இஸ்ரேல் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என இஸ்ரேலிய யூதர்கள் போராட்டமா?

Misleading சர்வதேசம் | International


INTRO :

இஸ்ரேல் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என இஸ்ரேலிய யூதர்கள் போராட்டம் எனவும் ஒரு காணொளி் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின்விவரம் (What is the claim):

facebook Link  | Archived Link

சமூகவலைத்தளங்களில் “ISREL போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என இஸ்ரெலில் யூதர்கள் போராட்டம்.!!

இஸ்ரேல் போலீஸ் தாக்குதல்!

வாகனம் தீக்கரை!

#Israel #iran #usa #gulf

“என இம்  மாதம் 22  ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு  (22.03.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது போர் தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இஸ்ரேல் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று யூதர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக ஒரு வீடியோவை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த காணொளியில் சில காட்சிகளைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்ததில், இந்த காணொளி 2026 பிப்ரவரி 16 ஆம் திகதி சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. 

ஈரான் மீது இஸ்ரேல் -அமெரிக்கப் படைகள் பிப்ரவரி 28ம் திகதி தாக்குதல் நடத்தின. அதைத் தொடர்ந்துதான் ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தியது. ஆனால் தாக்குதலுக்குக் கிட்டத்தட்ட 14 நாட்களுக்கு முன்பு இந்த காணொளி வெளியாகி இருப்பதன் மூலம் இது போரை நிறுத்ததினை முன்னிட்டு  யூதர்கள் போராடிய சம்பவம் இல்லை என்பது தெளிவானது.

Archive

மேலும் நாம் இந்த வீடியோ தொடர்பாக ஆய்வினை மேற்கொண்ட போது, தீவிர பழமைவாதம் பின்பற்றும் யூதர்கள் இருக்கும் பினி பிராக் (Bnei Brak) என்ற பகுதிக்கு சென்ற இரண்டு பெண் இஸ்ரேலிய ராணுவ வீரர்களை அந்த பழமைவாத யூதர்கள் தாக்கியதாகவும் அவர்களை இஸ்ரேல் பொலிஸார் பாதுகாப்பாக மீட்டதாகவும் செய்திகள் நமக்கு கிடைத்தன.

israelnationalnews.com I Archive

இஸ்ரேலில் தீவிர பழமைவாத யூதர்கள் உள்ளிட்ட ஒரு சிலரைத் தவிர்த்து அனைவரும் கட்டாயம் ராணுவத்தில் சேவை செய்ய வேண்டும். இந்த நிலையில் தீவிர பழமைவாதத்தைப் பின்பற்றும் யூதர்களுக்கும் கட்டாய ராணுவ சேவை என்று அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் இந்த யூதர்கள் வசிக்கும் பகுதிக்கு சமூக சேவை செய்யும் நோக்கில் இரண்டு இஸ்ரேலிய பெண் ராணுவ வீரர்கள் வந்துள்ளனர்.

இதைத் தவறாகப் புரிந்துகொண்ட அந்த யூதர்கள் அவர்களை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை இஸ்ரேல் பிரதமர் கண்டித்ததாகவும் செய்திகள் காணக்கிடைத்தன. இவை எல்லாம் இந்த வீடியோ இஸ்ரேல் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி யூதர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக பரவும் தகவல் தவறானது என்பதை உறுதி செய்தது.

நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இஸ்ரேல் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என இஸ்ரேலிய யூதர்கள் போராட்டம் என தெரிவிக்கப்பட்டு பகிரப்பட்ட காணொளி தவறானது என்பது கண்டறியப்பட்டது.

எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  |TikTok| Youtube

Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Result Stamp

Title: இஸ்ரேல் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என இஸ்ரேலிய யூதர்கள் போராட்டமா?

Fact Check By: S.G.Prabu

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *