
INTRO :
AGS தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் கதாநாயகனாக அறிமுகமாகிறார் என சமூகவலைத்தளங்களில் ஒரு செய்தி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):

சமூகவலைத்தளங்களில் “AGS தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் கதாநாயகனாக அறிமுகமாகிறார்!
#AGSEntertainment | #SaiAbayanker | #ArchanaKalpathi | #ProvokeMedia “என இம் மாதம் 13 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு (13.04.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
நாம் முதலில் AGS Entertainment நிறுவனத்தின் உத்தியோகப்பூர்வ சமூகவலைத்தளங்களில் இது தொடர்பாக ஆய்வினை மேற்கொண்டபோது, சாய் அப்யங்கர் கதாநாயகனாக நடிக்க இருப்பதான அறிவிப்புக்கள் எதுவும் பதிவிட்டிருக்கவில்லை.
மாறாக AGS Entertainment நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியான அர்ச்சனா கல்பதி அவர்களின் உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில் கடந்த 13 ஆம் திகதி (13.04.2026) சாய் அப்யங்கர் இருக்கும் புகைப்படத்தினை பதிவிட்டிருந்தமை காணக்கிடைத்தது.
குறித்த பதிவில் எமது அடுத்த தயாரிப்பிற்கு சாய் அப்யங்கரை வரவேற்பதாக அவர் பதிவிட்டிருந்தமை காணக்கிடைத்தது. அதில் எங்கும் இவர் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார் என குறிப்பிட்டிருக்கவில்லை.
தொடர்ந்து நாம் தேடியபோது, சாய் அப்யங்கர் சமீபத்தில் வழங்கிய நேர்காணலில் இது தொடர்பாக கேள்வி எழவே அதனை முற்றாக மறுதளித்த அவர் புதிய தயாரிப்பில் தான் இசையமைக்கவுள்ளதாக
தெரிவித்திருந்தார்.
அத்துடன் இந்திய ஊடகங்களிலும் குறித்த தகவல் போலியானது என செய்திகள் வெளியாகியிருந்தமையும் எமது ஆய்வின் மூலம் காணக்கிடைத்தது.

நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் AGS தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் கதாநாயகனாக அறிமுகமாகிறார் என பரவும் செய்தி தவறானவை என கண்டறியப்பட்டது.
எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.


Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team

