முடக்குவாத நோயாளிகளை சில மணிநேரங்களுக்குள் குணப்படுத்த முடியுமா?

Misleading சமூகம் | Society சர்வதேசம் | International

மும்பையில் உள்ள மருத்துவமனையொன்றி முடக்குவாத நோயாளிகளை சில மணிநேரங்களுக்குள் ஒரு தானியங்கி இயந்திரத்தின் மூலம் குணமடையச் செய்வதாக தெரிவிக்கப்பட்ட பதிவொன்று தற்போது சமூக ஊடகங்கள் வழியாக பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் அவதானிக்க முடிந்தது.

எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின் விவரம் (What is the claim)

Facebook | Archived Link

குறித்த பதிவில் மும்பையின் பரேலில் உள்ள KEM மருத்துவமனை, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை 24 மணி நேரத்திற்குள் அழைத்துச் செல்கிறது. நோயாளி இந்த நோயிலிருந்து சில மணி நேரங்களுக்குள் ஒரு தானியங்கி இயந்திரம் மூலம் குணமடைகிறார், நோயாளியின் மூளைக் கட்டிகள் ஆஞ்சியோபிளாஸ்டி போன்ற இந்த இயந்திரத்தின் உதவியுடன் அகற்றப்படுகின்றன, இந்த வசதி இந்தியாவில் முதல் முறையாக இந்த மருத்துவமனையில் கிடைக்கிறது. உலகில் ஒரு சில குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே இதுபோன்ற இயந்திரங்கள் உள்ளன, டாக்டர் நிதின்ஜி டாங்கே (நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்) இந்த இயந்திரத்தை கையாள்வதில் உலகப் புகழ் பெற்றவர். பிரஹன்மும்பை நகராட்சி இந்த இயந்திரத்தை திறந்து வைத்து அர்ப்பணித்தார்.*

*தயவுசெய்து அனைவருடனும் தகவலைப் பகிரவும், அது பயனுள்ளதாக இருக்கும்…

நீங்கள் உறுப்பினராக உள்ள ஒவ்வொரு குழுவிலும் இடுகையிடவும்.

பிறப்பிலிருந்தே காது கேளாத மற்றும் ஊமையாக இருக்கும் எந்த குழந்தையையாவது உங்களுக்குத் தெரிந்தால், இப்போது கோக்லியர் இம்ப்லாண்ட் அறுவை சிகிச்சை கண்டுபிடிப்பின் மூலம் இந்த ஊனமுற்ற குழந்தையை குணப்படுத்துவது சாத்தியமாகிவிட்டது.

அறுவை சிகிச்சைக்கு சுமார் 10 முதல் 12 லட்சம் வரை செலவாகும், ஆனால் கவலைப்பட வேண்டாம், இப்போது ரோட்டரி கிளப் ஆஃப் பாம்பே வோர்லி, மாவட்டம் 3141 இன் உதவியுடன், இந்த அறுவை சிகிச்சை மும்பையின் SRCC மருத்துவமனையில் இலவசமாக செய்யப்படுகிறது.

செய்தி தேவைப்படுபவர்களைச் சென்றடையும் வகையில் மற்ற குழுக்களில் இடுகையிடவும்.

தொடர்பு :-

ரோட்டரி கிளப் ஆஃப் பாம்பே வோர்லி

டிஜி ஆர்டிஎன் ராஜேந்திர அகர்வால்

9820085149

முக்கியமான செய்தி. முடிந்தவரை ஃபார்வேர்டு செய்யவும். என தெரிவிக்கப்பட்டு கடந்த 2025.05.17 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

மேலும் அதனை பலரும் பேஸ்புக் மற்றும் வட்ஸ்அப் ஊடாக பகிரந்திருந்தமையையும் எம்மால் காணமுடிந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

ஒருவர் நோயொன்றினால் பாதிக்கப்படும் விடத்து அவரை குணப்படுத்துவதற்கு அந்த நோயாளியின் குடும்பத்தினரின் பாரிய முயற்சிகளை மேற்கொள்வார்கள். அவ்வாறான சந்தர்ப்பத்தில் குறித்த நோயை முழுமையாக எங்காவது குணப்படுத்துவார்கள் என அறிந்தால் அது உலகில் எந்த நாடாக இருந்தாலும் எவ்வளவு செலவாகினாலும் அவரை குணப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் மாத்திரமே அந்த குடும்பத்தினரிடம் காணப்படும்.

முடக்குவாதத்திலனால் பாதிக்கப்பட்டவர்களை சில மணிநேரங்களில் முழுமையாக குணப்படுத்த முடியுமா?

இந்த கேள்விக்கான பதிலை தேடும் நோக்கில் குறித்த சமூக ஊடகப்பதிவில் தெரிவிக்கப்பட்டதனைப்போன்று, இந்தியாவின் மும்பையின் பரேலில் உள்ள KEM மருத்துவமனையில், முடக்குவாத நோயாளிகளைக் குணப்படுத்தக்கூடிய ஒரு இயந்திரம் உள்ளதா, மேலும் முடக்குவாத நோயாளிகளைக் குணப்படுத்தும் திறன் அந்த இயந்திரத்திற்கு உள்ளதா என்பதை நாம் ஆராய்ந்தோம்.

அதன்படி, இந்தத் தகவலுக்கு காரணமாக அமைந்த சம்பவம் தொடர்பான செய்தி The Hindu  இணையதளத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் 11 ஆம் திகதி வெளியாகியிருந்தது.

“KEM மருத்துவமனையில் உயர்தர முடக்குவாத சிகிச்சை மையம்” என்ற தலைப்பிலேயே அந்த செய்தி வெளியாகியிருந்தது.

அதுமட்டுமன்றி சமூக ஊடகப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள KEM மருத்துவமனையின் தலைமை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் நிதின் டாங்கே இது குறித்து வழங்கிய விளக்கமும் அந்த செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதன்படி, பெரும்பாலான முடக்குவாத நோயாளிகள் மருத்துவமனைக்கு தாமதமாக வருவதால், சிகிச்சை பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதாகவும் . எனவே, முடக்குவாதம் ஏற்பட்டு முதல் 24 மணி நேரத்திற்குள் வரும் நோயாளிகளுக்கு மாத்திரமே இந்த முடக்குவாத மையத்தின் மூலம் உதவ முடியும் என்று வைத்தியர் நிதின் டாங்கே தெரிவித்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதேபோன்று கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் திகதி Mumbai Mirror இணையதளத்திலும் மேற்குறிப்பிட்ட சமூக ஊடகப்பதிவில் தெரிவிக்கப்பட்ட விடயம் தொடர்பில் உண்மை சரிபார்ப்பு ஆய்வறிக்கையொன்று வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அதில் முடக்குவாதத்தினால் பாதிக்கப்பட்டு முதல் 24 மணித்தியாலங்களுக்குள் கொண்டுவரப்படும் நோயளிகளுக்கு மாத்திரமே இந்த இயந்திரத்தினால் சிகிச்சை வழங்கமுடியும் எனவும் அதை தவிர்த்து முடக்குவாதத்தினால் பாதிக்கப்பட்ட நாற்பட்ட நோயளிகளுக்கு இதன்மூலம் சிகிச்சை வழங்க முடியாது என KEM மருத்துவமனையின் நரம்பியல் நிபுணர் வைத்தியர் டாங்கே குறிப்பிட்டுள்ளாதா குறித்த அறிக்கையில் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், புதிய எஞ்ஜியோகிராஃபி இயந்திரத்தை KEM மருத்துவமனை 8.5 கோடி ரூபாவிற்கு வாங்கியுள்ளது என்றும், முடக்குவாதம் ஏற்பட்ட முதல் 24 மணி நேரத்திற்குள் இரத்தக்குழாய் அல்லது நரம்பிலிருந்து இரத்தக் கட்டியை அகற்றுவதன் மூலம் இந்த இயந்திரத்தினால் நோயாளியை குணப்படுத்த முடியும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தச் செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதன் பின்னர், பல வருட காலமாக முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட பல நோயாளிகள் அவர்களின் நோயை குணப்படுத்த முடியும் என்ற தவறான எண்ணத்தை வளர்த்துக் கொண்டுள்ளதுடன், மேலும் பல ஆண்டுகளாக முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட ஏராளமான நோயாளிகளும் சிகிச்சைக்காக இந்த மருத்துவமனைக்கு சென்றுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

2018 முதல், இந்தியா உள்ளிட்ட பல  நாடுகளிலும் அவ்வப்போது இது குறித்த  தவறான செய்திகள் பரவி வருகின்றன, மேலும் 2020  ஆம் ஆண்டில் இந்தியாவில் இது குறித்த மேற்கொள்ளப்பட்ட உண்மைச் சரிபார்ப்பு அறிக்கையை எம்மால் காணமுடிந்தது. அதில் வைத்தியர் நிதின் டாங்கோவின் செயலாளர் ஹீனா ஷேக்குடன் தொடர்புகளை ஏற்படுத்தி இது குறித்து வினவப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அதன்போது, கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த செய்தி பரவலாகப் பகிரப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார். இருப்பினும், அனைத்து நோயாளியையும் முடக்குவாதத்திலிருந்து குணப்படுத்த முடியாது என்றும், முடக்குவாதம் ஏற்பட்டு முதல் 24 மணி நேரத்திற்குள் ஒரு நோயாளியை குணப்படுத்த முயற்சிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் அதனை முழுமையாக நிறைவு செய்வதற்கு 6 மணித்தியாலங்கள் வரை எடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த தகவலானது 2024 ஆம் ஆண்டிலும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்ததுடன், அது குறித்து மேற்கொள்ளப்பட்ட உண்மை சரிபார்ப்பு அறிக்கையை இங்கே காண்க

நரம்பியல் நிபுணர் வைத்தியர் பத்மா குணரத்ண

மேலும் இந்த விடயம் தொடர்பில் இலங்கையின் விசேட நரம்பியல் நிபுணர் வைத்தியர் பத்மா குணரத்னவிடம் நாம் வினவினோம். இதன்போது,  CT மற்றும் டிஜிட்டல் எஞ்ஜியோகிராபி இயந்திரங்கள் போன்ற தொழில்நுட்பம் மற்றும் பயிற்சி பெற்ற மருத்துவ நிபுணர்களின் நிபுணத்துவம் உள்ளிட்டவை முடக்குவாதத்திற்கு, நேரத்தை சார்ந்த அவசர சிகிச்சை முறைகளாக காணப்படுகின்றன என குறிப்பிட்டார்.

மேலும் thrombolytics போன்ற விலையுயர்ந்த மருந்துகளும், கடத்தல் குழாய்கள் போன்ற நுகர்பொருட்களும் அதற்கான சிகிச்சையாக பயன்படுத்தப்படுகின்றன. எனவே, கடுமையாக பாதிக்கப்பட்ட ஒரு முடக்குவாத நோயாளியை  (அறிகுறி தோன்றிய சில மணி நேரங்களுக்குள்), உடனடியாக CT வசதிகளுடன் கூடிய அருகிலுள்ள முன்னணி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் எனவும் அப்போது அந்த நோயாளியை குணப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்குறிப்பிட்ட விதங்களில் நோயாளியின் தேவையை பொருத்து மருத்துவர்களினால் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் சமூக ஊடகங்களில் பகிரப்படும் இந்த தகவலானது இலங்கைக்கு பொருந்தாது எனவும் அவசர நிலைகளின் போது நோயாளிகளை இந்தியாவிற்கு அழைத்துச் செல்வது சாத்தியமற்ற விடயம் எனவும் வைத்தியர் பத்மா குணரத்ன குறிப்பிட்டார். 

முடக்குவாதம் ஏன் ஏற்படுகின்றது.

மூளைக்குச் செல்லும் ரத்தம் தடைப்பட்டு, மூளை இயங்குவது தடைபட்டால், மூளையின் செல் தசைகள் பாதிப்படையும். மூளையின் எந்தப் பகுதி பாதிக்கப் பட்டுள்ளதோ, அதைப் பொறுத்தே உடலின் பாகங்களில் குறைபாடுகள் ஏற்படும். உடலின் ஒரு பக்கம்,கை,கால், முகத்தின் ஒரு பகுதி எனப் பாதிப்பைப் பொறுத்து அந்தப் பகுதி செயல் இழக்கும். இதையே பக்கவாதம் என்கிறார்கள். Link

பக்கவாதத்தின் பல்வேறு வகைகள் என்ன?

இந்த நிலையின் தீவிரம் மற்றும் கால அளவைப் பொறுத்து, பக்கவாதம் பின்வரும் வகைகளாக வகைப்படுத்தப்படுகிறது:

இது பகுதியாக இருக்கலாம், இது தசைக் கட்டுப்பாடு மற்றும் இயக்கத்தின் ஒரு பகுதி இழப்பு அல்லது முழுமையான, தசைக் கட்டுப்பாடு மற்றும் இயக்கத்தின் மொத்த இழப்பைக் குறிக்கிறது. 

முழுமையான பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தசைகள் மீது எந்த விதமான கட்டுப்பாடும் இருக்காது.

நரம்பு மண்டலத்தில் எந்த சமிக்ஞைகளும் இன்றி தசை செயல்பாடு நிரந்தர இழக்கப்படுகிறது அல்லது தற்காலிகமாக தசை செயல்பாட்டின் இழப்பைக் குறிக்கிறது. தற்காலிக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் குறுகிய காலத்திற்கு தங்கள் தசை செயல்பாட்டை இழக்கிறார்கள், மேலும் கட்டுப்பாட்டை பகுதி அல்லது முழுமையாக மீட்டெடுக்கிறது.

ஸ்பாஸ்டிக் பக்கவாதத்தில் நோயாளியின் இயக்கம் பிடிப்புகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருக்கும் போது, ​​மந்தமான பக்கவாதம் தசைகள் மந்தமாகி, அளவு சுருங்கிவிடுவதால் வகைப்படுத்தப்படுகிறது. 

உடலின் எந்தப் பகுதி பாதிக்கப்படுகிறது என்பதன் அடிப்படையில் பக்கவாதத்தையும் வகைப்படுத்தலாம்.

  • மோனோபிலீஜியா ஒரு மூட்டு மட்டுமே பாதிக்கிறது.
  • டிப்ளேஜியா இரு கைகள், இரு கால்கள் அல்லது உங்கள் முகத்தின் இருபுறமும் இருபுறமும் ஒரே பகுதியைப் பாதிக்கிறது.
  • ஒரு பக்கம் செயலற்றுப் போக வைக்கும் வாத நோய் உங்கள் உடலின் ஒரு பக்கத்தை மட்டுமே பாதிக்கிறது மற்றும் பொதுவாக ஒரு காரணமாக ஏற்படுகிறது பக்கவாதம், இது உங்கள் மூளையின் ஒரு பக்கத்தை சேதப்படுத்துகிறது.
  • குவாட்ரிப்லீஜியா (அல்லது டெட்ராப்லீஜியா) நான்கு மூட்டுகளும் செயலிழக்கும் போது, ​​சில நேரங்களில் சில உறுப்புகளுடன் சேர்ந்து.
  • கீழங்கவாதம் இடுப்பிலிருந்து கீழே பக்கவாதம்.
  • பூட்டப்பட்ட நோய்க்குறி பக்கவாதம் மிகவும் அரிதான மற்றும் மிகவும் கடுமையான வடிவமாகும், அங்கு ஒரு நபர் கண் அசைவுகளைக் கட்டுப்படுத்தும் தசைகளைத் தவிர அனைத்து தசைகளின் கட்டுப்பாட்டையும் இழக்கிறார்

பக்கவாதத்தின் அறிகுறிகள் என்ன?

உடலில் உள்ள பகுதிகளின் தசைச் செயல்பாடு குறைவது முதன்மையான அறிகுறியாகும்.

ஆரம்பகால அறிகுறிகளில் நோயாளியின் கால்விரல்கள் மற்றும் விரல்களில் உணர்வின்மை அல்லது கூச்ச உணர்வு ஆகியவை அடங்கும். 

பிறப்பு குறைபாடு காரணமாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், முதுகெலும்பு காயம் அல்லது பக்கவாதம் அவர்களின் தசைகள் மீதான கட்டுப்பாட்டை உடனடியாக இழக்க நேரிடும். 

ஆனால் அடிப்படை மருத்துவ நிலை காரணமாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மெதுவாக தசை செயல்பாட்டை இழக்க நேரிடும். 

பக்கவாதத்திற்கான சிகிச்சைகள் என்ன?

சிகிச்சையானது செயல்பாட்டு நரம்பு இணைப்புகளைப் பாதுகாப்பதிலும், செயல்படாதவற்றை மீட்டெடுப்பதிலும் கவனம் செலுத்துகிறது.

IV திரவங்கள் மற்றும் கார்டிகோஸ்டீராய்டுகள் கடுமையான காயத்திற்குப் பிறகு முதுகெலும்பு வீக்கத்தைக் குறைக்கின்றன.

அறுவை சிகிச்சை சேதமடைந்த முதுகெலும்புகள் மற்றும் டிஸ்க்குகளை சரிசெய்கிறது, கிள்ளிய நரம்புகளை சிதைக்கிறது.

வடிகால் நோய்த்தொற்றுகள் நரம்பு எரிச்சலைக் குறைக்கிறது, கடத்துத்திறனை மேம்படுத்த அனுமதிக்கிறது.

பிளாஸ்மாபெரிசிஸ் தன்னுடல் தாக்க நிலைகளில் நரம்புகளைத் தாக்கும் ஆன்டிபாடிகளை வடிகட்டுகிறது.

உடல் மற்றும் தொழில்சார் சிகிச்சை தசை வலிமையை உருவாக்குகிறது மற்றும் நரம்பு பாதைகளை மீண்டும் பயிற்சி செய்கிறது.

இயக்கம் சாதனங்கள் இயக்கத்திற்கு உதவுகின்றன.

நிரந்தர பக்கவாத நிலையிலும் கூட தழுவல் அவசியம். உதவி தொழில்நுட்பம் போன்ற சாதனங்கள் மூலம் சுயாதீனமான செயல்பாட்டை அனுமதிக்கிறது.Link

பிறவியிலேயே காது கேளாத, வாய் பேச முடியாத குழந்தைகளை cochlear implant அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியுமா?

பிறந்ததிலிருந்தே காது கேளாதவர் கூட, cochlear implant மூலம் ஒலிகளைக் கேட்க முடியும். இது முதலில் சில அசௌகரியங்களை ஏற்படுத்தினாலும், காலப்போக்கில் அது மிகவும் இலகுவான ஒன்றாக மாறிவிடும்.

அது குறித்து விரிவாக அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும் Link

பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத குழந்தைகளுக்கு  cochlear implant அறுவை சிகிச்சைகளுக்கு மும்பாய் ரோட்டரி கிளப் உதவுகிறதா?

மும்பாய் ரோட்டரி கிளப் ஒரு சமூக சேவை கிளப் ஆகும், பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத குழந்தைகளுக்கு cochlear implant  அறுவை சிகிச்சைகளுக்கு உதவுவது தொடர்பில் அந்த கிளப் மூலம் ஏதேனும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளனவா என, முப்பாய் ரோட்டரி கிளப்பின் உத்தியோகபூர்வ இணையதளம் மற்றும் பேஸ்புக் பக்கதில் ஆராய்ந்த போது அவற்றில் அது குறித்த எந்த அறிக்கைகளும் வெளியிடப்பட்டிருக்கவில்லை. 

எனவே, மும்பாய் ரோட்டரி கிளப் எந்தவகையான சிகிச்சைகளுக்கு உதவிகளை வழங்குகின்றது என்பது தொடர்பில் நாம் ஆராய்ந்தோம். 

அதனடிப்படையில் குறித்த கிளப் மூலம் குழந்தைகளின் இருதய சத்திரசிகிச்சைகளுக்கே பெரும்பாலும் உதவிகள் வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்தது. Link | Link | Link 

மும்பாய் ரோட்டரி கிளப்பின் ஆதரவுடன் SRCC குழந்தைகள் மருத்துவமனையில் cochlear implant அறுவை சிகிச்சைகள் இலவசமாக செய்யப்படுகின்றன என்றும் குறித்த சமூக ஊடகப் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே நாம் அது தொடர்பிலும் ஆய்வினை மேற்கொண்டிருந்தோம்.

அதன்படி, கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனை, SRCC குழந்தைகள் மருத்துவமனை மற்றும் வாபியில் உள்ள ஹரியா ரோட்டரி மருத்துவமனை உள்ளிட்ட அதன் மூன்று பங்குதாரர் மருத்துவமனைகளில் 237 இதய அறுவை சிகிச்சைகளுக்கு மும்பாய் ரோட்டரி கிளப் நிதியுதவி வழங்கியுள்ளதாக ரோட்டரி கிளப்பின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Link 

இருப்பினும், SRCC குழந்தைகள் மருத்துவமனையில் இலவச cochlear implant  அறுவை சிகிச்சைகளுக்கு நிதியுதவி செய்வது குறித்து SRCC குழந்தைகள் மருத்துவமனையின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் எந்த தகவலும் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை.

அதன்படி, பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத குழந்தைகளுக்கு இலவசமாக  cochlear implant அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வதற்கு மும்பாய் ரோட்டரி கிளப் உதவுவதாக வெளியான தகவல் தவறானது என்பது தெளிவாகின்றது.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  | TikTok

Conclusion (முடிவு)

எனவே எமது ஆய்வின் அடிப்படையில், KEM மருத்துவமனையால் அனைத்து முடக்குவாத நோயாளிகளையும் குணப்படுத்த முடியாது என்பதுவும், முடக்குவாதம் ஏற்பட்டு முதல்  24 மணி மணித்தியாலங்களில் வைத்தியாலைக்கு கொண்டுவரப்படும் நோயாளிகளை மாத்திரம் குணப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்பதுவும் கண்டறியப்பட்டுள்ளது.

அதேபோல், பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத குழந்தைகளுக்கு cochlear implant  அறுவை சிகிச்சைக்கு மும்பாய் ரோட்டரி கிளப் மூலம் எந்த உதவிகளும் வழங்கப்படுவதில்லை என்பதுவும் உறுதியானது.

எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:முடக்குவாத நோயாளிகளை சில மணிநேரங்களுக்குள் குணப்படுத்த முடியுமா?

Fact Check By: suji shabeedharan 

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *