
INTRO :
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கல்வி மற்றும் தொழில் தகுதிகள் பற்றிய தகவல் தொகுப்பு சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

சமூகவலைத்தளங்களில் ” ®ரணில் விக்கிரமசிங்ஹ தொடர்பில் நீங்கள் இதுவரை அறிந்திராத சுவாரசியமான சில தகவல் துணுக்குகள். “ என கடந்த மே மாதம் 14 ஆம் திகதி (14.05.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
ரணில் விக்கிரமசிங்கவின் கல்வி மற்றும் தொழில் தகுதிகள் பற்றிய தகவல் என பரவுகின்ற செய்தி தொடர்பில் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக ஆய்வினை மேற்கொண்டோம்.
ரணில் விக்கிரமசிங்க கொழும்பு றோயல் கல்லூரியில் பயின்றவர் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயமே. பல வருடங்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சை முடிவுகள் இணையத்தில் வெளியிடப்படாத நிலையில்,மேலும், மற்றவர்களின் முடிவுகளைச் பார்க்க பொதுமக்களுக்குத் வாய்ப்பில்லாமையின் போது,மேற்குறிப்பிட்ட பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் நாடளாவிய ரீதியில் 07 ஆம் இடத்தையும், உயர்தரப் பரீட்சையில் நாடளாவிய ரீதியில் 02ஆம் இடத்தையும் எந்த ஆவணத்தின் அடிப்படையில் உறுதிப்படுத்தி உள்ளனர் என்பதில் சிக்கலுள்ளது.
மேலும் அவர் றோயல் கல்லூரி விவாதம் மற்றும் நாடகக் குழுவின் தலைவராக இருந்தார் என்பதும் தவறானது.இது குறித்து நாம் றோயல் கல்லூரியின் விவாதம் மற்றும் நாடகக் குழுவினரிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது: கல்லூரி வரலாற்றில் ரணில் விக்கிரமசிங்க குறித்த பதவிகளை வகித்ததாக எந்தக் குறிப்பும் இல்லை என தெரிவித்தனர்.
மேலும், இலங்கையில் முதல் பரிஸ்டர் பட்டம் பெற்றவர் ரணில் விக்கிரமசிங்க என்று இந்தக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல் எங்கள் விசாரணையில் போது தவறானது என கண்டறியப்பட்டது.
ரணில் விக்கிரமசிங்க அவர்கள் சட்டக்கல்லூரியில் இருந்த போது சட்ட கல்லூரியின் மாணவர் சங்கத்தின் தலைவராகவும் பல்கலைக்கழக மாணவர் பேரவையின் துணைத் தலைவராகவும் இருந்தார் என்பது தெளிவாகிறது.
இதுவரையில் இலங்கையில் உருவான பாரிஸ்டர்கள்
இலங்கையில் ஜனநாயகத்தை நிலைநிறுத்த அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காக 2017 ஆம் ஆண்டு அவூஸ்ரேலியாவில் உள்ள டீக்கின் பல்கலைக்கழகத்தினால் ரணில் விக்கிரமசிங்கவிற்கு கௌரவ கலாநிதி பட்டம் வழங்கப்பட்டது.
இது குறித்து ரணில் விக்கிரமசிங்கவின் விக்கிப்பீடியா பக்கத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு தொடர்பான செய்தி அததெரண யூடியூப் சேனலில் பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி 2017 அன்று பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.
ரணில் விக்கிரமசிங்க ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டதாரியா என்பது பற்றிய எங்கள் மேலதிக விசாரணையில், ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி 2018 அன்று, ரணில் விக்கிரமசிங்க, இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் நகரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற விவாத சங்கமான ஒக்ஸ்போர்ட் யூனியன் சொசைட்டியின் (The Oxford Union Society) கூட்டத்தில் உரையாற்றுவதற்காக அழைக்கப்பட்ட பேச்சாளராக அங்கு சென்றிருந்தார்.
அதனை தவிர, அவர் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டதாரி இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது. ரணில் விக்கிரமசிங்க ஒக்ஸ்போர்ட் சொசைட்டியில் ஆற்றிய உரையின் முழு காணொளி
15 வயதில் ஐக்கிய நாடுகள் மாநாட்டில் உரையாற்றிய ஒரே நபர் ரணில் விக்கிரமசிங்க என்பதை குறித்து ஆய்வினை மேற்கொண்ட போது, இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் இணையத்தளத்தின்படி, அவர் 2017 இல் ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் உரையாற்றினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை 1945 இல் ஸ்தாபிக்கப்பட்ட போதிலும், ஐக்கிய நாடுகளின் இளைஞர் தூதுவர் திட்டம் 1980 களில் ஆரம்பிக்கப்பட்டது, அப்போது ரணில் விக்கிரமசிங்கவிற்கு 30 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தார்.
அதன்படி ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டில் அவர் தனது 15வது வயதில் உரையாற்றினார் என்பதும் பொய்யானது.
விக்கிபீடியா மற்றும் இலங்கை நாடாளுமன்ற இணையதளங்களை ஆதாரமாக கொண்டு இலங்கையின் முன்னாள் பிரதமர்கள் குறித்தான ஆய்வினை நாம் மேற்கொண்டோம்.
அதன்படி, முன்னாள் பிரதமரான திரு.டட்லி சேனாநாயக்க தனது 41வது வயதில் பிரதமர் பதவிக்கு தெரிவாகியுள்ளார்.ரணில் விக்கிரமசிங்க தனது முதல் பிரதமர் பதவியை 1993 இல் தனது 43 ஆவது வயதில் வகித்தார். அதனடிப்படையில் இலங்கையின் இளைய பிரதமர் என அந்த குறிப்பில் கூறப்பட்டுள்ள தகவலும் பொய்யானது.

உலகின் கல்வியறிவுள்ள அமைச்சர்களுக்கு வழங்கப்படும் ”பிலென் டி ஒர்“ விருதை இரண்டு தடவைகள் பெற்ற ஒரேயொரு இலங்கை அரசியல் வாதி என்ற குறிப்பு தொடர்பாக ஆய்வினை நாம் மேற்கொண்டோம்.
உலகின் புத்திசாலித்தனமான அரசியல் வாதிகளின் பட்டியல் ஒன்று வேலைகளை அடிப்படையாக கொண்டு நபர்களை பட்டியல் படுத்தும் பிரபல நிறுவனமான Wisestep இன் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மிகவும் படித்த அரச தலைவர் என்றும், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் அதிக படித்த பிரதமர் என்றும் கூறப்பட்டது.
மேலும், Times of Election இணையத்தளமும் இதே போன்ற அறிக்கையை முன்வைத்த போதிலும், அதில் மிகவும் புத்திசாலித்தனமான அரசியல்வாதிகளில் ஒருவராக ரணில் விக்கிரமசிங்க சேர்க்கப்படவில்லை.
மேலும், ரணில் விக்கிரமசிங்கவிற்கு கலாநிதிப் பட்டம் கௌரவப் பட்டமாக வழங்கப்பட்டிருந்தால், அதனைக் கல்விச் சாதனையாகக் கூற முடியாது.
Ballon d’Or விருது என்பது பிரான்ஸ் செய்தி இதழால் ஆண்டுதோறும் நடத்தப்படும் கால்பந்து போட்டி விருது ஆகும் ( Ballon d’Or is an annual football award )
1989 இல் நோபல் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதலாவது இலங்கையர் என் குறிப்பு தொடர்பாக ஆய்வினை மேற்கொண்ட போது, திபெத்திய ஆன்மீகத் தலைவரான தலாய் லாமா அந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார். வீடியோ
ரணில் விக்கிரமசிங்கவின் கல்வி மற்றும் தொழில் தகுதிகள் பற்றிய தகவல் என பகிரப்படும் தகவல் போலியானது என உறுதி செய்யப்படுகிறது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:ரணில் விக்கிரமசிங்கவின் கல்வி மற்றும் தொழில் தகுதிகள் பற்றிய தகவல் உண்மையா?
Fact Check By: S G PrabuResult: False

Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team