சந்திராயன் 3 ஏவப்பட்ட போது விமானத்தில் இருந்து பதிவு செய்த காட்சி என பரவும் வீடியோ உண்மையா?

சமூக ஊடகம் சர்வதேசம் | International

INTRO :

சந்திராயன் 3 ஏவப்பட்ட போது விமானத்தில் இருந்து பதிவு செய்த காட்சி என பரவும் வீடியோ என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

சமூகவலைத்தளங்களில் “டாக்காவிலிருந்து சென்னை வந்து கொண்டிருந்த விமானம்  வரும் நேரம் பார்த்து , ஏவபட்ட சந்திராயன் 3 ராக்கெட்,   உடனே விமானி தன்  பயணிகள் கண்டுகளிக்க அதை  அனைவரும் பார்க்கும் வண்ணம் அறிவுருத்துகிறார்,  மிக பரவசமான தருணம் அந்த விமானத்திலிருந்து….நீங்களும் பாருங்கள் 👌💐 “ என இம் மாதம் 17 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டு  (17.07.2023) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

(why this embed code?

இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

இது தொடர்பாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்ட போது, 

முதலில் குறித்த வீடியோவில் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்த போது, குறித்த வீடியோ கடந்த வருடம் எடுக்கப்பட்ட வீடியோ என எம்மால் கண்டறியப்பட்டது.

Chefpinkpr என்ற டிக்டொக் பயனாளி குறித்த வீடியோவை கடந்த வருடம் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி தனது டிக்டொக் கணக்கில் பதிவிட்டுள்ளமை காணக்கிடைத்தது. அதில் இது SpaceX Falcon9 விண்வெளியில் ஏவப்பட்ட போது எடுக்கப்பட்டதாக பதிவிட்டிருந்தமை காணக்கிடைத்து.

@chefpinkpr

While working my flight we witnessed this once in a lifetime phenomenon!! SpaceX Falcon9 #spacex #falcon9 #capecanaveral #nasa #launch #wow

♬ original sound – Nelito

மேலும் இதன் இரண்டாவது பாகத்தினையும் அதில் அவர் பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

@chefpinkpr

Replying to @user8679727262728 you can barely see it that’s why I didn’t post it earlier but I couldn’t get the angle right from the window 😂

♬ original sound – Nelito

தொடர்ந்து நாம் மேற்கொண்ட தேடலின் போது, Chefpinkpr அவரின் கையாளும் nelito_pink என்ற இன்ஸ்டெகிராம் கணக்கில் குறித்த வீடியோ கடந்த வருடம் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

நாம் இது குறித்து மேற்கொண்ட ஆய்வின் போது, நிலவை ஆராய இஸ்ரோ உருவாக்கிய சந்திரயான் 3 சமீபத்தில் ஶ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணுக்கு அனுப்பப்பட்டது.

அதற்கமைய ஶ்ரீஹரிகோட்டாவில் இரண்டு ராக்கெட் ஏவு தளங்கள் உள்ளன. இந்த வீடியோவிலும் இரண்டு ராக்கெட் ஏவு தளங்கள் உள்ளன. ஆனால், ஶ்ரீஹரிகோட்டாவில் இருப்பது போன்று மிகவும் நெருக்கமாக இல்லை. மேலும் அதன் அருகில் எந்த விமான ஓடுபாதையும் இல்லை. இவை எல்லாம் இந்த வீடியோ உண்மையானதாக இருக்காது என்று உறுதி செய்தன.

Sriharikota Google Maps

நாம் மேற்கொண்ட ஆய்வறிக்கையின் படி, சந்திராயன் 3 ஏவப்பட்ட போது விமானத்தில் இருந்து பதிவு செய்த காட்சி என பரவும் வீடியோ 2022 நவம்பர் மாதத்தில் எடுக்கப்பட்டதாக பதிவுகள் கிடைத்துள்ளன. 

இந்த வீடியோ 2023 பெப்ரவரில் வைரல் ஆகியுள்ளது. இது தொடர்பாக இந்திய ஊடகங்களிலும் செய்தி வெளியாகியுள்ளது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ ஶ்ரீஹரிகோட்டாவில் சந்திரயான் 3 திட்டத்தின் ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஏவப்பட்ட போது எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதி செய்யப்படுகிறது.

இது தொடர்பாக எமது இந்திய தமிழ் பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  | TikTok

Conclusion: முடிவு


எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:சந்திராயன் 3 ஏவப்பட்ட போது விமானத்தில் இருந்து பதிவு செய்த காட்சி என பரவும் வீடியோ உண்மையா?

Written By: S.G.Prabu 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *