
INTRO
சவுதி அரேபியாவின் அதிகாரியொருவர் பாதுகாப்பு வீரர்களுடன் கட்டிடமொன்றுக்குள் செல்லும் போது, அங்கு இடம்பெற்ற வெடிப்புச சம்பவத்தால் அவரின் பாதுகாப்புப் படையினரால் அவர் மீண்டும் அங்கிருந்து அழைத்துச் செல்லப்படும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை காணமுடிந்தது.
எனவே இந்த காணொளி தொடர்பான உண்மை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim)
குறித்த பதிவில் சவுதி பாதுகாப்பு அமைச்சர் ரியாத்தில் உள்ள சீன தூதரகத்திற்கு வருகை தந்த போது அவரை வரவேற்பதற்காக பட்டாசு வெடிக்கப்படும் என்று சீன தூதரகம் அவர்களிடம் தெரிவிக்கவில்லை என குறிப்பிடப்பட்டு கடந்த 2025.01.04 ஆம் திகதி காணொளியொன்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு விதமான விமர்சனங்களுடன் குறித்த காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்ததனையும் எம்மால் அவதானிக் முடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
இதேவேளை இதன் உண்மை தன்மையை அறியும் நோக்கில் குறித்த காணொளியின் சில பகுதிகளை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடுதலுக்கு உட்படுத்திய போது குறித்த காணொளியானது 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் திகதி YouTube இல் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்ததுடன் அந்த காணொளியில் அரபு மொழியில் தலைப்பிடப்பட்டிருந்ததனையும் அவதானிக்க முடிந்தது.
குறித்த தலைப்பை நாம் மொழிபெயர்த்த போது கண்காட்சி மைதானத்தில் அரேபிய பாதுகாப்பு படையினரின் பயிற்சி.. பிரமுகர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தும் போது இப்படித்தான் கையாள்கிறார்கள் என்று தலைப்பிடப்பட்டிறிருந்தது.
2019 ஆம் ஆண்டு பதிவேற்றப்பட்ட காணொளி பின்வருமாறு
அதன்படி குறித்த காணொளியானது பிரமுகர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் போது அரேபிய பாதுகாப்பு படையினர் அவர்களை எவ்வாறு பாதுகாக்கிறார்கள் என்ற பயிற்சியின் போது எடுக்கப்பட்ட காணொளி என்பதனை அறிந்துகொள்ள முடிந்தது.
மேலும் இது குறித்து நாம் தொடர்ந்து ஆராய்ந்த போது, லெபனானை தளமாகக் கொண்ட Annahar என்ற இணையத்தளத்தில் 2019 ஆம் ஆண்டு இது தொடர்பிலான உண்மைத் தன்மையை கண்டறிந்து ஆய்வுக் கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. Link
குறித்த ஆய்வுக் கட்டுரையை நாம் மொழிபெயர்த்த போது அதில்
குவைத் நகரில் உள்ள சர்வதேச கண்காட்சி மைதானத்தில் இடம்பெற்ற Gulf Defense and Aerospace கண்காட்சியில் பாதுகாப்பு படையினரால் நடத்தப்பட்ட ஒரு மாதிரி பயிற்சியின் போது இந்த காணொளி எடுக்கப்பட்டுள்ளது என உறுதிசெய்யப்பட்டிருந்தது. Archive link
இதேவேளை அல் ஹதத் என்ற அரேபிய தொலைக்காட்சி சேவையிலும் இந்த நிகழ்வு தொடர்பில் செய்தி வெளியாகியிருந்தது.
அந்த செய்தியில் பிரமுகர் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாகும் சந்தர்ப்பத்தில் அவர்களை பாதுகாக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் அரேபிய பாதுகாப்பு தரப்பினரால் நடத்தப்பட்ட ஒரு மாதிரி பயிற்சி என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் குறித்த தொலைக்காட்சி நிறுவனத்தின் x தள பதிவில் வெளியிடப்பட்டிருந்த குறித்த செய்தியின் காணொளி பின்வருமாறு
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion (முடிவு)
மேற்குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் சவூதியின் பாதுகாப்பு அமைச்சர், சீன தூதரகத்திற்கு சென்ற போது அவரின் வரவேற்பிற்காக சீன அதிகாரிகளினால் ஏற்பாடு செய்யப்பட்ட பட்டாசுகளைக் கண்டு பயந்து போவது போல் பகிரப்பட்ட வீடியோவானது, 2019 ஆம் ஆண்டு குவைத்தில் நடைபெற்ற வளைகுடா பாதுகாப்பு மற்றும் விண்வெளி (Gulf Defense and Aerospace ) கண்காட்சியில், பிரமுகர்கள் மீதான தாக்குதல்களின் போது அமிரக பாதுகாப்பு பிரிவினர் அவர்களை பாதுகாக்கும் விதம் தொடர்பில் நடத்தப்பட்ட மாதிரி பயிற்சியின் போது எடுக்கப்பட்ட காணொளி என்பது தெளிவாகின்றது.
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title: சவுதி பாதுகாப்பு அமைச்சர் பட்டாசு வெடிக்கு பயந்து அழைத்துச் செல்லப்பட்டதாக பகிரப்படும் காணொளி உண்மையா?
Fact Check By: Suji shabeedharanResult: misleading
