நீண்ட நேரம் டயபர் அணிவித்தமையால் குழந்தைக்கு புற்று நோய் தோற்று ஏற்பட்டு மரணித்துள்ளாதாக நியூஸ் 7 தமிழ் தொலைகாட்சியின் நியூஸ் டைட்டில் காட் ஒன்று பேஸ்புக் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link

Mohammed Peer Sheik என்ற நபரின் பேஸ்புக் கணக்கில் ”தாய்மார்கள் கவனத்திற்க்கு” என்ற பதிவோடு நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் நியூஸ் டைட்டில் காட் ஒன்று கடந்த முதலாம் திகதி (01.09.2019) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

குறித்த டைட்டில் காடில் ”நீண்ட நேரம் டைப்பர் அணிவித்த தாயின் அலட்சியத்தால் புற்றுநோய் தோற்று ஏற்பட்டு பச்சிளம் குழந்தை பரிதாப பலி ” என்று செய்தி வெளியிட்டுள்ளதாக காட்டப்பட்டுள்ளது.

Fact Check (உண்மை அறிவோம்)

குறித்த பதிவில் பதியப்பட்ட Comments-ஐ நாம் ஆராய்ந்தோம். அதில் ஒருவர் இது உண்மையான தகவலா? என்ற வினவிய கேள்விக்கு குறித்த பதிவை பதிவேற்றியவர் ”தெரியாது“ என்று பதில் அளித்திருந்துள்ளமை காணக்கிடைத்தது.

மேலும் இது குறித்து ஆய்வினை நாம் மேற்கொண்டவேளையில் குறித்த நியூஸ் 7 தமிழ் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் குறித்த டைட்டில் கார்டில் குறிப்பிட்ட செய்தி எதுவும் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கவில்லை. (பேஸ்புக் பக்கம்)

மீண்டும் நியூஸ் கார்டு பரிசோதனை செய்த வேளையில் அதில் எழுத்து பிழையுடன் இருந்தமை கண்டு பிடிக்கப்பட்டது. புற்று நோய் தொற்றுக்கு பதிலாக தோற்று என்று எழுதப்பட்டிருந்தது.

இது போட்டோஷாப் செய்யப்பட்ட பதிவுதான் என்பதை உறுதி செய்ய FotoForensics இணையதள உதவியை நாடினோம். அந்த இணையதளத்தில் குறிப்பிட்ட நியூஸ் கார்ட் புகைப்படத்தினை பதிவேற்றியபோது, இதில் போட்டோஷாப் வேலை செய்திருப்பது கண்டறியப்பட்டது.

மேலும் டயபரினால் எதும் குழந்தைகள் உயிரிழந்துள்ளனரா ? என்று தேடிய போது, 2018 ஆம் ஆண்டில் ஒரு குழந்தை இழந்த செய்தியை காணக்கிடைத்தது.

குறித்த செய்தியில் தொடர்ந்து 14 நாட்கள் ஒரே டயபரை அணிந்திருந்தமையால் குறித்த குழந்தை பழியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017 ஆகஸ்ட் 30-ம் திகதி அமெரிக்காவின் லோவா மாநிலத்தில் ஸ்டேர்லிங் கொயன் (Sterling Koehn) எனும் 4 மாத ஆண் குழந்தைக்கு புழு தொற்று பாதித்த ஒரே டயபரை 9 முதல் 14 நாட்கள் பயன்படுத்திய காரணத்தினால் குழந்தைக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு குழந்தை இறந்து உள்ளது.முழு அறிக்கை

முடிவு

மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் நீண்ட நேரம் டயபர் அணிவித்த காரணத்தினால் குழந்தை புற்றுநோய் பாதித்து இறந்ததாக செய்தி வெளியானதாக பரவும் நியூஸ் கார்டு போலியான ஒன்று என சந்தேகமின்றி தெளிவாகிறது.

Avatar

Title:நீண்டநேரம் டயபர் அணிவித்த தாய்; குழந்தை புற்றுநோயால் மரணமா?

Fact Check By: Nelson Mani

Result: False