
Anura Go Home என கூக்குரலிட்டு திரண்ட குழு என தெரிவிக்கப்பட்டு காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது.
எனவே அது குறித்த உண்மை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):
இன்று கொழும்பில் “Anura Go Home” என கூக்குரலிட்டு திரண்ட குழு! என தெரிவிக்கப்பட்டு குறித்த காணொளி கடந்த 2025.10.08 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன் உண்மை அறியாத பலரும் சமூக ஊடகங்களில் இதனை பகிர்ந்திருந்ததுடன், பலர் கமெண்ட் செய்திருந்தமையையும் எம்மால் காணமுடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
கடந்த 8 ஆம் திகதி கொழும்பில் “Anura Go Home” என கோஷம் எழுப்பி மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டிருப்பார்களாயின் அது குறித்து பிரதான ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கும் எனினும் நாம் மேற்கொண்ட ஆய்வில் அவ்வாறான எந்தவொரு செய்தியையும் எம்மால் காணமுடியவில்லை.
மேலும் குறித்த காணொளி தொடர்பில் நாம் தொடர்ந்து ஆராய்ந்த போது கடந்த ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி YouTube பக்கத்தில் இந்த காணொளியானது பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
அதில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சியினரால் மேற்கொள்ளப்பட்ட பேரணியின் காணொளி என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் இணையத்தில் தற்போது பகிரப்படும் காணொளியில் பதிவாகியுள்ள பகுதியில் உள்ள கட்டிடங்கள், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறையில் அடைக்கப்பட்டு மீண்டும் அது தொடர்பான வழக்கு விசாரணையின் போது நீதிமன்ற வளாகத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது எடுக்கப்பட்ட காணொளியில் இருக்கும் கட்டிடங்களும் ஒத்துள்ளமை எமது ஆய்வின் போது காணக்கிடைத்து.
அதேபோன்று குறித்த காணொளி பிரதான ஊடகங்களில் செய்தியாக வெளியாகியிருந்தமையையும் காணமுடிந்தது.Link
மேலும் கடந்த 08 ஆம் திகதி Anura Go Home என கோஷம் எழுப்பி கொழும்பில் மக்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டார்களா என நாம் பொலிஸ் ஊடகப் பிரிவை தொடர்புகொண்டு வினவியபோது அவ்வாறான போராட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை என அவர்கள் எமக்கு உறுதிப்படுத்தினர்.
வெளிநாட்டு பயணத்தின் போது அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து, அவரை ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அவர் வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பின்னர் அவருக்கு எதிரான வழக்கு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்தநிலையில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்குஎதிராக கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தை எதிர்க்கட்சியினர் மற்றும் ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் “Anura go home” என்ற கோஷங்களை எழுப்பி பாரிய போராட்டத்தில் குதித்த நிலையில் அங்கு பற்றமான சூழல் உருவாகியது. அதன்பின்னர் அப்பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
மேலும், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம், கொழும்பு தேசிய வைத்தியசாலை, ஜனாதிபதி செயலகம் மற்றும் பெலவத்த ஜேவிபியின் தலைமைக் காரியாலயம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. Link
எங்களது சமூகவலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் 2025.10.08 ஆம் திகதி கொழுப்பில் “Anura go home” என கோஷங்களை எழுப்பி மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக பகிரப்படும் காணொளி கடந்த ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் என்பது கண்டறியப்பட்டது.“
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Title:“Anura Go Home” என கோஷமிட்டு கொழும்பில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதாக பகிரப்படும் பழைய காணொளி!
Fact Check By: Suji ShabeedhranResult: False
