழையானது. அவர்கள் தொடுவதன் மூலம் ஒளிரும் பல்பினை பயன்படுத்தி குறித்த வீடியோவினை எடுத்துள்ளனர்.
