
கடந்த வருடம் (2019) டிசம்பர் மாதம் 26 ஆம் திகதியன்று இடம்பெற்ற சூரியகிரகணத்தின் போது இந்தியாவில் எடுக்கப்பட்ட வீடியோ என்று இணையத்தில் ஓர் வீடியோ வெளியானது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.
தகவலின் விவரம்:

Malwana Plus என்ற பேஸ்புக் பக்கத்தில் ” முழுமையாக இருளடைந்த இந்தியாவில் பதிவான சூரிய கிரகண காட்சி ” கடந்த வருடம் டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி (26.12.2019) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
குறித்த பதிவோடு வீடியோ ஒன்றும் பதிவேற்றம் செய்துள்ளனர்.
Fact Check (உண்மை அறிவோம்)
இதுதொடர்பில் நாம் ஆய்வினை மேற்கொள்ள முதலில் நாம் வீடியோ இருந்து screenshot எடுத்து குறித்த புகைப்படத்தினை Google Reverse Image Tool ஐ பயன்படுத்தி தேடுதலில் ஈடுபட்டோம்.

குறித்த தேடலின் போது, ஜுலை மாதம் 4 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டது.
மேலும் நாம் Solar Eclipse July 2019 recorded in South America என்று கூகுளில் தேடிய போது குறித்த வீடியோ காணப்பட்டது.

மேலும் நாம் யூடியுப் தளத்தில் தேடிய போது, குறித்த வீடியோ பதிவு காணப்பட்டது.

முடிவு
மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், இந்தியாவில் பதிவான சூரிய கிரகண காட்சி என வெளியான வீடியோ போலியானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

Title:இந்தியாவில் பதிவான சூரிய கிரகண காட்சி என்று கூறப்படும் வீடியோ உண்மையா?
Fact Check By: Nelson ManiResult: False