விண்வெளியில் இருந்து 1,28,000 அடி பயணித்து தரையிறங்கிய ஆஸ்திரேலிய விஞ்ஞானி என்றுபரவும் வீடியோ உண்மையா?

அறிவியல் உலகச் செய்திகள் சமூக ஊடகம்

‘‘விண்வெளியில் இருந்து 1,28,000 அடி பயணித்து தரையிறங்கிய ஆஸ்திரேலிய விஞ்ஞானி என்று பரவும் வீடியோ உண்மையா’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ ஆஸ்திரேலிய விஞ்ஞானி விண்வெளியில் இருந்து 1,28000 அடி குதித்து, பூமியை அடைந்தார். 1236 கிலோமீட்டர் பயணத்தை 4 நிமிடங்கள் மற்றும் 5 வினாடிகளில் முடித்தார். பூமி நகர்வதை தெளிவாகக் கண்டார். அற்புதமான காணொளி. நீங்களும் பாருங்கள்!’’, என்று எழுதப்பட்டுள்ளது. 

பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.  

Facebook Claim Link 

உண்மை அறிவோம்:

இந்த வீடியோவில் ஒரு காட்சியில் “Red Bull Stratos: Mission control: Rosewell, New Mexico” என்று எழுதப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தகவல் தேட தொடங்கினோம். 

அப்போது, 2012ம் ஆண்டு Red Bull சார்பாக, இத்தகைய நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக, விவரம் கிடைத்தது. இதனை அந்த நிறுவனமே யூடியுப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இதன்படி, ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த Felix Baumgartner என்ற skydiving நிபுணர் வானத்தில் இருந்து இவ்வாறு பாராசூட் உதவியுடன் கீழே குதித்து, சாதனை படைத்துள்ளதாக, தெரியவருகிறது. 

ஆனால், அவர் விண்வெளியில் இருந்து கீழே குதிக்கவில்லை. The Kármán line எனப்படும் வான்வெளி மண்டலத்திற்கு உள்பட்ட பகுதியில் இருந்தே கீழே குதித்துள்ளார். இது காற்று மண்டலத்தைச் சேர்ந்த பகுதியாகும். விண்வெளிக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. விண்வெளியில் இருந்து யாரும் இப்படி குதித்து, பூமியில் தரையிறங்க முடியாது. காரணம், காற்றின் இயக்கமே விண்வெளியில் கிடையாது. 

இதுதொடர்பாக, பிபிசி ஊடகம் வெளியிட்ட செய்தியையும் கீழே இணைத்துள்ளோம். 

மேலும், கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இந்த விவரம் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Guinness World Records link 

இதுவரை நாம் ஆய்வு மேற்கொண்டதன் அடிப்படையில் நமக்கு தெரியவரும் உண்மையின் விவரம்,

  1. குறிப்பிட்ட சாதனையை செய்தவர் ஆஸ்திரேலியா நபர் இல்லை; அவர் ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்தவர் ஆவார்.  
  1. அடுத்தப்படியாக, அவர் விண்வெளியில் இருந்து பூமியில் குதிக்கவில்லை. நம் பூமியின் காற்று மண்டலத்திற்கு உள்பட்ட பகுதியில் அமைந்துள்ள The Karman Line எனும் இடத்தில் இருந்தே கீழே குதித்துள்ளார். ஏனெனில், காற்று மண்டத்தில்தான் காற்றின் இயக்கம் இருக்கும். விண்வெளியில் காற்று இருக்காது. அங்கே இருந்து குதித்தால் மிதக்க மட்டுமே செய்வார்கள், தரையிறங்க முடியாது. 
  1. அவர் 1236 கிமீ தொலைவில் இருந்து குதித்து பூமியில் தரையிறங்கினார் என்ற தகவலும் தவறு. ஏனெனில், அவர் இந்த பயணத்தை தொடங்கிய Karman Line பூமியில் இருந்து 100 கிமீ தொலைவில்தான் உள்ளது. 

எனவே, நாம் ஆய்வு செய்த தகவலில் நம்பகத்தன்மை இல்லை என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:விண்வெளியில் இருந்து 1,28,000 அடி பயணித்து தரையிறங்கிய ஆஸ்திரேலிய விஞ்ஞானி என்று பரவும் வீடியோ உண்மையா?

Written By: Fact Crescendo Team 

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *