Starlink சேவையை இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதா?

எலன் மஸ்க்கின் Starlink சேவை இலங்கையில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் தகவலொன்று பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் அவதானிக்க முடிந்தது. எனவே குறித்த தகவல் தொடர்பில் உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் இலங்கையில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட ஸ்டார்லிங்க் சேவை..!! அமெரிக்க தொழிலதிபரான ஈலோன் மஸ்கின் ஸ்டார்லிங்க் (Starlink) எனப்படும் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணையச் […]

Continue Reading

விண்வெளியில் இருக்கும் போது  தினமும் குர்ஆனைப் படித்ததாக சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்தாரா?

சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்ற நாசா விண்வெளி வீராங்கனையும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான சுனிதா வில்லியம்ஸ் 286 நாட்களுக்குப் பிறகு, கடந்த மார்ச் 19 ஆம் திகதி பூமிக்கு திரும்பினார். இதனையடுத்து சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் இருக்கும் போது தனக்கு  பைபிளின் மீது இருந்த நாட்டம் குறைந்து விட்டதாகவும், ஆனால் தினமும் குர்ஆனைப் படிப்பதில் ஆர்வம் ஏற்பட்டதாகவும், ரமழான் நோன்பினால் விண்வெளியில் குறைவாக சாப்பிடவும் குடிக்கவும் தான் கற்றுக்கொண்டதாக, சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பிய பின்னர் தெரிவித்ததாக […]

Continue Reading

சுந்தரமூர்த்தி கபிலன் யாழ். மாநகர சபைக்கு போட்டியிட தகுதியற்றவரா?

ஏழு வருடங்களின் பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதி அறிவிக்கப்பட்டு தற்போது அதற்கான பணிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் தற்போது யாழ். மாநகர சபையின் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் சுந்தரமூர்த்தி கபிலன் வேட்புமனுவை தாக்கல் செய்த போது அவர் வழங்கிய முகவரி போலியானது எனவும் அவர் யாழ். மாநகர சபைக்கு போட்டியிட அடிப்படைத்தகுதியற்றவர் எனவும் தெரிவிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் சில தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது. எனவே குறித்த தகவல் […]

Continue Reading

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 – வேட்புமனு தாக்கல் நாளையுடன் நிறைவு

பல காலமாக இடம்பெறாமல் இருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஏப்ரல் மாதத்தில் நடாத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதற்கமைய எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கையில் 24 மாநகர சபைகளுக்கும் 41 நகர சபைகளுக்கும் 275 பிரதேச சபைகளுக்குமாக மொத்தம் 340 உள்ளுராட்சி மன்றங்களுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளன . கட்டுப்பணம் செலுத்தல் இதற்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை கடந்த […]

Continue Reading

சந்திரகாந்தன் மற்றும் வியாழேந்திரன் கைகலப்பில் ஈடுபட்டனரா?

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் ஆகியோர் கைகலப்பில் ஈடுபடுவது போன்ற காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை எம்மால் காணமுடிந்தது.  எனவே குறித்த காணொளி தொடர்பான உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook Link | Archived Link குறித்த காணொளியில் சந்திரவியாழன் கூட்டணியாண்டோய் என தெரிவிக்கப்பட்டு கடந்த […]

Continue Reading

சிங்கள மொழி பாடசாலையில் கல்வி கற்கும் தமிழ் மாணவன் மீது சக மாணவர்கள் டினர் ஊற்றி பற்ற வைத்தார்களா?

UPDATE: குறித்த சம்பவம் தொடர்பில் நாம் இன்றைய தினம் (2025.03.18) குறுந்துவத்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை தொடர்புகொண்டு வினவியிருந்தோம். இதன்போது நேற்று (2025.03.17) சம்பவத்தை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படும் ஏனைய மூன்று மாணவர்களும் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் அவர்கள் சிறுவர் சீர்திருத்தப் பிரிவு அதிகாரிகளினால் கம்பளை நீதவானிடம் முன்னிலைப்படுத்தப்பட்டதாகவும், இதன்போது கம்பளை நீதவான், 12 வயதிற்கு குறைந்த சிறுவர்கள் செய்யும் தவறுகளை நீதிமன்றத்தினால் தவறாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது எனவும், அவர்களை நீதிமன்றத்தினால் தண்டிக்க முடியாது எனவும் அறிவித்துள்ளார். மேலும் […]

Continue Reading

அனைத்து பிரஜைகளும் மாதம் 750,000 ரூபா பெறும் திட்டம் தொடர்பில் பிரதமர் தெரிவித்தாரா?

பிரதமர் ஹரிணி அமரசூரிய ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில், அரசாங்கம் எந்தவொரு பிரஜைக்கும் வாழ்நாள் முழுவதும் மாதத்திற்கு 750,000 ரூபா வரை வழங்கும் என்று கூறியதாக தெரிவித்த விரிவான கட்டுரை ஒன்றும், 35 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் நிதி கொடுப்பனவுகள் வழங்கப்படும் என்று கூறும் ஒரு விளம்பரமும் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. இதன் மூலம் பயனர்கள் இணைப்பைக் கிளிக் செய்து பணம் பெற ஊக்குவிக்கப்படுவதையும், முதலீட்டு முறைகள் எவ்வாறு ஊக்குவிக்கப்படுகின்றன என்பதையும் […]

Continue Reading

சுற்றுலாத் துறையை கவர்ந்த தபால் நிலையங்களை சுற்றுலா மையங்களாக மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளதா?

நாட்டில் உள்ள சில தபால் நிலையங்களை சுற்றுலா மையங்களாக மாற்றுவது குறித்த புதிய அரசாங்கத்தின் தீர்மானம் தொடர்பில் தற்போது சமூகத்தில் பல்வேறு மாறுப்பட்ட கருத்துக்கள் பகிரப்பட்டு வரும் நிலையில் அது குறித்து உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் நுவரெலியாவில் உள்ள தபால் கந்தோரை சுற்றுலா தளமாக மாற்றுவதற்கு ரணில் அரசு முயன்ற போது தொழிலாளர் […]

Continue Reading

வெண்டைக்காய் ஊற வைத்த தண்ணீரை தினமும் குடித்து வந்தால் புற்றுநோய், சர்க்கரை நோய் என்பன குணமாகுமா?

சில காய்கறிகள், பழ வகைகளை உட்கொள்வதனால் புற்றுநோய், சர்க்கரை நோய் போன்றன உடனடியாக குணமாவதாக தெரிவித்து பல மருத்துவக் குறிப்புகள் சமூக ஊடகங்கள் வழியாக தொடர்ந்து பகிரப்பட்டு வருவதனை எம்மால் காண முடிகின்றது. அந்தவகையில் வெண்டைக்காய் ஊற வைத்தை தண்ணீரை தினமும் குடித்து வந்தால் புற்றுநோய், சர்க்கரை நோய் உள்ளிட்டவை முற்றாக குணமடைந்துவிடும் என தெரிவிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் தொடர்பான உண்மையை கண்டறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What […]

Continue Reading

ரமழான் நிவாரணப் பொதி வழங்கப்படுவதாக பகிரப்படும் தகவல் உண்மையா?

சிறப்பு தினங்கள் மற்றும் பண்டிகை நாட்களை மையமாகக் கொண்டு பரிசுப்பொருட்கள் மற்றும் நிவாரணப் பொதிகள் என்பவற்றை வழங்குவதாக தெரிவித்து மக்களை ஏமாற்றும் பல்வேறு மோசடி நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்றுக்கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் தற்போது புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு மக்களுக்கு ரமழான் நிவாரணப பொதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு ஒரு தகவல் சமூக ஊடகங்கள் வழியாக பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது. எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ  ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் […]

Continue Reading

மகளிர் தினத்தை முன்னிட்ட மெலிபன் நிறுவனத்தினால் பணப்பரிசு வழங்கப்படுகிறதா?

பண்டிகைக் காலங்கள் மற்றும் விசேட தினங்களை மையமாகக் கொண்டு பிரபல வர்த்தக நாமங்களை பயன்படுத்தி பணப்பரிசுகள் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு மக்களை ஏமாற்றி தனிப்பட்ட தரவுகளை திருடும் செயற்பாடுகள் மோசடிக்காரர்களினால் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையை எம்மால் காண முடிகின்றது. அந்த வகையில் தற்போது எதிர்வரும் மகளிர் தினத்தை முன்னிட்டு மெலிபன் நிறுவனத்தினால் பணப்பரிசு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வழியாக பகிரப்படும் தகவல் தொடர்பில் ஃபேக்ட் கிரஸண்டோ உண்மையை கண்டறியும் நோக்கில் ஆய்வொன்றை […]

Continue Reading

வெளிநாட்டில் தொழில் புரிவோரிடமும்  15% வரி அறவிடப்படுகிறதா?

வெளிநாடுகளுக்கு சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது விதிக்கப்படவுள்ள 15% ஏற்றுமதி சேவை வரி குறித்து இந்நாட்களில் சமூகத்தில் பல்வேறு தவறான தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது. எனவே அது தொடர்பில் உண்மை அறியும்  நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நாம் ஆய்வொன்றை மேற்காண்டோம். தகவலின் விவரம் (Whatis the claim) Facebook Link | Archived Link குறித்த பதிவில் வெளிநாட்டில் இருந்து அனுப்ப படும் பணத்திற்கு 15% வரி விதிக்க படும் என […]

Continue Reading

சமூக ஊடகங்களில் பகிரப்படும் எச்சரிக்கை செய்திகள் தொடர்பில் விழிப்புடன் செயற்படுங்கள்! 

WhatsApp ஊடாக மக்களை அச்சமடைய செய்யும் பல தகவல்கள் பகிரப்பட்டு வரும் நிலையில் அது குறித்து ஃபேக் கிரஸண்டோ நாம் பல முறை உண்மையை கண்டறிந்து அறிக்கையிட்டுள்ளோம். மேலும் அவ்வாறான தகவல்கள் மற்றவர்களையும் விழிப்புடன் இருக்கச்செய்யும் விதத்தில் பகிரப்பட்டுவரும் நிலையில் தற்போது பகிரப்பட்டு வரும் மற்றுமொரு தகவல் குறித்து உண்மையை கண்டறியும் நோக்கில் நாம் ஆய்வொன்றை மேற்கொண்டோம். தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் மிக மிக […]

Continue Reading

பஜாஜ் நாமத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மோசடிகள் தொடர்பில் அவதானம்!

சமூக ஊடகங்கள் வழியாக இடம்பெறும் மோசடிகள் தொடர்பில் விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டு வந்தாலும் அவ்வாறான மோசடிகள் தொடர்ந்தும் இடம்பெற்றுக் கொண்டே இருப்பதனால் அவற்றில் சிக்கி ஏமாறுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணமே உள்ளன. இவ்வாறான பின்னணியில் பாஜாஜ் மோட்டார் சைக்கிள்கள் இலவசமாக வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் தொடர்பில் உண்மையை கண்டறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link  குறித்த […]

Continue Reading

மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பில் மீளாய்வு நடத்தப்படுகிறதா?

கடந்த நாட்களில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களை மேற்கொள்ளும் குழுவைச் சேர்ந்தவர்கள் கொலைசெய்யப்பட்டதனைத் தொடர்ந்து தற்போது முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டு வருவதனை எம்மால் காணமுடிந்தது. எனவே அது தொடர்பில் உண்மையை கண்டறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொணடது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு  குறித்து மேலும் […]

Continue Reading

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் இறைபதம் அடைந்துவிட்டதாக பகிரப்படும் போலியான தகவல்!

update பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தனது 88 ஆவது வயதில் இன்று (2025.04.20) நித்திய இளைப்பாறினார். இதனை வத்திக்கான் உறுதிப்படுத்தியுள்ளது. 12 வருடங்களாக அவர் பரிசுத்த பாப்பரசராக சேவையாற்றிய நிலையில் நிமோனியா தொற்று காரணமாக கடந்த பெப்ரவரி மாதம் ரோமிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்றுவந்தமை குறிப்பிடத்தக்கது. கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான பரிசுத்த பாப்பரசர்  பிரான்சிஸிஸ் அவர்கள் இறைப்பதம் அடைந்துவிட்டதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வரும் நிலையில் அது தொடர்பில் உண்மையை கண்டறியும் […]

Continue Reading

கனேமுல்ல சஞ்சீவ கொலையின் சந்தேகநபர் குறித்து பரவும் பதிவுகளின் உண்மை என்ன?

கொழும்பு – புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்குள் நேற்று (2025.02.19) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களை மேற்கொள்ளும் குழுவின் தலைவரான கனேமுல்ல சஞ்ஜீவ கொல்லப்பட்டதனைத் தொடர்ந்து விசேட அதிரடிப்படையினாரால் நேற்று மாலை சந்தேகநபர்  கைது செய்யப்பட்டதனை அடுத்து அது தொடர்பில் பல்வேறு புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது.  எனவே அது தொடர்பில் தெளிவுபடுத்தலை வழங்கும் நோக்கில்  ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is […]

Continue Reading

தினமும் வெள்ளை பூசணி சாறு குடித்தால் புற்றுநோய் குணமாகுமா?

புற்றுநோய் தொடர்பிலும் அதற்கான மருத்துவ முறைகள் தொடர்பிலும் சமூகத்தில் காலத்திற்கு காலம் பல விதமான தகவல்கள் பகிரப்பட்டு வருவதனை எம்மால காண முடிகின்றது. அந்தவகையில் தற்போது வெள்ளை பூசணி  சாற்றை தினமும் குடித்து வந்தால் புற்றுநோய் குணமாகும் என்ற தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் நிலையில் அது குறித்த உண்மையை கண்டறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த […]

Continue Reading

“Seismic Waves CARD” என்ற கோப்பை திறப்பதன் மூலம் உங்கள் தொலைபேசி ஹெக் செய்யப்படுமா?

சைபர் தாக்குதல் குறித்து பயனர்களை எச்சரிக்கும் ஒரு செய்தி சமீபகாலமாக WhatsApp  உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது. இதில்  “Seismic Waves CARD” என்ற கோப்பைத் திறப்பதன் மூலம் 10 வினாடிகளுக்குள் உங்கள் தொலைபேசி ஹேக் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு பகிரப்பட்டு வரும் நிலையில் அது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook| Archived Link  குறித்த பதிவில் ஜப்பான் […]

Continue Reading

மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கான நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டதா?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்  விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள  உத்தியோகபூர்வ இல்லத்திற்கான நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக  சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருவதனை எம்மால் காண முடிந்தது. மேலும் இது தொடர்பில் உண்மை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸாண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் 3 இலட்சம் ரூபா நிலுவைத் தொகையை செலுத்தத் தவறியமைக்காக மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம இல்லத்தில் நீர் […]

Continue Reading