முதலமைச்சராக விஜய் பொறுபேற்றதன் பின்னர் 1 கோடி மதிப்புள்ள குட்கா பொருட்கள் எரிக்கப்பட்டதா ?

Misleading சர்வதேசம் | International
Subscribe to our WhatsApp Channel

INTRO :

முதலமைச்சராக விஜய் பொறுபேற்றதன் பின்னர் 1 கோடி மதிப்புள்ள குட்கா பொருட்கள் எரிக்கப்பட்டதாக  தெரிவித்து சமூகவலைத்தளங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமையை காணக்கிடைத்தது.

எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின்விவரம் (What is the claim):

facebook Link  |  Archived Link

சமூகவலைத்தளங்களில் “முதல் நாளில் முதல் அமைச்சர் ஆணைக்கு இணங்க 1 கோடி மதிப்புள்ள குட்கா பொருள் எரிப்பு. காவல் துறைக்கு நன்றி📈🔥

கொத்தடிமை நாய்ங்களா  see more.

.‼️“என இம் மாதம் 11 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு  (11.05.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

முதலமைச்சராக விஜய் பொறுபேற்றதன் பின்னர் 1 கோடி மதிப்புள்ள குட்கா பொருட்கள் எரிக்கப்பட்டதாக ஒரு காணொளி இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. நாம் இது குறித்து இந்திய ஊடகங்களில் செய்தி வெளி வந்துள்ளனவா என ஆய்வினை மேற்கொண்டோம்.

அவ்வாறான செய்திகள் எதுவும் எமக்கு கிடைக்கப்பெறவில்லை. ஆகவே குறித்த காணொளியின் சில பகுதிகளை புகைப்படமாக மாற்றி ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்தபோது, தற்போது வைரலாகின்ற காணொளி கடந்த மாதம் 11 ஆம் திகதி (11.04.2026) பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியிருந்த காணொளி கிடைக்கப்பெற்றது.

“செஞ்சியில் ரூபாய் 1 கோடி மதிப்புள்ள 4 டன் குட்கா பொருளை தீவைத்து எரித்த காவல்துறையினர்” என குறித்த பதிவில் பதிவிட்டிருந்தமை காணக்கிடைத்தது.

இது தொடர்பாக மற்றைய ஊடகங்களில் வெளியாகியிருந்த செய்தியும் எமக்கு கிடைக்கப்பெற்றது.

நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் முதலமைச்சராக விஜய் பொறுபேற்றதன் பின்னர் 1 கோடி மதிப்புள்ள குட்கா பொருட்கள் எரிக்கப்பட்டதாக பரவும் காணொளி தவறானது என கண்டறியப்பட்டது.

எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  |TikTok| Youtube

Conclusion: முடிவு

எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Result Stamp

Title: முதலமைச்சராக விஜய் பொறுபேற்றதன் பின்னர் 1 கோடி மதிப்புள்ள குட்கா பொருட்கள் எரிக்கப்பட்டதா ?

Fact Check By: S.G.Prabu

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *