
இரண்டு தலை கழுகு என தெரிவிக்கப்பட்டு காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது.
எனவே அது குறித்து உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):
இரண்டு தலை கழுகு இரண்டாவது வாயைத் திறந்து திகைக்க வைத்துள்ளது… என தெரிவிக்கப்பட்டு குறித்த காணொளியானது நேற்று (2025.10.01) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
எனினும் குறித்த காணொளி பொய் என தெரிவிக்கும் விதத்தில் பலர் கமெண்ட் செய்திருந்தமையையும் எம்மால் அவதானிக்க முடிந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)
உண்மையில் இரண்டு தலைகளைக் கொண்ட கழுகு கண்டுபிடிக்கப்பட்டிருக்குமாயின், அது குறித்து சர்வதேச ஊடகங்கள் உள்ளிட்ட இயற்றை மற்றும் விலங்குகள் குறித்து துல்லியமான தகவல்களை வழங்கும் பிரத்தியேக தொலைக்காட்சிகளும் அதனை அறிக்கையிட்டிருக்கும் எனினும் நாம் மேற்கொண்ட ஆய்வில் அவ்வாறான எந்த செய்திகளும் வெளியாகவில்லை.
எனவே நாம் குறித்த காணொளியின் சில காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடுதலுக்கு உட்படுத்திய போது Science girl என்ற x தளத்தில் குறித்த காணொளியானது
கடந்த 2024 ஆம் ஆண்டு பதிவிடப்பட்டிருந்தமையை காணமுடிந்தது.
அதில் தாய் மற்றும் குஞ்சு Potoo பறவைகள் (Potoo birds) என தெரிவக்கப்பட்டே அந்த காணொளியானது பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
மேலும் நாம் இது குறித்து தொடர்ந்து ஆராய்ந்த போது Nature Vault என்ற youtube பக்கத்தில் குறித்த காணொளியை காணமுடிந்தது.
அதில் இது Potoo பறவை எனவும் இதற்கு இரண்டு முகங்கள் இருப்பதனை போன்று காட்சியளிதாலும் உண்மையில் அந்த பறவையானது தனது குஞ்சை அதன் வயிற்றுப் பகுதியில் வைத்து தன் இறக்கைகளால் மறைத்துக்கொண்டிருக்கின்றது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளியை நன்கு அவதானித்த போது அதில் குறித்த பறவை அதன் இறக்கைகளுக்குள் மறைத்து வைத்திருந்த அதன் குஞ்சின் கால்களை அவதானிக்க கூடியதாகவும் இருந்தது.

மேலும் குறித்த சமூக ஊடகப்பதிவில் இருப்பது கழுகு என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் கழுகு, அந்த காணொளியில் இருக்கும் பறவையை விட பெரிதாக இருக்கும் என்பதுடன் அதன் உடல் மற்றும் நிறத் தோற்றங்களும் அந்த பறவையை விட வேறுப்பட்டே காணப்படும்
இரண்டு பறவைகளின் வேறுப்பாட்டை கீழே காணலாம்

எனவே சமூக ஊடகங்க பதிவில் குறித்த பறவை கழுகு என குறிப்பிடப்பட்டிருந்தாலும் அது கழுகு அல்ல Potoo பறவை என்பதனையும் அறிய முடிகின்றது.
Potoo பறவைகள்
Potoo பறவைகள் தொடர்பில் நாம் ஆராய்ந்த போது, nyctibius போட்டோஸ் என்பது போட்டோஸ் குடும்பத்தில் உள்ள இனங்களில் ஒன்றாகும். போட்டோக்கள் பெரும்பாலும் பேய் பறவைகள் என்று அழைக்கப்படுகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. Link
இரவு நேரங்களில் நடமாடும் இந்த பறவையானது மத்திய மற்றும் தெற்கு அமெரிக்க பகுதிகளிலேயே அதிகளவில் காணப்படுகின்றன. பகல் நேரத்தில் இது மரக்கிளை மீது நேராக அமர்ந்திருக்கும். சாம்பல் மற்றும் கபில நிறத்தில் புள்ளிகளுடன் இருக்கும் அதன் இறக்கைகள் மரப் பட்டை போலவே தோற்றமளிக்கும். ஏதாவது ஆபத்து வரும்போது கண்களை இறுக மூடிக்கொண்டு, ஆடாமல் அசையாமல் அமர்ந்து தன்னை அந்த பறவை பாதுகாத்துக்கொள்ளும். Link
எங்களதுசமூகவலைதளபக்கங்களைபின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் இரண்டு தலை கழுகு என பகிரப்பட்ட காணொளி தவறானது என்பதுடன், அது Potoo பறவை தன் குஞ்சை தனது வயிற்றுப்பகுதியில் அதன் இறக்கைளினால் மறைத்து வைத்திருக்கும் காணொளியே என்பது கண்டறியப்பட்டது.
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.
Title:இரண்டு தலை கழுகு என பகிரப்படும் காணொளி உண்மையா?
Fact Check By: Suji shabeedharanResult: Misleading


