Binance, Bybit போன்ற கிரிப்டோகரன்சி பரிமாற்ற தளங்கள் இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளதா?

Misleading சமூகம் | Society
Subscribe to our WhatsApp Channel


INTRO :

சமீபத்தில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவிய பதிவொன்றில், பினன்ஸ் (Binance) மற்றும் பைபிட் (Bybit) போன்ற முன்னணி கிரிப்டோகரன்சி பரிமாற்ற தளங்களை இலங்கை அரசாங்கம் நாட்டிற்குள் தடை செய்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. 

எனவே இந்த தகவல் தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின்விவரம் (What is the claim):

Facebook | Archived Link 

குறித்த பதிவில்அரசாங்கத்தால் இந்நாட்டில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் சட்டவிரோத சூதாட்டங்களை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, நேற்றிரவு முதல் அனைத்து சூதாட்ட இணையத்தளங்களையும் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” எனத் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், “சூதாட்டங்கள்” (Gambling) என அதன் பின்னணிப் படத்தில் Binance மற்றும் Bybit இலச்சினைகளுடன் (Logos) “TRADING BAN” என பெரிய அளவில் இடப்பட்டிருந்தது. 

மேலும் அதனை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையை காணமுடிந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

இலங்கை டிஜிட்டல் பொருளாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ அறிவிப்பின்படி, இந்நாட்டில் முறையான அனுமதியின்றி இயங்கி வந்த 24 சட்டவிரோத ஒன்லைன் சூதாட்ட மற்றும் பந்தய (betting) இணையத்தளங்கள் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் தடை செய்யப்பட்டுள்ளன. 

2025 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க சூதாட்ட ஒழுங்குமுறை அதிகாரசபைச் சட்டத்தின் (Gambling Regulatory Authority Act, No. 17 of 2025) கீழ் தாாபிக்கப்பட்ட சூதாட்ட ஒழுங்குமுறை அதிகாரசபையின் (GRA) அறிவித்தலுக்கமைய, தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் (TRCSL) அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுக்கும் இந்த இணையத்தளங்களை முடக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 

இலங்கையில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் முடக்கப்பட்டுள்ள சட்டவிரோத ஒன்லைன் சூதாட்டம் மற்றும் பந்தய (Online Gambling & Betting) இணையத்தளங்கள் 24 இன் முழுமையான பட்டியல் பின்வருமாறு

  1. 1xbet.com
  2. bet365.com
  3. stake.com
  4. betway.com / betway.com/en-lk
  5. 22bet.com
  6. melbet.com
  7. unibet.com
  8. betfair.com
  9. dafabet.com
  10. 1win.com
  11. spinbetter.com
  12. 10cric.com
  13. bc.game
  14. megapari.com
  15. pin-up.bet
  16. mostbet.com
  17. parimatch.com
  18. betwinner.com
  19. linebet.com
  20. 4rabet.com
  21. rajabets.com
  22. dbbet.com
  23. coldbet.com
  24. WinWin

இதற்குள் எந்தவொரு கிரிப்டோகரன்சி பரிமாற்ற தளமும் (Binance / Bybit) உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை என்பது அவதானிக்க முடிகின்றது.

இலங்கை மத்திய வங்கி (CBSL) கிரிப்டோகரன்சியை நாட்டின் உத்தியோகபூர்வ சட்டப்பூர்வ நாணயமாக (Legal Tender) அங்கீகரிக்கவில்லை என்பதுடன், அது தொடர்பில் ஆபத்து எச்சரிக்கைகளையும் விடுத்துள்ளது. எவ்வாறாயினும், Binance போன்ற தளங்களில் இலங்கையர்கள் வர்த்தகம் செய்வதைத் தடை செய்யும் வகையில் எந்தவொரு புதிய சட்டமும் பிறப்பிக்கப்படவில்லை. 

எவ்வாறாயினும், “தடை செய்யப்படவில்லை” என்பதற்காக, கிரிப்டோ என்பது இந்நாட்டில் முறையான ஒழுங்குமுறைக்கு உட்பட்ட, பாதுகாப்பான பரிவர்த்தனை முறை என்று அர்த்தமல்ல என்பதைக் நினைவில் கொள்ள வேண்டும். கிரிப்டோ வர்த்தகம் இலங்கையில் இன்னும் சட்டப்பூர்வமாக முறையான ஒழுங்குமுறைக்கு உட்படுத்தப்படவில்லை என்பதுடன், பணம் இழக்க நேரிட்டால் அரசாங்கத்திலிருந்தோ அல்லது சட்டத்திலிருந்தோ எந்தப் பாதுகாப்பும் கிடைக்காது. மேலும், 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க வெளிநாட்டு நாணயச் சட்டத்தின் கீழ், வங்கிகள் வழங்கும் பற்று/கடன் அட்டைகளை (Debit/Credit Cards) கிரிப்டோ பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. 

மேலும், கிரிப்டோகரன்சிக்கு சட்டப்பூர்வ நாணய அந்தஸ்து (Legal Tender) இல்லாவிட்டாலும், அதிலிருந்து கிடைக்கும் வருமானம் விகத்திற்கு உட்பட்டது என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது

பைனன்ஸ் – Binance 

Binance என்பது நாளாந்த வர்த்தக அளவு (Trading Volume) அடிப்படையில் உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பிரபல கிரிப்டோகரன்சி பரிமாற்ற தளமாகும்.

Bitcoin, Ethereum உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கிரிப்டோகரன்சிகளை வாங்கவும், விற்கவும், பாதுகாப்பாக சேமித்து வைக்கவும் இது வசதியளிக்கிறது.

இலங்கையில் இதன் P2P (Peer-to-Peer) வலையமைப்பு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் இலங்கையர்கள் வங்கிக் கணக்குகள் (Commercial Bank, HNB, Sampath) அல்லது EzCash / mCash போன்ற உள்நாட்டு முறைகளைப் பயன்படுத்தி நேரடியாக ரூபாயில் (LKR) கிரிப்டோவை வாங்கவும் விற்கவும் முடியும்.

Spot Trading, Futures Trading, மற்றும் கிரிப்டோவைச் சேமித்து வைத்து வட்டி ஈட்டக்கூடிய Binance Earn போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இதில் காணப்படுகின்றன.

2023 ஆம் ஆண்டில் அமெரிக்க நீதித்துறையுடன் பணமோசடி மற்றும் தடைகள் மீறல் குற்றச்சாட்டுகளின் கீழ் 4.3 பில்லியன் அமெரிக்க டொலர் (US$4.3bn) சாதனை அளவிலான சமரச உடன்படிக்கையில் Binance ஈடுபட்டதுடன், அதன் நிறுவனரும் குற்றத்தை ஒப்புக்கொண்டிருந்தார். பியூச்சர்ஸ்/கடன் வாங்கிய வர்த்தகம் (Futures/Leverage) சில்லறை வர்த்தகர்களுக்கு (Retail Traders) மிக அதிக நட்ட அபாயத்தைக் கொண்டுள்ளது.

பைபிட் – Bybit 

Bybit என்பது சமீப காலத்தில் உலகிலும் இலங்கையிலும் மிக வேகமாகப் பிரபலமடைந்த உலகின் முன்னணி கிரிப்டோகரன்சி பரிமாற்ற தளமாகும்.

Binance ஐப் போலவே கிரிப்டோ வர்த்தகத்திற்கு இது வழிவகுத்தாலும், பைபிட் மிகவும் பிரசித்தி பெற்றுள்ளமைக்கு காரணம்  மிக வேகமான மற்றும் உயர் மட்டத்திலான Futures/Derivatives Trading தொழில்நுட்பமாகும்.

Binance ஐப் போலவே Bybit இலும் வெற்றிகரமான LKR P2P சந்தை காணப்படுகிறது. Binance இல் கணக்கு சரிபார்ப்பு (KYC) அல்லது சட்டப்பூர்வ கட்டுப்பாடுகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் இலங்கையைச் சேர்ந்த பல வர்த்தகர்கள் மாற்று மற்றும் பிரதான தளமாக Bybit ஐப் பயன்படுத்துகின்றனர்.

இதன் வாடிக்கையாளர் சேவை (Customer Support) மிகவும் வினைத்திறனானது என்பதுடன், புதிய கிரிப்டோ நாணயங்களைச் சந்தையில் அறிமுகப்படுத்துவதில் (Launchpad செய்வதில்) Bybit முன்னணியில் திகழ்கிறது.

வங்கி அட்டைகள் முடக்கப்பட்டுள்ளதால், இலங்கையர்கள் இந்த இரண்டு தளங்களிலுமே பரிவர்த்தனைகளை மேற்கொள்வது சட்டப்பூர்வமாகப் பாதுகாப்பான P2P (நபரிடமிருந்து நபருக்கு மேற்கொள்ளப்படும் வங்கிப் பரிமாற்றங்கள்) முறையின் ஊடாக மட்டுமே ஆகும்.

2025 பெப்ரவரி மாதத்தில் Bybit வரலாற்றிலேயே மிகப்பெரிய கிரிப்டோ திருட்டுக்கு (சுமார் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள எதிரியம் (Ethereum), வட கொரியாவின் Lazarus குழுவினரால்) உள்ளானது. எனவே, எந்தவொரு பரிமாற்ற தளமும் முழுமையான பாதுகாப்பானது அல்ல; வைப்பீடுகள், ஹேக்கர் தாக்குதல்கள் மற்றும் பணத்தை மீளப் பெற்றுக்கொள்வதில் கட்டுப்பாடுகள் போன்ற ஆபத்துகள் காணப்படுகின்றன.

இலங்கையில் ஒன்லைன் சூதாட்டம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி (CBSL) மற்றும் அரசாங்கம் சமீபத்தில் எடுத்த நடவடிக்கைகள் 

இலங்கை மத்திய வங்கி (CBSL) மற்றும் நிதி அமைச்சும் இணைந்து நாட்டின் நிதி அமைப்பின் பாதுகாப்பிற்காகவும், வெளிநாட்டுச் செலாவணி சட்டவிரோதமாக வெளியேறுவதைத் தடுப்பதற்காகவும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஒன்லைன் சூதாட்ட தளங்கள் ஊடாக நடைபெறும் பணமோசடி மற்றும் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குப் பணம் பாய்வதைத் தடுப்பதற்காக மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவு (FIU) மற்றும் வணிக வங்கிகள் இணைந்து செயற்படுகின்றன.

வெளிநாட்டு ஆன்லைன் சூதாட்ட தளங்களுக்காக இலங்கையின் வங்கிகளால் வழங்கப்பட்டுள்ள Credit/Debit அட்டைகள் மற்றும் ஏனைய உள்நாட்டு இலத்திரனாவப் பரிமாற்ற முறைகள் (Local Payment Channels) நேரிடையாகப் பயன்படுத்தப்படுவது மத்திய வங்கி ஒழுங்குவிதிகளின் கீழ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

“Be Scam Proof” இன் கீழ், ஒன்லைன் நிதி மோசடிகள் மற்றும் சூதாட்ட இணையத்தளங்களில் முதலீடு செய்வதால் ஏற்படும் நிதி நஷ்டங்கள் குறித்து மத்திய வங்கி தொடர்ச்சியாகப் பொதுமக்களை விழிப்புடன் இருக்கச் செய்து வருகிறது.

எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  |TikTok | Youtube

Conclusion: முடிவு

எனவே எமது ஆய்வின் அடிப்படையில் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் பதிவுகள் தவறானவை. அனுமதியற்ற ஆன்லைன் சூதாட்ட மற்றும் பந்தய (Online Gambling/Betting) இணையத்தளங்களை மாத்திரமே தவிர அரசாங்கமும் ஒழுங்குமுறை அதிகாரசபைகளும் தடை செய்துள்ளது, தவிர Binance அல்லது Bybit போன்ற கிரிப்டோ பரிமாற்ற தளங்களை அல்ல எனபது கண்டறியப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், “தடை செய்யப்படவில்லை” என்பது “பாதுகாப்பானது” அல்லது “சட்டப்பூர்வமாகப் பாதுகாக்கப்படுவது” என்று அர்த்தமல்ல. கிரிப்டோ என்பது இதுவரை முறையான ஒழுங்குமுறைச் சட்டம் இல்லாத ஒரு முறையே என்பதுடன், கிரிப்டோ வர்த்தகத்தை அவரவர் சொந்த அவதானத்திலேயே  மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.

Result Stamp

Title: Binance, Bybit போன்ற கிரிப்டோகரன்சி பரிமாற்ற தளங்கள் இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளதா?

Fact Check By: Suji Shabeedharan

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *