கலிபோர்னியா காட்டுத்தீ என பகிரப்படும் காணொளிகள் தொடர்பான உண்மை என்ன?

False சர்வதேசம் | International

INTRO

கலிபோர்னியாவில் பரவி வரும் காட்டுத்தீ தொடர்பில் மக்களின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் பல தொழிநுட்பங்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்த வண்ணமே உள்ளன.

எனவே இவ்வாறு சமூக ஊடகங்களில் வெளியான சில காணொளிகள் தொடர்பில் ஃபெக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின் விவரம் (What is the claim)

Facebook | Archived Link

மனதை உருக்கும் காணொலி கலிபோர்னியா காட்டுத்தீ பல்லாயிரக்கணக்கான உயிரினங்களின் நிலைமை என தெரிவிக்கப்பட்ட குறித்த காணொளி கடந்த 2025.01.12 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Facebook | Archived Link

கலிபோர்னியா லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ : பலத்த காற்றுக்கு மத்தியில் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் என தெரிவிக்கப்பட்ட மற்றுமொரு குறித்த காணொளியானது கடந்த 2025.01.12 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட காணொளிகள் உண்மை என எண்ணி பலரும் சமூக ஊடகங்களில் இதனை பகிர்ந்திருந்தமையை எம்மால் அவதானிக்க முடிந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

முதலாவது காணொளியில் உள்ளவாறு மீட்புக் குழுவினரால் கலிபோர்னியாவில் காட்டுத் தீயினால் பாதிக்கப்பட்ட விலங்குகள் மீட்கப்படும் காணொளி சர்வதேச ஊடகங்களில் வெளியாகியுள்ளனவா என நாம் முதலில் ஆராய்ந்த போது அவ்வாறான எந்த காணொளிகளும் வெளியாகியிருக்கவில்லை.

அதனைத் தொடர்ந்து குறித்த காணொளியின் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி  Wasit AI detection Tool இற்கு உட்படுத்தி ஆய்வினை மேற்கொண்டோம்.

இதன் அடிப்படையில் மீட்பு குழுவினாரால் காட்டுத்தீயில் சிக்கிய விலங்குகள் மீட்கப்படும் காணொளியானது பெரும்பாலும் AI  தொழிநுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஒன்று என்பது தெளிவாகின்றது.

இரண்டாவதாக  காட்டுத்தீ பல பகுதிகளில் பரவி வருவது தொடர்பான காணொளி குறித்து நாம் ஆய்வு செய்தோம்.

இதன்போது இந்த காணொளியை ஒவ்வாரு காட்சியாக பிரித்து பார்க்கும் போது அதில் 6 காட்சியமைப்புகள் உட்செலுத்தப்பட்டுள்ளதனை எம்மால் அவதானிக்க முடிந்தது

குறித்த காட்சிகளை நாம்  Is it AI ? எனப்படும் AI Detection Tool இல் உட்செலுத்தி ஆய்வினை மேற்கொண்டோம்.

இதன்போது இந்த காணொளியும் AI தொழிநுட்பத்தால் உருவாக்கப்பட்ட காணொளி என்பதனை எம்மால் கண்டறிய முடிந்தது.Link 1|Link 2 |Link 3 |Link 4 |Link 5 |Link 6

அதனைத் தொடர்ந்து நாம் குறித்த காணொளியின் காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி அவற்றை  Wasit AI detection Tool இற்கு உட்படுத்தி ஆய்வினை மேற்கொண்ட போதும் அது  AI தொழிநுட்பத்தால் உருவாக்கப்பட்ட காணொளி என்பது உறுதியானது.

மேலும் குறித்த புகைப்படங்களை Hive Moderation AI detection tools ஐ உபயோகப்படுத்தி ஆய்வு செய்த போதும் குறித்த காணொளியானது AI  தொழிநுட்பத்தில் உருவாக்கப்பட்டமை மேலும் தெளிவாகியது.

எவ்வாறாயினும் AI detection tools இன்றியும் இவற்றின் செயற்கைத் தன்மையைக் கொண்டு இந்த காணொளிகள் AI தொழிநுட்பத்தில் உருவாக்கப்பட்டவை என்பதனை எம்மால் அறிந்துக்கொள்ளக் கூடியதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கலிபோர்னியா காட்டுத்தீ

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த 7 ஆம் திகதி காட்டுத் தீ ஏற்பட்டது. இதனால் பொலிசேட்ஸ், ஈட்டன், அல்டாடெனா ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதுடன் வரும் நாட்களில் நிலைமை மோசமடையும் எனவும் மணிக்கு 110 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில், தொடர்ந்து பரவி வரும் காட்டுத்தீயால் தற்போது பலி எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளதுடன் இதுவரை 15 சதவீதம் தீ மாத்திரமே கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருப்பதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த காட்டுத் தீ 50,000 ஏக்கர் அளவுக்கு பரவி உள்ளதுடன் இதில் சுமார் 40,000 ஏக்கர் பரப்பளவு முழுமையாக தீயில் எரிந்துள்ளது

இதில் சுமார் 7,500 தீயணைப்பு படையினர், ஹெலிகாப்டர்கள், விமானங்கள் மூலம் தீயை அணைக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தண்ணீர் பற்றாக்குறை, தீயணைப்பு படையினரின் பற்றாக்குறை, காற்றின் வேகம் அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணங்களால் தீயை அணைக்கும் பணிகளில் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது என்றும் சர்வதேச ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் காட்டுத் தீயால் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காணாமற்போயுள்ளதுடன் சுமார் 4 இலட்சம் பேர் தமது வீடுகளை விட்டு வெளியேறி உள்ளதாகவும் தகவல்கள் தெரவிக்கின்றன. Link

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  | TikTok

Conclusion (முடிவு)

மேற்குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் ஏற்பட்ட காட்டுத்தீயை மையமாகக் கொண்டு மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த காணொளிகள் AI  தொழிநுட்பத்தால் உருவாக்கப்பட்டுள்ளமை தெளிவாகின்றது.

எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:கலிபோர்னியா காட்டுத்தீ என பகிரப்படும் காணொளிகள் தொடர்பான உண்மை என்ன?

Fact Check By: suji shabeedharan 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *