
இலங்கையினை சேர்ந்த பரிசோதனை இன்ஜீனியர்கள் இருவரினால் உருவாக்கப்பட்ட ”ராவணா 1” என்ற விண்கலமானது, கடந்த ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு வட்டப்பாதைக்கு அனுப்பப்ட்ட குறித்த விண்கலமானது கடந்த ஜுலை மாதம் 17 ஆம் திகதி புவியிலிருந்து 400 கிலோ மீற்றர் தூரத்தில் அமையப்பட்டது.
விண்வெளியிலிருந்து ராவணா 1 என்ற விண்கலத்தினால் எடுக்கப்பட்ட முதலாவது புகைப்படம் ஆகஸ்ட் 3 ஆம் திகதி வெளியானது.ராவணா 1 இனால் எடுக்கப்பட்டதாக கூறப்படும் இலங்கை புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
ராவணா 1 இலிருந்து எடுக்கப்பட்டதாக தெரிவித்து சமூகவலைத்தளங்களில் பகிரப்படும் சில புகைப்படங்கள் கீழே காணப்படுன்றன.

ලක් LucK Facebook Post Link | Archived Link |
කැඩපත – විනිවිද පේන , Nishan codetv ஆகிய பேஸ்புக் பக்கங்களின் ஊடாக பகிரப்பட்ட குறித்த புகைப்படத்தினை பலரும் பகிர்ந்துள்ளனர்.

Kedapatha Facebook Post | Archived Link |

Facebook Post | Archived Link |
Fact Check (உண்மை தன்மையினை ஆராய்வோம்)
ராவணா 1 விண்கலத்தினால் எடுக்கப்பட்டதாக கூறப்படுகின்ற இலங்கை புகைப்படமானது குறித்த விண்கலத்தினால் எடுக்கப்பட்டதா என்பது சந்தேகத்திற்கு இடமானது.
விண்வெளியிலிருந்து ”ராவணா 1” விண்கலத்தினால் எடுக்கப்பட்ட புகைப்படமானது 2019 ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி வெளியானது. ராவணா 1 விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள “BIRDS 3 Satellite Project” கட்டுமாணத்தின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தினால் விண்கலத்தின் ஊடாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியிடப்பட்டது. மேலும், இலங்கை ஆர்த்தர் சி கிளாக் நிறுவனத்தின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்திலும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இதிலிருந்து, தெரியவருவதாவது பகிரப்படும் புகைப்படங்களில் உள்ள இலங்கை புகைப்படமானது, ராவணா 1 விண்கலத்தினால் உண்மையில் எடுப்பட்டது.

ராவணா 1 விண்கலத்தில் பயணித்த Birds 3 செயற்திட்டத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திலும் குறித்த புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்து.

இருந்தபோதிலும், குறித்த புகைப்படத்துடன் வெளியாகியுள்ள மற்றைய புகைப்படங்கள் எவ்வாறு எடுக்கப்பட்டது என்று ஆராய google reverse image செய்யப்பட்டது. அதிலிருந்து தெரியவருவதாவது குறித்த புகைப்படங்கள் 2011 முதல் குறிப்பிட்ட இடைவேளையில் சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து (ISS) எடுக்கப்பட்ட புகைப்படங்களாகும்.
ராவணா 1 விண்கலமாகது கடந்த ஜுலை மாதம் 17 ஆம் திகதி சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து வட்டப்பாதைக்கு செலுத்தப்பட்டிருந்தால் குறித்த புகைப்படமானது ராவணா 1 என்ற விண்கலத்தினால் எடுத்திருக்க இயலாது.
மேலும்,ராவணா 1 விண்கலமானது பெட்டி போன்ற சிறிய வடிவிலான விண்கலமாகும், குறித்த பகிரப்படும் புகைப்படங்களில் காணப்படுவதை போன்று வடிவமைப்பினை கொண்டிருக்கவில்லை. குறித்த வடிவமைப்பினை சர்வதேச விண்வெளி மையத்தில் காணக்கிடைக்கின்றது.சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து இலங்கை குறித்து கிடைக்கப்பட்ட புகைப்படங்கள் பின்வருமாறு,


இது சர்வதேச விண்வெளி மையத்தினால் நேரலை மூலம் 2011 பெற்றுக்கொள்ளப்பட்ட புகைப்படமாகும்.
இலங்கை சமூகவலைத்தளத்தின் ஊடாக குறித்த புகைப்படங்கள் தொடர்ந்து பகிரப்பட்டு வருவதை இலகுவாக கண்டுகொள்ள முடியும்.

கடைசி முடிவு:
எங்கள் ஆய்வின் மூலம் தெரியவருவதாவது ராவணா 1 மூலம் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டு பகிரப்படும் இலங்கை புகைப்படங்களில் ஒன்று மட்டும் உண்மையானதோடு, மற்றவை சர்வதேச விண்வெளி மையத்தினால் எடுக்கப்பட்டவையாகும்.

Title:ராவணா 1 இனால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உண்மையானதா..?
Fact Check By: Nelson ManiResult: Mixture
