ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் உள்ள பாரசீக பாலம் என தெரிவித்து புகைப்படமொன்று தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது.
எனவே இந்த புகைப்படம் தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim)
அழகு பாரசீக பாலம்..தெஹ்ரான்… ஈரான் என தெரிவித்தே குறித்த புகைப்படம் பகிரப்பட்டிருந்தது.
இதன் உண்மை அறியாத பலரும் சமூக ஊடகங்களில் இதனை பகிர்ந்திருந்தமையை எம்மால் காணமுடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
ஈரானில் உள்ள பாரசீக பாலம் தொடர்பில் நாம் ஆராய்ந்த போது, அது ஆங்கிலத்தில் Persia Bridge என குறிக்கப்பட்டது. எனவே அந்த வார்த்தையை கூகுளில் ஆராய்ந்த போது, ஈரானில் உள்ள சில பாலங்களை இந்த வார்த்தை குறித்து நின்றது.
அந்த வகையில் காஜு பாலம் (Khaju Bridge), பாரசீக வளைகுடா பாலம் (Persian Gulf Bridge) என்பனவும் அதில் பிரதானமாக இடம்பிடித்திருந்தது. இருப்பினும் குறித்த சமூக ஊடகப்பதிவில் பகிரப்பட்ட புகைப்படத்துடன் காஜு பாலத்தினை ஒப்பிட்டு பார்த்ததில் அதில் சில ஒற்றுமைகள் இருப்பதாக தென்பட்டாலும் அது முற்றுமுழுதாக வேறுபட்டிருந்தது. மேலும் குறித்த பாலமானது மத்திய ஈரானின் இஸ்ஃபஹான் என்ற இடத்திலேயே அமைந்துள்ளது. Link
குறித்த காஜு பாலத்தின் உண்மையான தோற்றத்தில், சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட புகைப்படத்தில் உள்ள பிரமாண்டமான சிலைகள் எங்கும் காணப்படவில்லை.
அத்துடன் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட பாரசீக பாலம் என்ற பாலமானது பாரசீக வளைகுடா பாலத்தினையே குறிக்கின்றது. எனவே அது குறித்து நாம் ஆராய்ந்த போது அந்த பாலத்தின் கட்டுமானப் பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை எனவும் அது ஈரானின் கெஷ்ம்–பந்தர் அப்பாஸ் என்ற இடத்தில் அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.Link
அத்துடன் குறித்த பாலத்தின் தோற்றமும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட பாலத்தின் தோற்றத்துடன் முழுதுமாக வேறுப்பட்டே இருந்தது.
அதிலும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட படத்தில் காணப்பட்டதனைப் போன்று பிரமாண்டமான உருவச்சிலைகள் எங்கும் காணப்படவில்லை.
எனவே சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட புகைப்படத்தினை நாம் ரிவர்ஸ் இமேஜ் தேடுதலுக்கு உட்படுத்திய போது, pooriyazamani என்ற இன்ஸ்டகிராம் பக்கத்தில் குறித்த புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமையை காணமுடிந்தது.
அந்த பக்கத்தை ஆராய்ந்த போது pooriyazamani என்பவர் குறித்த புகைப்படங்களை செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினால் உருவாக்கியிருந்ததனை எம்மால் அறிய முடிந்தது.
மேலும் அந்த பக்கத்தை ஆராய்ந்த போது இதுபோன்று உருவாக்கப்பட்ட வேறு சில புகைப்படங்களையும் எம்மால் காணமுடிந்தது.
தொடர்ந்து நாம் மேற்கொண்ட ஆய்வில் Iran Photos என்ற பேஸ்புக் பக்கத்திலும் இது AI தொழிநுட்பத்தால் உருவாக்கப்பட்ட படம் என தெரிவித்து மேற்குறிப்பிட்ட புகைப்படமானது பதிவேற்றப்பட்டிருந்தது.
ஆகவே இந்த புகைப்படத்தை நாம் AI Detective Tool ஐ பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்ட போது, இந்த புகைப்படமானது AI தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்டது என்பது உறுதியானது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் ஈரானின் தெஹ்ரானில் உள்ள பாரசீக பாலம் என பகிரப்பட்ட புகைப்படமானது தவறானது என்பதுடன் அது செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்ட புகைப்படம் என்பதுவும் கண்டறியப்பட்டது.
மேலும் பாரசீக வளைகுடா பாலமானது ஈரானின் தெஹ்ரானில் உள்ள பாலம் அல்ல என்பதுடன் அது ஈரானின் கெஷ்ம்–பந்தர் அப்பாஸ் என்ற இடத்திலேயே அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:தெஹ்ரானில் உள்ள பாரசீக பாலம் என பகிரப்படும் புகைப்படம் உண்மையா?
Written By: Suji ShabeedhranResult: False
