
அரசியல் காரணங்களால் சர்வதேச கிரிக்கெட் சபையினால் (ICC) இலங்கை கிரிக்கெட் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் தடைவிதிக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் பல பதிவுகள் பகிரப்பட்டிருந்தன.
எனவே இது குறித்த உண்மையை அறிய ஃபேக்ட்கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim):

குறித்த பதிவில் அரசியல் காரணங்களால் சர்வதேச கிரிக்கெட் சபை (ICC) ஒரு வருடத்திற்கு இலங்கை கிரிக்கெட் அணியை சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தடை செய்துள்ளது என தெரிவிக்கப்பட்டு பகிரப்பட்டிருந்தது.
மேலும் பலரும் இதனை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையை காணமுடிந்தது


Fact Check (உண்மை அறிவோம்)
சர்வதேச கிரிக்கெட் சபை (ICC) இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஒரு வருட சர்வதேச கிரிக்கெட் தடை விதித்துள்ளதா என்பதை உறுதிப்படுத்துவதற்காக, முதலில் நாம் ICC இன் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் சமூக ஊடகப் பக்கங்கள் மூலம் நாம்ஆய்வு மேற்கொண்டோம். ஆனால், அத்தகைய எந்த அறிவிப்பும் ICC இன் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது சமூக ஊடகங்கப் பக்கங்களில் வெளியிடப்படவில்லை.
ICC நிறுவனம் இவ்வாறான தடை ஒன்றை விதித்திருந்தால், அது குறித்து உள்நாட்டின் முக்கிய ஊடகங்களிலும் சர்வதேச ஊடகங்களிலும் கண்டிப்பாக செய்தி வெளியாகியிருக்க வேண்டும். அதன்படி, நாம் மேற்கொண்ட ஆய்வில் எந்த முக்கிய ஊடகமும் இத்தகைய செய்தியை வெளியிடவில்லை என்பதும் தெரியவந்தது.
இலங்கை கிரிக்கெட் அணி, ICC இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முழு உறுப்பினர் நாடாக பட்டியலிடப்பட்டுள்ளது

இலங்கை கிரிக்கெட் சபையின் ஊடகப் பேச்சாளர்
இலங்கை கிரிக்கெட் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க ஏதேனும் தடை விதிக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய, இலங்கை கிரிக்கெட் சபையின் ஊடகப் பேச்சாளரை நாம் தொடர்புகொண்டோம்.
இதன்போது, சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் தவறானது என்பதுடன, ICC மூலம் அத்தகைய எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும் கிரிக்கெட் அணியின் எதிர்வரும் சுற்றுப்பயணங்கள் திட்டமிட்டபடி அட்டவணைப்படி நடைபெறுகின்றன என்பதுடன் இலங்கை கிரிக்கெட்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் தகவலின்படி, ஆண்கள் கிரிக்கெட் அணி 2026 ஜூன்/ஜூலை மாதங்களில் மேற்கிந்தியத் தீவுகள் (West Indies) அணிக்கு எதிராக நடைபெறவுள்ள அடுத்த தொடரில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2023 ஆம் ஆண்டில், ICC இலங்கை கிரிக்கெட் அணிக்கு 79 நாட்களுக்கு தற்காலிகத் தடை விதித்தது
2023 ஆம் ஆண்டில் Sri Lanka Cricket மீது விதிக்கப்பட்ட தடை, ICC அமைப்பினால் விதிக்கப்பட்ட உறுப்பினர் இடைநீக்கம் ஆகும். இந்த தடை, கிரிக்கெட் நிர்வாகத்தில் அரசின் தலையீடு (அரசியல் காரணங்கள்) இடம்பெற்றதாகக் கருதப்பட்டதன் அடிப்படையில் விதிக்கப்பட்டது, மேலும் அது 79 நாட்கள் அமுலில் இருந்தது.
ICC விதிமுறைகளின் 2.4 (d) பிரிவின் படி, அணித் தேர்வு மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் உள்ளிட்ட செயல்பாடுகளில் அரசின் தலையீடு இருக்கக் கூடாது என்ற நிபந்தனை உள்ளது. இந்த நிபந்தனை மீறப்பட்டதாலேயே இந்தத் தடை விதிக்கப்பட்டது.
2024 ஜனவரி 28 அன்று, இந்தத் தடை ICC மூலம் நீக்கப்பட்டது
அப்போது புதிதாக நியமிக்கப்பட்ட விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இடைக்காலக் குழுவை ரத்து செய்து,இலங்கை கிரிக்கெட்டின் சுயாட்சியை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்ததையடுத்து, ICC இந்த தடையை நீக்கியது. Link | Link
அந்தத் தடை அமுலில் இருந்த காலத்திலும்,இலங்கை கிரிக்கெட் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்கான முழுமையான தடை விதிக்கப்படவில்லை
2013 ஆம் ஆண்டில், ICC விதித்த தடை அழுலில் இருந்த காலத்திலும் இலங்கை கிரிக்கெட் அணிக்கு கிரிக்கெட் விளையாடுவதற்கு முழுமையான தடை விதிக்கப்படவில்லை.
ICC அந்த நடவடிக்கையை, நிர்வாகத்தில் இருந்த சில பிரச்சினைகள் காரணமாக இலங்கை கிரிக்கெட் நிர்வாக அமைப்பை குறிவைத்து எடுத்தது. ஆனால் அதன் மூலம் தேசிய அணி சர்வதேச போட்டிகளில் பங்கேற்பது தடைசெய்யப்படவில்லை.
அந்த 79 நாட்கள் காலப்பகுதியில் கூட, இலங்கை கிரிக்கெட் அணி சிம்பாப்வேக்கு எதிரான போட்டிகளில் விளையாடியிருந்தது. Link
எங்களது சமூகவலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook PageI Twitter PageIInstagram| Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில், ICC இலங்கை கிரிக்கெட்அணிக்கு ஒரு வருட காலத்திற்கு சர்வதேச கிரிக்கெட் தடை விதித்ததாக சமூக ஊடகங்களில் பரவி வரும் பதிவுகள் தவறானவை என்பது கண்டறியப்பட்டது.
மேலும் அத்தகைய எந்த அறிவிப்பும் ICC-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் வெளியிடப்படவில்லை. அத்தோடு, இலங்கை கிரிக்கெட் சபையின் ஊடகப் பேச்சாளரும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட தகவல் தவறானது என்பதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.


