பாராளுன்ற உறுப்பினர்களின் சம்பளம் அதிகரிப்பட்டதாக பகிரப்படும் தகவல் தொடர்பான தெளிவுபடுத்தல்!!!

Misleading அரசியல்
Subscribe to our WhatsApp Channel


INTRO :

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கடந்த 2026 ஆகஸ்ட் 6 அன்று பாராளுமன்றத்தில் தனது சம்பளப் பட்டியலைக் காண்பித்து, நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாதச் சம்பளமும் படிகளும் 60,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதனால் சமூக வலைத்தளங்களில் பல்வேறு வகையான விவாதங்கள் ஏற்பட்டதோடு, பொய்யான தகவல்களும் பகிரப்பட்டு வந்தன. 

எனவே அது குறித்த உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின்விவரம் (What is the claim):

Facebook | Archived Link

அரசாங்கம் ஆசிரியர்களின் சம்பளப் பட்டியலைக் காட்டிக் காட்டி பொறாமை கொள்ளும் பலருக்கு, இப்படிப்பட்ட விடயங்கள் மட்டும் ஏன் கண்ணில படுவதில்லை? 😃😃😃

“பாராளுமன்ற உறுப்பினர்களின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படவில்லை; ஆனால் எரிபொருள் கொடுப்பனவு ரூ.60,000-ஆல் உயர்த்தப்பட்டுள்ளதாம்!” 😁

பெயர் மட்டும் மாறினாலும், மாத இறுதியில் கைக்கு வரும் மொத்தத் தொகை அதிகரித்திருப்பது உண்மையல்லவா?

இத்தகைய பொருளாதார கஸ்ட்டமான காலத்தில், அரசாங் ஊழியர்களுக்கும் இதுபோன்ற வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்ட கொடுப்பனவுகள் வழங் முடியாதா? 🥹

அதோடு, அதில் அறவிடப்பட்டுள்ள வரி (Tax) தொகையைப் பார்த்து மட்டும் ஆச்சரியப்பட வேண்டாம்… அதிக சம்பளம் பெறுவோருக்கு அது இன்னும் சிந்திக்க வேண்டிய விடயமாக இருக்கலாம். என தெரிவித்து கடந்த 8 ஆம் திகதி பகிரப்பட்டிருந்தது.

மேலும் அதனை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையை காணமுடிந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா வெளியிட்ட கருத்து

மேற்கண்ட சமூக ஊடகப் பதிவுகள் உருவாவதற்கு அடிப்படையாக அமைந்தது, பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, தனது பாராளுமன்ற உறுப்பினர்களின் மாதாந்த சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை 60,000 ரூபாவால் அதிகரித்துள்ளதாகவும், மொத்தத் தொகை 484,000 ரூபாவாக உயர்ந்துள்ளதாகவும் பாராளுமன்றத்தில் வெளியிட்ட கருத்தாகும் 

Facebook 

பாராளுமன்ற உறுப்பினரால் அங்கு வெளியிடப்பட்ட ஜூன் மற்றும் ஜூலை மாத பாராளுமன்றச் சம்பளப் பற்றுச்சீட்டுகளின் பிரதிகளின்படி, அவரது மொத்த மாதாந்த வருமானம் 415,169.93 ரூபாவாகும். வரிகள் மற்றும் பிற கழிப்புகளுக்கு பிறகு நிகரச் சம்பளம் 395,861.22 ரூபாவாகும். அதில் அடிப்படைப் கொடுப்பனவுகள், தொலைபேசி கொடுப்பனவு (ரூ. 50,000), அலுவலகப் கொடுப்பனவு  (ரூ. 100,000) போன்றன அடங்கியிருந்தன. 

நாடாளுமன்ற உறுப்பினர்களின் அடிப்படைச் சம்பளம் அதிகரிக்கப்படவில்லை – பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர 

பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர பாராளுமன்றத்தில், பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பள உயர்வு குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டதுடன், பாராளுமன்ற உறுப்பினர்களின் அடிப்படைச் சம்பளம் எந்தவிதத்திலும் அதிகரிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

சம்பளப் பற்றுச்சீட்டில் உள்ள தொகைகள் மாறுவதற்கான உண்மையான காரணம் எரிபொருள் கொடுப்பனவாகும் என்பதோடு, நாட்டில் நிலவும் தற்போதைய சந்தை எரிபொருள் விலைகளுக்கு ஏற்ப, கொடுப்பனவுகளை பெறத் தகுதியுள்ள அனைத்து அரசாங்க அதிகாரிகளின் எரிபொருள் கொடுப்பனவுகளையும் அரசாங்கம் திருத்தியமைத்துள்ளது. 

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் சம்பளப் பற்றுச்சீட்டிலும், ஜூன் மாதத்தில் 179,707.93 ரூபாவாக இருந்த எரிபொருள் கொடுப்பனவு, ஜூலை மாதத்தில் 244,300.46 ரூபாவாக விலை சூத்திரத்திற்கு ஏற்ப மாற்றப்பட்டுள்ளது. இது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் அல்லாமல், அத்தகைய கொடுப்பனவுக்கு உரிமைபெற்ற அனைத்து உயர் அரசாங்க அதிகாரிகளுக்கும் பொதுவாக மேற்கொள்ளப்பட்ட விலைச் சீரமைப்பே தவிர, அரசாங்கத்தால் சிறப்பாக வழங்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பள உயர்வு அல்ல. 

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார 

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார கடந்த ஜூன் 06 ஆம் திகதி ஹிரு தொலைக்காட்சியின் ‘பலய’ (Balaya) நிகழ்ச்சியில், பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதா என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில், பாராளுமன்ற உறுப்பினரின் சம்பளம் 54,000 ரூபா வரம்புக்கு உட்பட்டது என்றும், சம்பளம் அதிகரிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டார். பாராளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்படும் எரிபொருள் லீட்டர் அளவுக்கான கொடுப்பனவே அவர் இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் தவறாகப் புரிந்துகொள்ளும் வகையில் விளக்கியுள்ளதாகத் தெரிவித்தார். அர்ச்சுனா யாழ்ப்பாணத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு வருவதால், அதிக எரிபொருள் கொடுப்பனவு பெறும் சில பாராளுமன்ற உறுப்பினர்களில் அவரும் ஒருவர் என்றும், இன்றைய எரிபொருள் சரிசெய்தலுடன் அவருக்குக் கிடைக்கும் 500 லீட்டர் எரிபொருளுக்கான தொகையையே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

Facebook 

பாராளுமன்ற உறுப்பினரின் அடிப்படைச் சம்பளம் 

பாராளுமன்ற உறுப்பினரின் அடிப்படைச் சம்பளம் 54,285.00 ரூபாவாக 2006 ஆம் ஆண்டே இறுதியாக நிலைநிறுத்தப்பட்டது. அன்று முதல் கடந்த 20 ஆண்டுகளுக்கு நெருங்கிய காலம் முழுவதும் இந்த அடிப்படைச் சம்பள மதிப்பில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த நிலையான மட்டத்தைப் பேணிவருவதற்கு செல்வாக்கு செலுத்திய வரலாற்றுப் பின்னணியும் காரணங்களும் பின்வருமாறு: 

2006 நவம்பர் மாத பாராளுமன்றத் தீர்மானம் 

2006 நவம்பர் 23 ஆம் திகதி பாராளுமன்றம் ஏகமனதாக ஒரு சிறப்புத் தீர்மானத்தை நிறைவேற்றியது. அதனூடாக, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் அடிப்படைச் சம்பளம், நீதித் துறையின் உயர் அதிகாரியான மேல்நீதிமன்ற நீதிபதியின் அடிப்படைச் சம்பளத்திற்கு இணையாக அமைக்கப்பட வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, அப்போது அந்தச் சம்பளம் 54,285 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டது. 

2018 ஆம் ஆண்டு அரசாங்க சேவை சம்பளச் சுற்றறிக்கையின்படி மேல்நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம் திருத்தப்பட்டமையைத் தொடர்ந்து, 2006 ஆம் ஆண்டுத் தீர்மானத்தின்படி பாராளுமன்ற உறுப்பினர்களின் அடிப்படைச் சம்பளத்தையும் 120,000 ரூபாவாக 215 வீதத்தினால் அதிகரிப்பதற்கான யோசனை ஒன்று அப்போதைய சபாநாயகர் கரு ஜயசூரிய அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டது. 

ஆனால், அப்போது  நாட்டில் ஏற்பட்ட கடுமையான மக்கள் எதிர்ப்பும் அரசியல் உறுதியற்ற தன்மையும் காரணமாக, அந்த அடிப்படைச் சம்பளத்தை அதிகரிக்கும் யோசனை கடைசி வினாடியில் இடைநிறுத்தப்பட வேண்டியிருந்தது. அதன் விளைவாக, அடிப்படைச் சம்பளம் 54,285 ரூபா மட்டத்திலேயே தொடர்ந்தும் நின்றது. 

அரசாங்க சேவையின் சம்பளக் கட்டமைப்புகள் பலமுறை மாற்றப்பட்ட போதிலும், எந்தவொரு அரசாங்கமும் பாராளுமன்ற உறுப்பினர்களின் அடிப்படைச் சம்பளத்தை மாற்றுவதற்கான புதிய வர்த்தமானி அறிவித்தல்களையோ அல்லது மசோதாக்களையோ சமர்ப்பிக்கவில்லை 

இதன் காரணமாக, பாராளுமன்ற உறுப்பினர்களின் அடிப்படைச் சம்பளம் அப்படியே இருக்க, அவர்களின் மாதாந்த மொத்த வருமானம் அதிகரிப்பதற்கு அடிப்படைச் சம்பளம் காரணமல்ல; மாறாக, இலங்கை பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ கொடுப்பனவுகளின் கீழ் உள்ள தொலைபேசி, அலுவலகம் மற்றும் சந்தை விலைக்கு ஏற்ப மாற்றமடையும் எரிபொருள் கொடுப்பனவுகள் மட்டுமே அதற்கு காரணமாகும். 

இலங்கை பாராளுமன்ற உறுப்பினரின் அடிப்படைப் சம்பளம் 54,285.00 ரூபாவாக இலங்கை பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ தரவுகளால் இவ்வாறு உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. 

பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான உத்தியோகபூர்வ நடைமுறை 

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளங்கள் மற்றும் கொடுப்பனவுகளை சட்டரீதியாகத் திருத்துவது அல்லது அதிகரிப்பது பிரதான இரண்டு முறைகளின் ஊடாக இடம்பெறுகிறது. 

பாராளுமன்றச் சட்டம் அல்லது தீர்மானம் மூலம்

பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளங்களும் கொடுப்பனவுளும் 1983 ஆம் ஆண்டின் 4 இலக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் (படிகள்) சட்டத்தினால் (Establishment of MP Allowances Act) கட்டுப்படுத்தப்படுகின்றன. சம்பளத்தை அதிகரிப்பதாக இருந்தால், அது தொடர்பான தீர்மானம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை வாக்குகளுடன் அது நிறைவேற்றப்பட வேண்டும். 

அரசாங்க சேவை சம்பளச் சுற்றறிக்கைகளுடன் தொடர்புபடுதல்: 

பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் உயர் அரசாங்க அதிகாரிகளின் சம்பள  அளவுகோலுக்கு (உதாரணமாக மேல்நீதிமன்ற நீதிபதியின் சம்பளத்திற்கு) இணையாக அமைக்கப்பட்டுள்ளமையால், பொதுவாக முழு அரசாங்க சேவையிலும் அடிப்படைச் சம்பளத் திருத்தம் ஏற்படும் சந்தர்ப்பங்களில், அதற்கு இணங்க பாராளுமன்ற உறுப்பினர்களின் அடிப்படைப் சம்பளமும் தானாகவே புதுப்பிக்கப்படும். 

சம்பளப் பட்டியலில் தொகையை மாற்றும் பிற வழிமுறைகள்

ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் அடிப்படைச் சம்பளம் 54,285 ரூபாவாக இருப்பினும், அவர்களுக்குக் கிடைக்கும் மொத்த மாதாந்த வருமானம் (Gross Salary) 400,000 ரூபாவைக் தாண்டுவதற்குக் காரணம், விலைச் சூத்திரங்களின் அடிப்படையில் கொடுப்பனவுகள் இற்றைப்படுத்தப்படுவதேயாகும்.

எரிபொருள் கொடுப்பனவு

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எரிபொருளுக்காக நிலையான தொகை வழங்கப்படுவதில்லை. அவர்கள் தெரிவு செய்யப்பட்ட மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு இடையேயான தூரத்திற்கு ஏற்ப குறிப்பிட்ட லிட்டர் அளவு (உதாரணமாக: கொழும்புக்கு 283.94 லிட்டர், கம்பஹாவுக்கு 355.58 லிட்டர்) ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த லிட்டர் அளவிற்கான பணம், ஒவ்வொரு மாதமும் முதலாம் திகதியன்று நிலவும் லங்கா ஐ.ஓ.சி அல்லது சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (CPC) டீசலின் தற்போதைய சந்தை விலையின் (Current Market Price of Diesel) அடிப்படையிலேயே வழங்கப்படுகிறது.

தானாகவே மாற்றமடைதல்

சந்தையில் எரிபொருள் விலை ஏற்றத்தாழ்வடையும் போதோ அல்லது அரசாங்கம் உயர் அரசாங்க அதிகாரிகளின் எரிபொருள் லிட்டர் எல்லைகளைத் திருத்தும் போதோ, புதிய வர்த்தமானி அறிவித்தல் அல்லது சம்பளச் சட்டம் எதுவும் இன்றியே பாராளுமன்ற உறுப்பினர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் தொகை தானாகவே மாற்றமடைகிறது. அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் சம்பளப் பட்டியலில் 60,000 ரூபா மாற்றம் காட்டப்பட்டதும், அரசாங்கம் பொதுவாக அரசாங்க அதிகாரிகளுக்கு மேற்கொண்ட இந்த எரிபொருள் கொடுப்பனவு விலை சரிசெய்தல் காரணமாகவே ஆகும்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.

Result Stamp

Title: பாராளுன்ற உறுப்பினர்களின் சம்பளம் அதிகரிப்பட்டதாக பகிரப்படும் தகவல் தொடர்பான தெளிவுபடுத்தல்!!!

Fact Check By: Suji Shabeedharan

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *