நீர்கொழும்பு சிறைச்சாலையின் பெண் கைதி தொடர்பில் பகிரப்படும் கதை உண்மையா? 

False இலங்கை | Sri Lanka

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த தினங்களில் கைதிகள் குழுக்களிடையே இடம்பெற்ற மோதல் முழு நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு சம்பவமாக பதிவாகியுள்ளது. இந்த மோதல் சம்பவம் இடம்பெற்ற போது சில பெண்கைதிகள் சிறைச்சாலை கூரை மீது ஏறி ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த காணொளியை ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதன்பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கைதிகளில் ஒருவரின் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு அந்த பெண் மருத்துவ பீடத்திற்கு தெரிவானவர் எனவும், காதலனால் அவர் சிறைவாசம் அனுபவிக்கின்றார் எனவும் குறிப்பிடப்பட்டு சமூக ஊடகங்களில் ஒரு கதை பகிரப்பட்டு வருகின்றது.

எனவே இந்த பெண் குறித்து பகிரப்படும் கதை உண்மையா என ஆராயுமாறு எமது வாசகர்களிடம் இருந்து வந்த கோரிக்கையை தொடர்ந்து ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் இந்த கதை தொடர்பான உண்மையை அறிய ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின் விவரம் (What is the claim):

FB | Archived Link

சிறைக்கம்பிகளுக்குள் சிதைந்த மருத்துவக் கனவு… 

அவள் பெயர் “சந்துனி”.

பதுளையில் பிறந்து, கொழும்பில் படித்த

படிப்பிலும், விளையாட்டிலும் சாதனை படைத்த பெண்.

5ஆம் ஆண்டு Scholarship சாதனை.

பாடசாலை Head Girl.

Netball Champion.

பெற்றோரின் ஒரே கனவு.

ஆனால் விதி, ஒரு WhatsApp காதல் வடிவில் வந்தது.

“நண்பனோட பார்சல் ஒன்னு வாங்கி வைக்கிறியா?”

காதலன் கேட்ட சாதாரண உதவி…

அதுதான் அவள் வாழ்கையை புரட்டிப் போட்டது.

A/L முடிவு வந்தது.

மாவட்டத்திலேயே Top Marks.

Medical Faculty Selection ஆகிட்டா.

ஆனா அதே நாள்…

அவ கைல சிறை விலங்கு.

நீர்கொழும்பு சிறையில.

தான் சுமந்தது போதைப்பொருள்னு தெரியாம

ஒரு போலி காதலுக்காக ஏமாந்து போனா.

சிறைக்கூரை மேல நின்னு போராடினப்போ

அவளோட அழகான முகம் Viral ஆச்சு.

ஆனா அதுக்கு பின்னாடி இருந்தது

ஒரு சிதைந்த மருத்துவ கனவும்,

ஒரு குடும்பத்தோட கண்ணீரும்.

காதலிப்பது தப்பில்ல…

ஆனா கண்மூடித்தனமா நம்புறது எவ்வளவு ஆபத்துனு

சந்துனியோட கதை சொல்லுது.

அவ குற்றவாளியா? இல்ல ஒரு போலி காதலோட பலியா?

சட்டம் தன் வேலைய செய்யும்.

ஆனா இந்த கண்ணீர்…

இன்னும் ஏமாற போற பல இளம் பெண்களுக்கு

ஒரு பெரிய எச்சரிக்கை மணி! 

உங்க பிள்ளைகள்கிட்ட இந்த கதைய சொல்லுங்க என தெரிவிக்கப்பட்டு இந்த பெண்ணின் புகைப்படத்துடன் அந்த கதை சொல்லப்பட்ட பதிவு 2026.07.11 ஆம் திகதி பகிரப்பட்டிருந்தது.

மேலும் இந்த தகவலை பகலும் சமூக ஊடகங்களில் பகிரந்திருந்தமையை காணமுடிந்தது.

Fb | Fb | Fb | Fb

Fact Check (உண்மை அறிவோம்)

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தின் போது கூரையின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட பெண் கைதிகள் தொடர்பான செய்திகள் மற்றும் காணொளிகள் ஊடகங்களில் வெளியாகியிருந்தன. Link | Link

அதன் பின்னரே சமூக ஊடகங்களில் இவ்வாறானதொரு கதை அந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண் கைதி ஒருவர் தொடர்பில் எழுதப்பட்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தது. ஆனால் இவ்வாறான ஒரு கதை எந்தவொரு பிரதான ஊடகங்களிலும் வெளியாகவில்லை.

சமூக ஊடகங்களில் இந்த பெண்ணின் படத்துடன் பகிரப்பட்ட அனைத்து கதைகளிலும் புலனாய்வு ஊடகவியலாளர் நளிந்த தனரஞ்சன் என்பவரே இந்த பெண்ணின் சோகக் கதையை வெளிகொண்டுவந்துள்ளார் என குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆகவே நாம் உண்மையில் இந்த நளிந்த தனரஞ்சன் என்பவர் யார் அவர் ஒரு ஊடகவியலாளரா என்பது தொடர்பில் ஆய்வினை மேற்கொண்டபோது, நளிந்த தனரஞ்சன் என்பவரின் பேஸ்புக் பக்கத்தினை கண்டறிதோம். ஆனால் அதில் அவர் ஊடகவியலாளர் என குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. அதில் அவர் ஒரு புகைப்படக் கலைஞர் என்றே குறிப்பிடப்பட்டிருந்தமையை எம்மால் காணமுடிந்தது. 

மேலும் அவரின் பேஸ்புக் பக்கத்தினை நாம் ஆய்வு செய்த போது மேற்குறிப்பிட்ட பதிவுகளில் குறிப்பிட்டிருந்ததனைப் போன்று அந்த பெண்ணின் கதையை அவர் வெளியிட்டிருந்ததுடன் அந்த பதிவின் இறுதியில் புலனாய்வு ஊடகவியலாளர் நளிந்த தனரஞ்சன் என குறிப்பிடப்பட்டிருந்தமையையும் எம்மால் அவதானிக்க முடிந்தது.

எனினும் அவர் பகிர்ந்த இந்த கதையின் உண்மை பின்னணி தொடர்பில் அறியும் நோக்கில் நாம் நளிந்த தனரஞ்சனை தொலைபேசியில் தொடர்புகொண்டு வினவியிருந்தோம். இதன்போது தான் அந்த பெண் கைதி தொடர்பில் பதிவிட்ட கதை தனது கற்பனை கதை எனவும் அந்த பெண் பற்றி தனக்கு எதுவும் தெரியாது எனவும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் கடந்த தினங்களில் சிறைச்சாலை கலவரத்தின் போது பெண் கைதிகள் சிறைச்சாலை கூரை மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது இந்த பெண் கவனத்தை ஈர்த்திருந்ததாகவும் அதன் காரணமாக தான் அந்த பெண்ணை வைத்து ஒரு கற்பனை கதையை எழுதியதாகவும் சிரித்துக்கொண்டே குறிப்பிட்டார். மேலும் இந்த விடயம் இவ்வாறு சமூக ஊடகங்களில் வைரலாகும் என தான் நினைக்கவில்லை எனவும், ஆனால் சிலருக்கு இது கற்பனை கதை என தெரியும் எனவும் அவர் எம்மிடம் தெரிவித்தார்.

அதேபோன்று அவர் இதற்கு முன்னரும் இவ்வாறான கற்பனை கதைகளை எழுதி தனது சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

அதனடிப்படையில் சமூக ஊடகங்களில் பெண் கைதியின் புகைப்படத்துடன் பகிரப்படும் கதை உண்மை அல்ல என்பதுடன் அது  நளிந்த தனரஞ்சன் என்ற புகைப்படக் கலைஞரின் ஒரு கற்பனை கதை என்பதனையும் அறியமுடிகின்றது.

நீர்கொழும்பு சிறைச்சாலை

எனினும் குறித்த சமூக உடகங்களில் பகிரப்படும் பெண் கைதி தொடர்பில் நாம் நீர்கொழும்பு சிறைச்சாலையை தொடர்புகொண்டு வினவியிருந்தோம். இதன்போது எந்தவொரு கைதிகளின் விபரங்களையும் சாதாரணமாக வெளியிட முடியாது என அவர்கள் எமக்கு தெரிவித்தனர்.

மேலும் இந்த பெண் கைதி தொடர்பில் பகிரப்பட்ட கதை தவறானது எனவும் அது தொடர்பில் விரிவான விளக்கத்தினையும் இலங்கையின் ஊடகவியலாளர் ஒருவர் வெளியிட்ட அறிக்கையை இங்கே காண்க

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  |TikTok| Youtube

Conclusion: முடிவு

எனவே எமது ஆய்வின் அடிப்படையில் நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தின் போது கூரையில் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண் கைதிகளில் ஒரு கைதியின் சோகக் கதை என தெரிவித்து அவரின் புகைப்படத்துடன் பகிரப்பட்ட கதையானது போலியானது என்பதுடன் குறித்த பதிவுகளில் புலனாய்வு ஊடகவிலாளர் என குறிப்பிடப்பட்ட  நளிந்த தனரஞ்சன் ஒரு ஊடகவியலாளர் அல்ல என்பதுடன் இது அவரால் எழுதப்பட்ட ஒரு கற்பனை கதை மாத்திரமே என்பதுவும் எமது ஆய்வுகளில் கண்டறிப்பட்டது.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.

Result Stamp

Title: நீர்கொழும்பு சிறைச்சாலையின் பெண் கைதி தொடர்பில் பகிரப்படும் கதை உண்மையா?

Fact Check By: Suji Shabeedharan

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *