பேஸ்புக்கில் தமது உண்மையான முகத்தை profile picture ஆக வைக்காத கணக்குகள் நீக்கப்படுமா?

Misleading சமூகம் | Society

பயனர்கள் தமது சொந்த முகத்தை மாத்திரமே பேஸ்புக்  profile picture ஆக வைக்க வேண்டும் எனவும் அவ்வாறு குறிப்பிட்ட காலத்திற்குள் profile picture மாற்றப்படாதவர்களின் பேஸ்புக் கணக்குகள் நிறுத்தப்படும் என Meta நிறுவனம் அறிவித்துள்ளதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை காணமுடிந்தது.

எனவே அது குறித்த உண்மை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின்விவரம் (What is the claim):

Facebook | Archived Link

Breaking தனது சொந்த முகம் இல்லாத ப்ரொஃபைல்களுக்கு ; ஒரு குறிப்பிட்ட நாளுக்குள் சுயப் படம் (Profile Photo) சேர்க்கவில்லை என்றால், அந்த Facebook ID நிறுத்தப்படும் என Meta (Facebook நிறுவனம்) அறிவித்துள்ளது.! என தெரிவிக்கப்பட்டு குறித்த பதிவானது 2025.10.14 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் பலரும் இதனை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையையும் காணமுடிந்தது.

FB | FB 

Fact Check (உண்மை அறிவோம்)

மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பில் Meta நிறுவனம் உத்தியோகபூர்வ அறிவிப்புகள் எதனையும் வெளியிட்டுள்ளதா என நாம் ஆராய்ந்த போது அவ்வாறான எந்த அறிவிப்புகளும் வெளியாகவில்லை என்பதனை அறியமுடிந்தது.

எனவே பேஸ்புக் Help Center ஊடாக இவ்வாறான புதிய  Privacy Policy எதுவும் புதுப்பிக்கப்பட்டுள்ளனவா என நாம் ஆராயந்த போது அதில் மேற்குறிப்பிட்ட விதத்தில் நமது சொந்த புகைப்படங்களை நமது profile picture ஆக வைக்க வேண்டும் என எதுவும் தெரிவிக்கப்பட்டிருந்கவில்லை.

மேலும் நாம் Meta நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள சமூக தரநிலைகள் (Community Standards)  தொடர்பில் ஆராய்ந்தோம்.

இவ்வாறு புகைப்படங்கம் மற்றும் ஆள்மாறாட்டங்கள் தொடர்பில் Meta நிறுவனமானது அவர்களின் சமூக தரநிலைகளில், உண்மையான அடையான பிரதிநிதித்துவம் (Authentic identity representation) என்ற அம்சத்தின் கீழ் வகைப்படுத்தியிருந்தது. 

முதலில் அந்த அம்சம் இறுதியாக 2024.10.09 ஆம் திகதி புதுப்பிக்கப்பட்டிருந்தமையை எம்மால் காணமுடிந்தது.

Meta தமது சேவைகளை பயன்படுத்த அனுமதிக்காத (facebook, Instagram மற்றும் Threads) முடக்கும் சந்தர்ப்பங்கள்

  • வயது குறைந்த குழந்தைகள் பயன்படுத்துதல்.
  • வேறொரு நபரையோ அல்லது நிறுவனத்தையோ வைத்து ஆள்மாறாட்டம் செய்தல்:
  • (உதாரணம் ) –  மற்றவர்களை ஏமாற்றும் நோக்கத்துடன் அவர்களின்  படங்கள், பெயர் அல்லது ஒற்றுமையைப் பயன்படுத்துதல்.
  • பயனருக்கு உரிமையற்ற மற்றொரு நபர் அல்லது நிறுவனத்தின் குரலாக செயற்படுதல் ( பக்கம் அல்லது தனி கணக்குகளை உருவாக்குதல்)
  • மற்றவர்களைத் தவறாக வழிநடத்த அல்லது ஏமாற்ற, அமலாக்கத்தைத் தவிர்க்க அல்லது சமூகத் தரநிலைகளை மீறுவதற்கு தவறான அடையாள பிரதிநிதித்துவத்தில் ஈடுபடுதல்.          தவறான அடையாளத்தை மதிப்பிடும்போது Meta கருத்தில் கொள்ளும் காரணிகள்:
  • பெயர் அல்லது வயது போன்ற அடையாள விபரங்களில் மீண்டும் மீண்டும் மாற்றங்கள்
  • கணக்கின் சுயவிபரங்களில் தவறான தகவல்களை உட்சேர்த்தல்
  • பங்கு சார்ந்த படங்களை பயன்படுத்துதல்
  • Meta வின் சமூக தரநிலைகளை மீறும் பெயர்களை பயன்படுத்துதல்

உங்கள் பேஸ்புக் கணக்குகளை, தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக முடக்குவதற்கு முன்னர் Meta ஆராயும் விடயங்கள்

  • தவறான பிறந்த திகதி வழங்குதல்
  • நீங்கள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் உண்மையான பெயராக அல்லாத ஒரு பெயரைப் பயன்படுத்தல்
  • ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அல்லது அவர்களால் பயன்படுத்தப்படும் ஒரு கணக்கை உருவாக்குதல்
  • பல பேஸ்புக் கணக்குகளை உருவாக்குதல் அல்லது பராமரித்தல்
  • வணிகம், செல்லப்பிராணி அல்லது கற்பனைக் கதாபாத்திரம் போன்ற மனிதரல்லாத விடயங்களை குறிக்கும் கணக்கை உருவாக்குதல்.
  • நீடித்த செயலற்ற தன்மையுடன் வெற்று கணக்குகளை பராமரித்தல்


எங்களது  சமூகவலைதள  பக்கங்களை  பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  |TikTok| Youtube

Conclusion: முடிவு

எனவே எமது ஆய்வின் அடிப்படையில் பயனர்கள் தமது சொந்த முகத்தை மாத்திரமே பேஸ்புக்  profile picture ஆக வைக்க வேண்டும் எனவும் அவ்வாறு குறிப்பிட்ட காலத்திற்குள் profile picture மாற்றப்படாதவர்களின் பேஸ்புக் கணக்குகள் நிறுத்தப்படும் என Meta நிறுவனம் அறிவித்துள்ளதாக பகிரப்படும் தகவல் தவறானது என்பதுடன் அவ்வாறான எந்தவித புதிய அறிவிப்புகளையும் Meta வெளியடவில்லை என்பதுவும் கண்டறியப்பட்டது.

மேலும் Meta வழங்கியுள்ள அவர்களின் சமூக தரநிலைகளிலும் மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் எதுவும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம். 

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Avatar

Title:பேஸ்புக்கில் தமது உண்மையான முகத்தை profile picture ஆக வைக்காத கணக்குகள் நீக்கப்படுமா?

Fact Check By: Suji shabeedharan 

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *