
INTRO :
மின்சார ஸ்கூட்டரின் பற்றரி வெடித்ததும் அதில் பயணித்த நபர் தூக்கி வீசப்பட்டார் என தெரிவித்து சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):
சமூகவலைத்தளங்களில் “ கமின்சார #ஸ்கூட்டரின் பற்றரி வெடித்ததும் அதில் பயணம் செய்த நபரை எப்படி தூக்கி வீசியது என்பதையும் இந்த காணொளியில் ” என இம் மாதம் 12 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு (12.07.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
இணையத்தில் வைரலாகின்ற காணொளியை காட்சிகளாக மாற்றி நாம் அவதானித்த போது, எந்த உத்தியோகப்பூர்வ செய்தி இணையத்தளங்களும் இந்த விபத்து குறித்து செய்தி வெளியிட்டிருந்தமை எம்மால் காணக்கிடைக்கவில்லை.
ஆகவே நாம் இணையத்தில் வைரலாகின்ற குறித்த காணொளியை பலமுறை நன்கு அவதானித்தபோது, ஒரு இடத்தில் குறித்த ஸ்கூட்டரின் முன்பக்கம் மற்றும் பின்பக்கம் இரண்டும் நொடி பொழுதில் மாறுவதை அவதானிக்க கிடைத்தது.
குறிப்பாக பின்பக்கம் இருக்கும் பிரேக் லைட் முன்பக்கம் இருப்பதை போன்று தோற்றம் அளித்தது.

ஆகவே குறித்த காணொளி மீது சந்தேகம் எழவே நாம் இதனை செயற்கை நுண்ணறிவு கருவியை பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்டபோது, இது செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தமை உறுதியானது.

எனவே நாம் மேற்கொண்ட ஆய்வின் மூலம் மின்சார ஸ்கூட்டரின் பற்றரி வெடித்ததும் அதில் பயணித்த நபர் தூக்கி வீசப்பட்டார் என பரவும் தகவல் தவறானது என கண்டறியப்பட்டது.
எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.


Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team

