
ஈரான் போர்களத்திலிருந்து ‘எங்களுக்கு போர் வேண்டாம்’ என அமெரிக்க பெண் இராணுவ வீராங்கனை அழும் காணொளி மற்றும் புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை காணமுடிந்தது.
எனவே அது குறித்த உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim):

குறித்த பதிவில் ஈரான் போர்க்களத்திலிருந்து கண்ணீருடன் கூக்குரல்… ‘எங்களுக்கு போர் வேண்டாம்!’”
உலகமே கவனிக்க வேண்டிய ஒரு வீடியோ…
ஈரான் சம்பந்தமான பதற்றமான போர்நிலையிலிருந்து ஒரு அமெரிக்க பெண் ராணுவ வீராங்கனை வெளியிட்ட குரல் இது!
“நாங்கள் மிகவும் சோர்வடைந்துவிட்டோம்…
இந்தப் போர் எங்களுடைய விருப்பமில்லை…
நாங்கள் இதை தேர்ந்தெடுக்கவில்லை…”
ஒவ்வொரு நிமிடமும் மரண பயம்
ஒவ்வொரு நாளும் மன உளைச்சல்
ஒவ்வொரு இரவும் உயிர் பிழைப்பதற்கான போராட்டம்
“எங்களுக்கு வெற்றிகளோ, ஆக்கிரமிப்புகளோ தேவையில்லை…
அமைதியான வாழ்க்கை மட்டும் வேண்டும்!”
“எனக்கு இருக்கும் ஒரே ஆசை – பாதுகாப்பாக என் வீட்டிற்கு திரும்ப வேண்டும்…
என் குடும்பத்துடன் அமைதியாக வாழ வேண்டும்…”
இந்த வார்த்தைகள் ஒரு பெண்ணின் கண்ணீரல்ல…
ஆயிரக்கணக்கான வீரர்களின் உள்ளங்குரல்!
வீரர்களே போர் வேண்டாம் என்று கத்தும் நிலையில்…
இன்னும் இந்த உலகம் போரை தொடர வேண்டுமா?
Iran போரின் நிழலில் மனித உயிர்கள் சிதறிக்கிடக்கின்றன…
Donald Trump மற்றும் உலக தலைவர்களே…
அதிகாரம் முக்கியமா?
மனித உயிர்களா முக்கியம்?
அமைதி தான் உண்மையான வெற்றி!
உங்கள் கருத்து என்ன?
போர் வேண்டுமா?
அமைதி வேண்டுமா?
கருத்தில் சொல்லுங்கள்
அனைவருக்கும் பகிருங்கள் – இந்த குரல் உலகம் கேட்கட்டும்! என தெரிவித்து 2026.04.06 ஆம் திகதி பகிரப்பட்டிருந்தது.
மேலும் சில சர்வதேச x தள கணக்குகளிலும் இந்த காணொளி பகிரப்பட்டிருந்தமையை காணமுடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
மேற்குறிப்பிட்ட காணொளி உண்மை எனில் அது குறித்து சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கும் எனினும் நாம் மேற்கொண்ட ஆய்வில் அவ்வாறான எந்த செய்திகளும் வெளியாகவில்லை என்பதனை அறியமுடிந்தது.
குறித்த காணொளியை நாம் உற்று நோக்கினால், சில விபரங்கள் ஒரு தருணத்திலிருந்து மற்றொரு தருணத்திற்கு மாறிக்கொண்டிருப்பதை காணலாம். இப்படிப்பட்ட ஒற்றுமையற்ற மாற்றங்கள் AI மூலம் உருவாக்கப்பட்டதற்கான அடையாளங்களாகும்.
அவரின் உடையிலுள்ள கொடி, பதக்கங்களில் உள்ள நட்சத்திர வடிவங்களின் எண்ணிக்கை மற்றும் திசை என்பன மாறிக்கொண்டிருப்பதை அவதானிக்கலாம். மேலும், அவரின் கழுத்தில் இருக்கும் மச்சம் போன்ற ஒரு அடையாளம் காணொளி முழுவதும் மறைந்து மீண்டும் தோன்றுகின்றது.
ஒவ்வொரு காட்சியிலும் சில விபரங்கள் மாறும் விதத்தினை புகைப்படங்களாக மாற்றி பின்வருமாறு தெளிவுபடுத்தியுள்ளோம்.

எனவே மேற்குறிப்பிட்ட காணொளியில் காணப்பட்ட சில அசாதாரண மாற்றங்கள் காரணமாக நாம் இந்த காணொளியை Ai Detective Tool ஐ பயன்படுத்தி ஆய்விற்கு உட்படுத்தியபோது இந்த காணொளி செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்டுள்ளமை உறுதியானது.

எங்களது சமூகவலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page IInstagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் “போர் வேண்டாம்“ என அமெரிக்க பெண் இராணுவ வீராங்கனை போர்களத்திலிருந்து அழுவதாக பகிரப்பட்ட காணொளி மற்றும் புகைப்படம் தவறானது என்பதுடன் அது செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.


