இஸ்ரேல் போர் விமானங்களை லேசர் பாதுகாப்பு அமைப்பு அழித்ததாக பகிரப்படும் காணொளி உண்மையா?

Misleading

Subscribe to our WhatsApp Channel


INTRO :

இஸ்ரேலின் போர் விமானங்களை, லேசர் பாதுகாப்பு அமைப்பு அழித்ததாக தெரிவித்து ஒரு காணொளி சமூக ஊடகங்ககளில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது.

எனவே அந்த காணொளி தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின்விவரம் (What is the claim):

Facebook | Archived Link

குறித்த பதிவில் ஈரானைத் தாக்க வந்த இஸ்ரேல் போர் விமானங்கள்– லேசர் பாதுகாப்பு அமைப்பு அழித்ததாக தகவல்! என தெரிவித்து கடந்த 2026.08.09 ஆம் திகதி இந்த காணொளி பகிரப்பட்டிருந்தது.

 Fact Check (உண்மை அறிவோம்)

மேற்குறிப்பிட்ட காணொளி உண்மை எனில் சர்வதேச ஊடகங்களில் அந்த செய்திகள் வெளியாகியிருக்கும் ஆனால் நாம் மேற்கொண்ட ஆய்வில் அவ்வாறான எந்த செய்திகளும் வெளியாகவில்லை என்பது உறுதியானது.

மேலும் மேற்குறிப்பிட்ட காணொளியில் நம்பமுடியாத மற்றும் இயற்கைக்கு மாறான பல விடயங்களையும் எம்மால் அவதானிக்க முடிந்தது

விமானங்களின் வடிவம் துல்லியமாக இல்லை: இறக்கைகள் மற்றும் உடற்பகுதியில் சிதைவுகள் (distortions) காணப்படுகின்றன; அவை ஒன்றோடொன்று ஒத்துப்போகவில்லை.

இயக்கம்: விமானங்கள் எந்தவிதமான உண்மையான விமான இயற்பியல் விதிகளுக்கும் உட்படாமல், காற்றில் மிதப்பது போன்ற மிகையான மென்மையான அசைவுகளுடன் நகர்கின்றன. மேலும், அவற்றின் வேகம் அல்லது உயரத்தில் எந்தவிதமான தர்க்கரீதியான மாற்றங்களும் இல்லை.

செயற்கையான வெடிப்பு: வெடிப்பின் போது உருவாகும் மேகம் மிகைப்படுத்தப்பட்ட முறையில் வட்டமாகவும் சமச்சீராகவும் உள்ளது. மேலும், இதில் தீப்பிழம்புகளோ, சிதறல்களோ அல்லது வெடிப்பு ஏற்படுவதற்கான படிப்படியான நிலைகளோ காணப்படவில்லை.

சுற்றுச்சூழல் மீதான பாதிப்பு இல்லை: வெடிப்பு நடந்ததாகக் காட்டப்படும் நகரத்தில் எந்தவிதமான பாதிப்புகளும் இல்லை. தூசியோ, அதிர்வோ அல்லது ஒளியில் மாற்றமோ இல்லை. இவ்வளவு பெரிய வெடிப்பு ஏற்பட்டால், அது தெளிவான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

ஆகவே குறித்த காணொளி செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்டுள்ளதா என்பதனை அறிவதற்காக நாம் அந்த காணொளியின் சில காட்சிகளை AI Detective Tool இற்கு உட்படுத்தி ஆய்வினை மேற்கொண்ட போது இந்த காணொளியானது செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்டுள்ளமை உறுதியானது.

மேலும் நாம் இந்த காணொளி தொடர்பில் தொடர்ந்து ஆய்வினை மேற்கொண்டபோது, காஷிஃப் கண்காணிப்பகம் (Kashif Observatory) இந்த காணொளி செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்டுள்ளதாக அறிக்கையிட்டிருந்தது. 

எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….


Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  |TikTok | Youtube


Conclusion: முடிவு

எனவே எமது ஆய்வின் அடிப்படையில் இஸ்ரேலின் போர் விமானங்களை ஈரானின் லேசர் பாதுகாப்பு அமைப்பு அழித்ததாக பகிரப்படும் காணொளி செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.

Result Stamp

Title: இஸ்ரேல் போர் விமானங்களை லேசர் பாதுகாப்பு அமைப்பு அழித்ததாக பகிரப்படும் காணொளி உண்மையா?

Written By: Suji Shabeedharan

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *