
INTRO :
மெலனியா டிரம்ப் ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பு என ஒரு புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):

சமூகவலைத்தளங்களில் “கசிந்த எப்ஸடீன் பைல்ஸ்.
டரம்மின் மனைவி மெலானியா எப்ஸ்டீனுடன் தொடர்பாம் “என இம் மாதம் 04 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு (10.04.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
கடந்த 2019 இல் சிறையில் இறந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன், மெலானியா டிரம்பைக் கட்டிப்பிடித்து முத்தமிடுவதை போன்ற புகைப்படம் ஒன்று, எப்ஸ்டீன் கோப்புகளிலிருந்து கசிந்துள்ளதாக பகிரப்படும் குறித்த புகைப்படத்தினை நாம் கூகுள் ரிவஸ் இமேஜீனை பயன்படுத்தி ஆய்வு செய்தோம்.
குறித்த தேடலின் போது, கடந்த பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி (05.02.2026) இணையத்தில் தற்போது வைரலாகும் அந்த புகைப்படம் முதல் முதலில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

அதன்படி, சமூக ஊடகப் பதிவில் தென்பட்ட குறியீட்டை பயன்படுத்தி, அமெரிக்க நீதித் துறையின் எப்ஸ்டீன் கோப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை அறிய நீதித் துறையிடம் (DOJ) ஆய்வினை மேற்கொண்டபோது, எந்த புகைப்படமோ அல்லது ஆவணமோ கிடைக்கவில்லை.
இருப்பினும், அந்த எண்ணின் கடைசி சில இலக்கங்கள் மாற்றப்பட்டபோது, சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட புகைப்படத்தை ஒத்த நான்கு புகைப்படங்கள் எப்ஸ்டைனின் கோப்புகளில் கண்டறியப்பட்டன.

அமெரிக்க நீதித்துறையால் பெறப்பட்ட புகைப்படங்களை நாம் ஆய்வு செய்தபோது, தற்போது சமூக ஊடகங்களில் பரவி வரும் எப்ஸ்டீனுடன் மெலானியா டிரம்ப் இருக்கும் புகைப்படம் இடம்பெறவில்லை.
மேலும், நீதித்துறையின் இணையதளத்தில் உள்ள புகைப்படங்கள் குறித்த பெண்ணின் முகம் மறைக்கப்பட்டிருப்பதை காணக்கிடைத்தது.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட புகைப்படங்களில் எப்ஸ்டீன் ஒரு மோதிரம் அணிந்திருப்பது போல் காணக்கிடைத்தது. ஆனால் நீதித்துறையினால் வெளியிடப்பட்ட புகைப்படங்களில் எப்ஸ்டீன் அத்தகைய மோதிரம் அணிந்திருப்பது தெரியவில்லை.
செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கல்
நாம் சமூகவலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகின்ற மெலனியா டிரம்ப் மற்றும் எப்ஸ்டீன் புகைப்படத்தின் தோற்றம் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழ நாம் குறித்த புகைப்படத்தினை செயற்கை நுண்ணறிவை கண்டறியும் கருவியை பயன்படுத்தி ஆய்வு செய்தோம்.
குறித்த ஆய்வின் போது இது செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட புகைப்படம் என கண்டறியப்பட்டது.


மெலனியா டிரம்ப் மறுப்பு
ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும், இருவரையும் இணைத்து பேசும் எந்தவொரு கூற்றும் “இன்றே முடிவுக்கு வர வேண்டும்” என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப் கூறியுள்ளார்.
எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நாடாளுமன்ற விசாரணைகளை நடத்த வேண்டும் என்று அமெரிக்காவின் முதல் பெண்மணி அழைப்பு விடுத்தார். BBC TAMIL
மேலும் சர்வதேச உண்மை சரிபார்க்கும் நிறுவனங்களும் இது தொடர்பாக ஆய்வறிக்கைகள் மேற்கொண்டிருந்தமையும் காணக்கிடைத்தது.
நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் மெலனியா டிரம்ப் ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பு என பரவும் புகைப்படமானது செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என கண்டறியப்பட்டது.
எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.


Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team

