INTRO :
ராஜஸ்தான் கூட்டு துஷ்பிரயோக சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி மரணம் என தெரிவித்து சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):

சமூகவலைத்தளங்களில் “ கடத்திச் செல்லப்பட்டு 32 வெறி. நாய்களால் வேட்டையாடப்பட்ட 13 வயது. சிறுமி மரணம்! Video ” என இம் மாதம் 09 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு (09.07.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
ராஜஸ்தான் கூட்டு துஷ்பிரயோக சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி மரணம் என பகிரப்படும் தகவல் தொடர்பாக முதலில் இந்திய பிரதான ஊடகங்களில் இது குறித்து செய்திகள் வெளியிடப்பட்டுள்ளதா என ஆய்வினை மேற்கொண்டோம்.
அவ்வாறான செய்திகள் எதுவும் பிரதான ஊடகங்களில் வெளியிடப்பட்டு இருக்கவில்லை என ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது.
ராஜஸ்தான் கூட்டு வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணா இது..?
ராஜஸ்தான் மாநிலத்தில் முச்சக்கரவண்டியில் பவணித்த 13 ஆவது வயது சிறுமியை கொடுமை செய்த சம்பவம் இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சிறுமி ஒருவரின் புகைப்படத்தினை பயன்படுத்தி குறித்த ராஜஸ்தான் கூட்டு துஷ்பிரயோக சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் மரணம் என பதிவிட்டு பகிர்ந்துள்ளனர்.
குறித்த புகைப்படத்தினை ரிவர்ஸ் இமேஜ் தேடுதலுக்கு உட்படுத்தி நாம் ஆய்வினை மேற்கொண்டபோது, அந்த காணொளியில் இருந்த சிறுமியின் புகைப்படம் கடந்த மே மாதம் திடீர் மாரடைப்பால் குறித்த சிறுமி மரணித்ததாகவும், தற்போது இடம்பெற்ற சம்பவத்துடன் தொடர்பு படுத்தி குறித்த புகைப்படத்தினை பகிரவேண்டாம் என ஒரு இன்ஸ்டெகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.
மேலும் குறித்த கணக்கில் இது தொடர்பாக விளக்கத்தினை தெளிவு படுத்தி காணொளிகளும் பகிரப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.
ஸ்ரீகங்காநகர் பொலிஸ் பிரிவு
பாதிக்கப்பட்ட சிறுமி நலமுடன் உள்ளார் என்றும், அவர் அவரின் பெற்றோருடன் உள்ளார் என்றும் ஸ்ரீகங்காநகர் பொலிஸ் நிலையத்தின் எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்த பதிவும் எமக்கு காணக்கிடைத்தது.

இது தொடர்பாக சில உண்மை கண்டறியும் நிறுவனங்களும் ஆய்வினை மேற்கொண்டிருந்தமையும் எமது ஆய்வின் மூலம் காணக்கிடைத்தது.
ராஜஸ்தான் கூட்டு வன்கொடுமை சம்பவம்
ராஜஸ்தான் கூட்டு வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு நண்பர் இருந்துள்ளதாகவும்,அவரைச் சந்திப்பதற்காக ஸ்ரீ கங்காநகரிலிருந்து நூறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள விஜயநகருக்குச் சிறுமி சென்றுள்ளார். அங்கே, அவளது சமூக ஊடக நண்பர் அச்சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பொலிஸ் விசாரணையில் கிடைத்த தகவல்களின்படி, அதன் பிறகு அந்தச் சிறுமி இரவில் விஜயநகரிலிருந்து பேருந்து மூலம் கங்காநகரை அடைந்து, அங்கிருந்து ஒரு ரிக்ஷாவில் ஏறியுள்ளார்.
சிறுமி வீட்டிற்கு திரும்பாததால், அவளது தாய் பல்வேறு இடங்களில் அவளைத் தேடி, உறவினர்களிடமும் விசாரித்துள்ளார். இருப்பினும், ஜூன் 22 ஆம் திகதி வரை சிறுமி வீட்டிற்குத் திரும்பாததால், தாய் பொலிஸ் நிலையத்திற்குச் சென்றுள்ளார்.
“சிறுமியின் தாய் பொலிஸ் நிலையத்திற்கு வருவதற்கு முன்பே, அந்தச் சிறுமிக்கு நடந்த சம்பவம் குறித்த தகவல் பொலிஸாருக்கு கிடைத்ததுள்ளது. அவர்கள் குறித்த சிறுமியைச் சென்றடைந்து, குற்றம் சாட்டப்பட்டவரைக் கைது செய்துள்ளனர்.
மேலும் “குறித்த சம்பவத்தின் வழக்கு மகளிர் பொலிஸ் நிலையத்துடன் தொடர்புடையது என்பதால், மகளிர் பொலிஸ் நிலையப் பொறுப்பாளரும், குழந்தை நலக் குழு உறுப்பினர்களும் வந்திருந்ததாகவும், குறித்த சிறுமியை பொலிஸார் மகளிர் பொலிஸ் அதிகாரிகளிடம் ஒப்படைத்தோம் என ஊடகம் ஒன்றிற்கு குறித்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்திருந்தார். bbc.com
எனவே நாம் மேற்கொண்ட ஆய்வின் மூலம் ராஜஸ்தான் கூட்டு துஷ்பிரயோக சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி மரணம் என பரவும் தகவல் தவறானது என கண்டறியப்பட்டது.
ராஜஸ்தானில் சிறுமி பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய காணொளிகளா இவை?
எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.

Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team

