
ஏமன் நாட்டில் உள்ள மரம், ஆதாமின் மகன் ஆபேல் கொல்லப்பட்ட இடம் என்று கூறப்படுகிறது, வெட்டினால் இரத்தம் வடிகின்றது என்று காணொளி ஒன்று பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்றது.
குறித்த வீடியோ தொடர்பில் உண்மைத் தன்மையினை கண்டறிய நாம் ஆய்வினை மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

பரபரப்பு நீயூஸ் என்ற பேஸ்புக் கணக்கில் “ஏமன் நாட்டில் உள்ள மரம், ஆதாமின் மகன் ஆபேல் கொல்லப்பட்ட இடம் என்று கூறப்படுகிறது, வெட்டினால் இரத்தம் வடிகின்றது, உலகில் வேறெங்கும் காண முடியாத மிக அற்புதமான மரம்.. எல்லா புகழும் இறைவனுக்கே…….” என்று ஒரு வீடியோவுடன் கடந்த மாதம் 20 ஆம் திகதி (20.09.2019) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
குறித்த வீடியோவில் மரத்தை வெட்டியதும் இரத்தம் வருவது போன்று காட்சி அமைந்துள்ளது.

Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த வீடியோவின் பதியப்பட்டிருந்த கமெண்டுகளை நாம் ஆய்வு செய்த வேளையில், அதில் வைத்தியர் மாலிக் என்ற நபர் இந்த மரத்தின் பெயர் உதிரும் வேங்கை என்று கமெண்ட் செய்துள்ளதோடு, அது தொடர்பில் ஒரு லிங்கினையும் வழங்கியிருந்தார்.


Vaitiyar Malick | Archived Link
குறித்த செய்தியின் உண்மையினை கண்டறிய கூகுளில் நாம் இரத்தம் சிந்தும் மரம் என தேடுதல் செய்தோம்.
அப்பொது குறித்த மரம் தொடர்பில் சில தகவல்கள் கிடைத்தன.

இரத்தம் சிந்தும் ட்ராகன் மரங்கள்!….
ஆப்பிரிக்க காட்டுப் பகுதியில் வளரும் ஒருவகை மரங்கள் இரத்த சிவப்பு பிசின்களை சிந்துகின்றது. மரத்தின் பட்டைகளுக்கிடையில் கசியும் சிவப்பு நிறத்திலான பிசின் காய்ந்து மரத்தை வெட்டியதும் சிவப்பு நிற திரவமான வழிகிறது.
இது பார்ப்பதற்கு ரத்தம் போன்று இருப்பதால் பலரும் இதனை டிராகன் மரம் என அழைக்கின்றார்கள். பல்வேறு மருத்துவக்குணங்கள் கொண்ட இந்த மரத்தின் பல தேவைகளுக்காக வெட்டப்படுவதோடு நிறப்பூச்சுக்களுக்கும் பயன்படுகிறதாம்.

மேலும் நாம் மேற்கொண்ட ஆய்வில் குறித்த மரத்தின் தாவரவியல் பெயர் ஸ்டெரோகார்பஸ் அங்கோலென்சிஸ் (Pterocarpus angolensis) என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
Gizmodo என்ற செய்தி இணையதளத்தின் குறித்த மரம் தொடர்பில் வெளியான அறிக்கை. முழு அறிக்கை


முடிவு
மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் ஏமன் நாட்டில் உள்ள மரம், ஆதாமின் மகன் ஆபேல் கொல்லப்பட்ட இடம் என்று கூறப்படுவது, வெட்டினால் இரத்தம் வடிகின்றது, என்பது போலியான செய்தி ஆகும்.
